மூட்டு வலி தைலம் செய்வது எப்படி?
Joint Pain Oil Homemade:- பொதுவாக வயதானவர்களுக்கு மற்றும் மாடி படிகளில் அதிகம் ஏறி செல்பவர்களுக்கு மூட்டுகளில் அதிகளவு வலி ஏற்படும். இந்த வலியை குறைக்க வேண்டும் என்பதற்காக மெடிக்கல் ஷாப்பில் விற்கப்படும் மாத்திரைகளை வாங்கி அதிகளவு பயன்படுத்துவார்கள். இருப்பினும் மாத்திரைகளை அதிகளவு வாங்கி சாப்பிடுவதற்கு பதில் நமக்கு இயற்கையாகவே கிடைக்கும் சில பொருட்களை பயன்படுத்தி மூட்டு வலியை போக்கும் மூட்டு வலி தைலம் தயார் செய்வது எப்படி என்பதை பற்றி இந்த பதிவில் நாம் படித்தறியலாம் வாங்க…
7 நாளில் மூட்டு வலி நீங்க பாட்டி வைத்தியம்..! |
Joint Pain Oil Homemade..!
தேவைப்படும் பொருட்கள்:-
- வேப்ப எண்ணெய் – 250 கிராம்
- கிச்சிலி கிழங்கு – 50 கிராம்
மூட்டு வலி தைலம் தயாரிக்கும் முறை:-
வேப்ப எண்ணெய் ஒரு வலி நிவாரணியாக செயல்படுகிறது என்பதால் அந்த காலத்தில் நம் முன்னோர்கள் அதிகளவு வேப்ப எண்ணெயை தான் பயன்படுத்தி உள்ளனர்.
எனவே மூட்டு வலி குறைய அடுப்பில் ஒரு இரும்பு கடாய் வைத்து அவற்றில் 250 கிராம் வேப்ப எண்ணெய்யை ஊற்றி மிதமான சூட்டில் சூடேற்ற வேண்டும்.
எண்ணெய் நன்றாக சூடேறியதும் 50 கிராம் கிச்சிலி கிழங்கை நன்றாக இடித்து வேப்ப எண்ணெயில் சேர்த்து கிழங்கு நன்கு சிவந்து பொன்னிறம் ஆகும் வரை நன்றாக பொரிக்க வேண்டும்.
கிழங்கு நன்கு சிவந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி ஆறவைத்து வடிக்கட்டி காற்று புகாத பாட்டிலில் ஊற்றி பத்திரமாக வைத்து கொள்ளுங்கள். இப்பொழுது மூட்டு வலி தைலம் தயார்.
பயன்படுத்தும் முறை:-
மூட்டு வலியால் அவதிப்படுபவர்கள் தினமும் வலி இருக்கும் இடத்தில் இந்த தைலத்தை தடவலாம். மூட்டு வலி இருப்பவர்கள் தினமும் இந்த தைலத்தை உள்ளங்கையில் எடுத்து மூட்டுகளில் தேய்த்து இலேசாக மசாஜ் செய்ய வேண்டும்.
மூட்டுவலி பிரச்சனை இருப்பவர்கள் கால்களில் கீழிருந்து மேல்நோக்கி இந்த தைலத்தை தடவ வேண்டும். தினமும் காலை மற்றும் இரவு நேரங்களில் இதை தடவி வந்தால் வலி குறைவதை நன்றாகவே உணரமுடியும்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | patti vaithiyam tamil tips |