வணக்கம் நண்பர்களே..! இன்று ஆரோக்கியம் பதிவில் எலுமிச்சை புல் பற்றி பார்க்க போகிறோம். இந்த எலுமிச்சை புல் எல்லா வகையான மண்ணிலும் வளரக்கூடியது. இந்த புல் தமிழில் வாசனை புல், எலுமிச்சை புல் மற்றும் இஞ்சி புல் என்ற பெயர்களை கொண்டு அழைக்கப்படுகிறது. இந்த எலுமிச்சை புல் இந்தியா, பர்மா, இலங்கை, சீனா, இந்தோனேசியா, தாய்லாந்தை பிறப்பிடமாக கொண்டது. இந்த புல்லில் எராளமான மருத்துவ பயன்களும் உள்ளது. வாங்க இந்த புல்லை பற்றியும், அதன் அளவில்லாத நன்மைகளை பற்றியும் படித்து தெரிந்துகொள்வோம்.
இதில் எராளமான சத்துகள் நிறைந்துள்ளதால் இந்த புல்லை தினமும் டீ போட்டு குடித்து வரலாம். இதில் உள்ள வைட்டமின் எ, பி1, பி2, பி3, பி4, பி5 வைட்டமின் சி, போலேட், பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம் என இதில் சத்துக்கள் நிறைந்துள்ளதால் இதனை சாப்பிட்டு வர எந்த வித கோளாறுகளும் வராது.
செரிமான பிரச்சனை நீங்க:
எலுமிச்சை புல் டீயை தினமும் குடித்து வர செரிமான கோளாறுகள் வராது.
புற்றுநோய் குணமாக:
எலுமிச்சை புல்லில் CITRAL (சிற்றல்) என்ற அறிய வகை சத்துகள் உள்ளதால் உடலுக்குள் இருக்கும் புற்றுநோய் செல்களை வளர விடாமல் தடுக்கிறது .குறிப்பாக தோல் புற்றுநோய், மார்பக புற்றுநோய்யை வராமல் தடுக்கிறது.
கொலஸ்ட்ரால் குறைப்பது எப்படி:
எலுமிச்சை புல் டீயை தினமும் இரவு சாப்பிடுவதற்கு முன் குடித்து வர உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பை குறைத்து உடலை நன்றாக வைப்பதற்கு உதவுகிறது.