கருணை கிழங்கு
அனைவர் வீட்டிலும் தினமும் சமையலுக்கு காய்கறிகள் பயன்படுத்துவார்கள். அதில் பெருபாலான மக்கள் கிழங்கு வகைகளை தான் அதிகமாக விருன்புகின்றனர். அத்தகைய கிழங்கு வகைகளில் கருணை கிழங்கும் ஒன்று. இந்த கருணை கிழங்கு சாப்பிட்டால் நாக்கு அரிக்கும் மற்றும் வேக வைப்பதற்கு கடினம் என்று இதை யாரும் அதிகமாக சமைக்கவோ அல்லது சாப்பிடுவோ மாட்டார்கள். ஆனால் இந்த கருணை கிழங்கில் நமக்கு தெரியாத நிறைய நன்மைகள் இருக்கின்றன. அத்தகைய நன்மைகள் என்ன என்பது பற்றி இன்றைய பதிவில் தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!
இதையும் படியுங்கள்⇒ பீர்க்கங்காய் நன்மைகள் பற்றி தெரிந்துகொள்ள இதை பாருங்கள்..!
kara karunai Benefits in Tamil:
இத்தகைய கிழங்கில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் இருக்கின்றன. இரத்தத்தில் இருக்கும் கொழுப்புகளை குறைக்கவும் அதிக இரத்த அழுத்தத்தை குறைக்கவும் கருணை கிழங்கு பயன்படுகிறது.
மூலம் நோய்:
மூலநோய்க்கு கருணை கிழங்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. மூலம் நோய் உள்ளவர்கள் தொடர்ந்து 48 நாட்கள் கருணை கிழங்கை ஏதோ ஒரு வகையில் சாப்பாட்டில் எடுத்துக்கொண்டால் விரைவில் மூலம் நோய் முழுவதுமாக குணமடைந்து விடும்.
உடல் சூட்டு மற்றும் உடல் எடை குறைவு ஆகிய இரண்டிற்கும் மருந்தாக பயன்படுகிறது.
உடம்பு வலி குறைய:
பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் மற்றும் உடம்பில் ஏற்படும் வலி ஆகிய பிரச்சனைக்கு கருணை கிழங்கு நன்மையை தருகிறது. அதுமட்டும் இல்லாமல் பெண்களின் ஹார்மோன் வளர்ச்சிக்கு கருணை கிழங்கு பயனளிக்கிறது.
கல்லீரல் பிரச்சனை நீங்க:
கருணை கிழங்கு கல்லீரலில் உள்ள நச்சுக்களை வெளிற்றி கல்லீரலை ஆரோக்கியமாக இயங்க வைக்க செய்கிறது. அதுபோல கருணை கிழங்கு எளிதில் செரிமானம் ஆகக்கூடிய காயாகும்.
சர்க்கரை நோய் குறைய:
சர்க்கரை நோய் உள்ளவர்கள் மற்ற கிழங்கு வகைகளை சாப்பிடுவதை விட கருணை கிழங்கு சாப்பிடுவது தான் அவர்களுடைய உடம்பிற்கு நல்லது. அதனால் சர்க்கரை நோயாளிகள் தினமும் கருணை கிழங்கை சாப்பிடலாம்.
முடக்கு வாதம் குணமாக:
முடக்கு வாதத்தினால் பாதிக்க பட்டவர்கள் வாரம் இரண்டு முறை கருணை கிழங்கை உணவுடன் சேர்த்து சாப்பிட்டால் விரைவில் முடக்கு வாதத்தில் இருந்து குணமடையலாம்.
அல்சர் குணமாக:
அல்சர் உள்ளவர்கள் கருணை கிழங்கை வேக வைத்து அதன் பிறகு அதனை நன்றாக மசித்து அதனுடன் 2 ஸ்பூன் தயிர் சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் அல்சர், மலச்சிக்கல் மற்றும் நெஞ்சு எரிச்சல் பிரச்சனை குணமாகும்.
இதையும் படியுங்கள்⇒ எந்தெந்த காய்கறிகள் சாப்பிட்டால் என்னென்ன நன்மை கிடைக்கும்..?
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |