நல்லெண்ணெய் பயன்கள் | Gingelly Oil Benefits in Tamil

நல்லெண்ணெய் நன்மைகள் | Nallennai Benefits in Tamil | நல்லெண்ணெய் வியக்க வைக்கும் மருத்துவ பயன்கள்

Nallennai Oil Benefits in Tamil: வணக்கம் நண்பர்களே..! உணவில் அதிகமாக நல்லெண்ணெய் சேர்த்து சமைப்பதால் என்னென்ன நன்மைகள் நமக்கு கிடைக்கிறது என்று இந்த பதிவில் படித்து தெரிந்துகொள்ளுவோம்..! எள் என்பது உலகில் வெப்ப மண்டலம் அதிகம் உள்ள நாடுகளில் விளைக்கப்படும் ஒரு தானிய வகையை சேர்ந்ததாகும். எள்ளில் இருந்து எடுக்கப்படுகின்றன எண்ணெய் தான் நமக்கு உணவுகளில் சமைப்பதற்கு நல்லெண்ணெயாக கிடைக்கிறது. பல மருத்துவ குணங்கள் நிறைந்துள்ள நல்லெண்ணெய்யினை சமையலில் உபயோகிப்பதால் உடலில் என்னென்ன நன்மைகள் நடக்கிறது என்று விரிவாக படித்து தெரிந்துக்கொள்ளலாம்..!

நல்லெண்ணெய் ஆயில் புல்லிங்

ஆர்த்ரைடிஸ் நோயை குணப்படுத்தும் நல்லெண்ணெய்:

Nallennai Oil Benefits in Tamilnallennai benefits tamil: உடலில் சத்துக்கள் குறைந்து காணப்படும்போது எலும்பு மற்றும் மூட்டு பகுதிகளில் வலி மற்றும் வீக்கங்கள் அதிகமாக உண்டாகிறது. எலும்பு சம்பந்தமான பிரச்சனை வராமல் தடுப்பதற்கு உடலில் தேவையான அளவு செம்பு சத்து மிகவும் முக்கியம். நல்லெண்ணையில் அதிகமாக செம்பு சத்துக்கள் நிறைந்துள்ளது.

நல்லெண்ணையில் அதிகமாக சமைத்த உணவினை சாப்பிடுபவர்களுக்கு இரத்தத்தில் செம்பு சத்தானது கலந்து எலும்பு மற்றும் எலும்பு சார்ந்த தசைகளுக்கு நல்லெண்ணெய்யானது வலிமையை கொடுக்கும். முக்கியமாக ஆர்த்ரைடிஸ் எனும் மூட்டுவலி நோயால் அவதிப்படுபவர்கள் நல்லெண்ணெய்யினால் சமைக்கப்பட்ட உணவினை அடிக்கடி உணவில் சேர்த்து கொண்டால் மூட்டு வலி மற்றும் மூட்டு பகுதிகளில் வீக்கம் ஏற்படுவதும் சரியாகிவிடும்.

பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் Telegram" சேனல Join" பண்ணுங்க: Pothunalam Telegram

தோல் சம்பந்த நோய்கள் சரியாக நல்லெண்ணெய் :

Nallennai Oil Benefits in Tamilnallennai oil benefits in tamil: உடலில் தோல் பகுதியில் ஏற்படும் அரிப்பு, சிரங்கு போன்ற பல தோல் பிரச்சனைகளுக்கு சிறந்த மருந்தாக விளங்கி வருகிறது நல்லெண்ணெய். நல்லெண்ணெயில் அதிகமாக ஜிங்க் என்று சொல்லக்கூடிய சத்து அதிகமாக நிறைந்துள்ளதால் தோல் பகுதியில் ஜவ்வு தன்மையை நீடிக்க செய்து சாஃப்டான தோலை உருவாக்கிறது. வெயில் காலங்களில் சிலருக்கு தோல் பகுதியானது வறட்சி அடைந்தது போன்று இருக்கும். வறட்சி உள்ள இடங்களில் நல்லெண்ணையினை தடவி வர தோலிற்கு பாதிப்பு எதுவும் ஏற்படாது.

