கிட்னி செயலிழப்பு காரணம் | Kidney Failure Stages in Tamil
நண்பர்களே வணக்கம் இன்று ஆரோக்கியம் பதிவில் கிட்னி செயல் இழக்க காரணம் என்ன என்பதை பற்றி பார்க்க போகிறோம். பொதுவாக நம் உடலில் உருவாகும் நோய்களுக்கு நாம் தான் காரணமாக இருக்கிறோம். அது எப்படி நாம் காரணம் ஆகிறோம் என்று யோசிக்கிறீர்களா? ஆம் ஆம் காரணம் நாம் சாப்பிடும் அனைத்தும் நல்லதாக இருந்தாலும் அது அனைத்து வகையிலும் உங்களுக்கு நன்மையை அளிக்காது. எதோ ஒரு வகையில் பிரச்சனையை தரும். அந்த வகையில் இன்று கிட்னி செயலிழப்பு அறிகுறிகள் மற்றும் அதற்கான காரணம் என்ன என்பதை பற்றி பார்க்கப்போகிறோம்.
கிட்னி கல் வராமல் தடுக்க சாப்பிட வேண்டிய உணவுகள் |
கிட்னி செயலிழப்பு காரணம்:
- நம் உடலில் அதிகமாக செயல்படுவது கிட்னி தான் நம் உடலில் உள்ள கழிவுகளை அகற்றுவதும் கிட்னி தான். குறிப்பாக இரத்தத்தில் உள்ள நச்சு கழிவுகளை சிறுநீர் மூலமாக வெளியில் கொண்டு வருவது கிட்னி தான்.
- நம் உடலில் இரத்த அழுத்தம், ஹார்மோன் சுரப்பு, இரத்த உற்பத்தி, எலும்புகளின் உறுதி, நம் உடலின் உடல் வளர்ச்சிதை மாற்றத்துக்கும் இந்த கிட்னி தான் உதவுகிறது.
- முன்பெல்லாம் வயது முதிர்த்தவர்களுக்கு மட்டும் தான் கிட்னி செயலிழப்பு இருக்கும். இன்றைய காலகட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் காய்ச்சல் போல் கிட்னி கோளாறுகள் வருகிறது.
- கிட்னி செயலிழக்க முதல் காரணம் தண்ணீர் குடிக்காமல் இருப்பது. கால சூழ்நிலைக்கேற்றப தண்ணீரை குடிக்காமல் இருப்பது. கோடைகாலத்தில் தண்ணீர் தாகம் அதிகம் எடுக்கும் அப்போது தண்ணீர் குடிக்காமல் குளிர்பானங்களை அருந்துவது மிகவும் தவறு இதுவே கிட்னி செயலிழக்க முதல் காரணம்.
- அதிக நேரம் சிறுநீர் கழிக்காமல் தேக்கி வைக்க கூடாது. அது உங்களுக்கு மிகவும் பாதிப்பை தரும். இதன் காரணமாக அதிகளவு பாதிப்பு அடைவது கிட்னிதான்.
- தொடர்ந்து மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் கை வலி, கால் வலி, மூட்டு வலி என இத்தகைய வலிகளுக்கு பல விதமாக மாத்திரைகளை சாப்பிடுவது கிட்னி செயலிழக்க காரணம்.
- இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் அளவை கட்டுக்குள் வைக்கலாமல் இருந்தால் அது கிட்னி செயலிழப்புக்கு முக்கிய காரணமாக அமையும்.
- சிறுநீரக கோளாறுகள் ஏற்பட்டால் உடனே அதற்கான காரணத்தை அறிந்து தகுந்த சிகிச்சையை அளிக்காமல் இருந்தால் அதனால் முதலில் பாதிப்பு அடைவது கிட்னி தான்.
- அதிகம் உப்பு சேர்த்து சாப்பிடுவது. அதிகம் உப்பு உள்ள பொருட்களை சாப்பிட்டால் அது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். அது கிட்னி செயளிக்க வழிவகுக்கும்.
- சிறு வயதில் புகை பிடிப்பதால் இரத்த நாளங்கள் கடினமாகும், இதனால் இரத்த நாளங்கள் அளவு குறைந்து சிறுநீரகத்திற்கு செல்லக்கூடிய இரத்த ஓட்டம் குறையும். இதனால் கிட்னி செயலிழக்க காரணமாக இருக்கும்.
- இந்த காலத்தில் அதிக நேரம் தூங்காமல் போனை பயன்படுத்திகிறார்கள். சிறுவர்கள் அதிகம் நேரம் தூங்காமல் இருந்தால் சிறுநீரகத்தை அதிகம் பாதிப்பு அடையும்.
- தரமற்ற போலி மருந்துகளை உற்கொண்டாலும் கிட்னி பாதிப்பு அடையும். நாட்டில் தரமற்ற பொருட்கள் நிறைய வளம் வருகிறது அதனை உட்கொண்டால் கிட்னி செயலிழப்பு கோளாறுகளை ஏற்படுத்தும்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | உடல் ஆரோக்கிய குறிப்புகள் |