சிறுநீரக கல் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்
வணக்கம் நண்பர்களே இன்றைய பொதுநலம்.காம் பதிவில் சிறுநீரக கற்கள் வராமல் தடுக்க என்னென்ன உணவுகள் உண்ண வேண்டும் என்பதை பற்றி பார்க்கலாம். சிறுநீரக கல்லிற்க்கான முக்கிய காரணமாக கருதப்படுவது உடம்பில் தண்ணீர் சத்து குறைவது, அதிக வியர்வை வெளியேறுவது போன்ற காரணங்களால் சிறுநீரக கற்கள் உருவாகுகிறது. ஆக்ஸாலிக் அமிலம் மற்றும் கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுவதன் மூலம் கிட்னியில் கல் உருவாகிறது. இப்பொழுது நாம் கிட்னியில் கல் உருவாகாமல் இருப்பதற்கு தவிர்க்க வேண்டிய உணவுகள் பற்றி பார்க்கலாம்.
Kidney Stone Avoid Food List Tamil – கீரை:

- கீரையில் அதிக அளவு நன்மை இருந்தாலும் கிட்னியில் கற்களை உருவாக்க கூடிய ஆக்ஸாலிக் அமிலம் இருப்பதால் சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் கீரையை குறைந்த அளவு எடுத்துக்கொள்ள வேண்டும்.
Foods To Avoid For Kidney Stones in Tamil – பீட்ரூட்:

- சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் அல்லது கிட்னியில் கல் இருந்து அதனை குணப்படுத்தியவர்கள் பீட்ரூட்டை உணவில் சேர்க்க வேண்டாம். ஏனெனில் பீட்ரூட்டில் ஆக்சலேட் இருப்பதால் Kidney Stone உருவாகலாம்.
கிட்னி கல் தவிர்க்க வேண்டிய உணவுகள் – நட்ஸ் வகைகள்:

- அத்திப்பழம், முந்திரி, பாதாம், கடலை பருப்பு போன்ற அனைத்து வகை நட்ஸ்களிலும் ஆக்சலேட் அமிலம் இருப்பதால் இது போன்ற உணவுகளை தவிர்ப்பது நல்லது.
Kidney Stone Diet Food List in Tamil – காபீ:

- Black Tea, காபீ போன்ற காபின் கலந்த திரவங்களை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவை சிறுநீரகத்தில் கற்கள் வளருவதை ஊக்குவிப்பதற்கான வாய்ப்பு உள்ளது. ஃ
- சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் Dark Chocolates-ஐ சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். Instant Cofee, தேனீர் போன்றவைகளை சாப்பிடுவதை குறைத்து கொள்ள வேண்டும்.
கிட்னி கல் தவிர்க்க வேண்டிய உணவுகள் – மாமிச உணவு:

- கோழி கறி, மீன், ஆட்டு இறைச்சி போன்றவைகளை வாரத்தில் ஒரு நாட்கள் எடுத்து கொள்ளலாம். இறைச்சிகளில் ஆக்சலேட் அமிலம் இருப்பதால் அதிக அளவு மாமிச உணவுகள் உண்பதை தவிர்க்க வேண்டும்.
Kidney Stone Avoid Food List Tamil – காய்கறிகள்:

- தக்காளி, Cauliflower, முட்டைகோஸ் போன்ற காய்கறிகளில் அதிக அளவு ஆக்ஸாலிக் அமிலம் இருப்பதால் இந்த காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்வதை தவிர்ப்பது நல்லது.
- அதிக அளவு உப்பு, சர்க்கரை, புரதம், கால்சியம், ஆக்சலேட் அதிகம் உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும்.
சிறுநீரகக் கற்களை கரைக்கும் உணவுகள்:
- குறைந்த அளவு கால்சியம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் வாழைத்தண்டு போன்ற நீர்ச்சத்து மிகுந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும் வைட்டமின் சி நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

- பார்லி கஞ்சி, புடலங்காய், பழங்கள், ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ் அதிகம் உள்ள உணவு போன்றவற்றை சாப்பிட வேண்டும்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> |
உடல் ஆரோக்கிய குறிப்புகள் |