இதயம் நலத்துடன் இருக்க நல்லெண்ணெய் :

Nallennai Oil Benefits in Tamilநல்லெண்ணெய் பயன்கள்: நம்முடைய உயிர் நாடியே நமது இதயம் தான். இதயம் எப்போதும் ஆரோக்கியமாக எந்தப் பாதிப்பும் அடையாமல் இருக்க மிகச்சிறந்த உணவு பொருளாக கருதப்படுகிறது நல்லெண்ணெய். நல்லெண்ணையில் செசமோல் மற்றும் செசமின உட்பட பல கரைக்கப்படாத கொழுப்பு அமிலம் அதிகமாக உள்ளன. நல்லெண்ணையில் சமைக்கப்பட்ட உணவினை அதிகமாக சாப்பிடுவதால் இதயம் மற்றும் இதயம் சம்பந்தப்பட்ட தசை, நரம்பு பகுதிகளில் தேவையில்லாத கொழுப்புகள் தங்குவதை தடுத்து நிறுத்தி இதயத்தினை சீராக வைத்திருக்கும்.

தேங்காய் எண்ணெய் அழகு குறிப்புகள்..!

உடல் மற்றும் மனம் உற்சாகமாக இருப்பதற்கு:

 nallennai benefits in tamil

நம்முடைய உடல் அனைத்து பகுதியிலும் இரத்த ஓட்டமானது சரியாக சென்றால் மட்டுமே உடலும், மனமும் எப்போதும் சுறுசுறுப்புடன் புத்துணர்ச்சியாக காட்சியளிக்கும். நல்லெண்ணையில் அதிகமாக செம்பு மற்றும் ஜிங்க் சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது. நல்லெண்ணையில் (nallennai payangal tamil) இருக்கக்கூடியச் செம்பு சத்தானது உடலில் இரத்த அணுக்கள் அதிகமாக உருவாகுவதற்கு உதவியாக உள்ளது. செம்புப் சத்தினால் உடலில் ரத்த ஓட்டம் சீராக அமைந்து, உடலில் இருக்கின்ற அனைத்து பகுதிகளுக்கும் ரத்தத்தின் மூலம் பிராண வாயு முழுமையாக கொண்டு செல்லப்படுகிறது. இதன் காரணமாக நமது உடலானது எப்போதும் சோர்வு இல்லாமல் சுறுசுறுப்பாகவும், புத்துணர்ச்சியோடும் இருக்கும்.

புற்றுநோயை தடுக்க நல்லெண்ணெய் :

 nallennai benefits in tamilஉடலில் எந்த வகை புற்றுநோய் வந்தாலும் அதனை குணப்படுத்தும் சக்தி நல்லெண்ணைக்கு உள்ளது. நல்லெண்ணையில் போலேட் எனும் சொல்லக்கூடிய கூட்டு வேதிப்பொருளானது அதிகமாக உள்ளது. இது மட்டும் இல்லாமல் நல்லெண்ணையில் மெக்னிசியம் மற்றும் கால்சியம் சத்துக்கள் எண்ண முடியாத அளவிற்கு அடங்கியுள்ளது. போலேட் எனும் கூட்டு வேதிப்பொருள் மற்றும் மெக்னிசியம் சத்துக்கள் குடல் மற்றும் ஈரல் பகுதியில் ஏற்படக்கூடிய புற்றுநோயினை தடுப்பதற்கு பெரிதும் உதவியளிக்கிறது. நல்லெண்ணையில் கால்சியம் சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளதால் வயிறு மற்றும் வயிற்று சம்பந்த பகுதிகளில் புற்றுநோய் வராமல் தடுத்து முழுமையாக புற்றுநோயிலிருந்து நம்மை பாதுகாத்து விடுகிறது.

மேலும் நல்லெண்ணெய் என்னென்ன நோய்களை குணப்படுத்தும் என்பதன் தொடர்ச்சியை அடுத்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்..! நன்றி வணக்கம்..!

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>Natural health tips in tamil