நால்பாமராதி தைலம் பயன்கள் | Nalpamaradi Thailam Uses in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில், நால்பாமராதி தைலம் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றி பின்வருமாறு விவரித்துள்ளோம். நால்பாமராதி தைலம் பற்றி நாம் அனைவருமே அறிந்து இருப்போம். அனால், பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றி நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால், அதனை தெரிந்துகொள்ளும் விதமாக இப்பதிவு அமையும்.
உடல் வலி, கை கால் வலி, குறிப்பாக தலை வலி என்றாலே நாம் முதலில் தேடுவது தைலத்தை தான். தைலங்களில் பல வகையான தைலங்கள் இருக்கிறது. தைலங்கள் அனைத்தும் மூலிகைகளால் ஆனது. அதனால் உடலுக்கு எந்த பக்க விளைவினையும் ஏற்படுத்தாது. நாம் இன்றைய ஆரோக்கியம் பதிவில் நால்பாமராதி தைலம் பற்றிய நன்மைகளை படித்து தெரிந்துக்கொள்ளலாம்..
மூட்டு வலி தைலம் செய்வது எப்படி? |
நல்பமராதி தைலத்தின் சிறப்பு:
நால்பாமராதி தைலமானது ஃபிகஸ் மரத்தின் தண்டு பட்டைகளில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு ஆயுர்வேத மூலிகை தைலமாகும்.இந்த தைலம் தோல் சம்மந்தமான அனைத்து நோய்களையும், புண்கள் மற்றும் நரம்பு கோளாறுகளை குணப்படுத்த இந்த மரத்தின் மரப்பட்டைகள் பயன்படுகிறது.
நல்பமராதி தைலத்தில் உள்ள வைட்டமின் சி, அஸ்கார்பிக் அமிலம், சாலிசிலிக் அமிலம் சரும பாதுகாப்பை அளிக்கிறது. இதனை பயன்படுத்தினால் சருமத்தில் உள்ள அணைத்து விதமான பிரச்சனைகளும் நீங்குகிறது. ஆனால், இதன் பலனை உடனே பெற முடியாது. தொடர்ச்சியாக பயன்படுத்தினால் மட்டுமே இதன் பலனை பெற முடியும்.
நல்பமராதி தைலம் பயன்கள் | Nalpamaradi Thailam Uses:
- நால்பாமராதி தைலம் என்பது முக மற்றும் உடலில் பயன்படுத்தக்கூடிய சக்தி வாய்ந்த மருந்தாக விளங்குகிறது.
- நால்பாமராதி தைலத்தை சருமத்தில் பயன்படுத்தும் போது சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்கி சருமத்தை பொலிவாக வைத்திருக்கும்.
- சருமத்தில் உள்ள வறட்சியை நீக்கி, சருமத்தை நீரோட்டமாக வைத்து கொள்கிறது. முக்கியமாக சூரிய கதிர்வீச்சால் முகத்தில் ஏற்படும் டேனை சரிசெய்கிறது. இதனை தொடர்ச்சியாக பயன்படுத்தினால் மட்டுமே நல்ல பலன் கிடைக்கும்.
- முகத்தில் உள்ள சுருக்கங்களை அகற்றி முகத்தை இளமையாக வைத்திருக்க உதவுகிறது.
- திருமணம் செய்ய போகும் பெண்கள் திருமணத்திற்கு ஒரு மாதம் முன்பில் இருந்து முகத்தில் இந்த தைலத்தை பயன்படுத்தி வந்தால் சரும அழகு அதிகரித்து காணப்படும்.
- தோல் சமபந்தமான நோய்கள், ஸ்கெபிஸ், எக்ஸ்ஸிமா, டெர்மடிஸ், ஒவ்வாமை போன்ற பிரச்சனைகளுக்கு இந்த தைலத்தை தடவி வர நல்ல நிவாரணம் கிடைக்கும்.
- குழந்தைகளுக்கு மசாஜ் செய்யவும் இந்த தைலம் பயனுள்ளதாக இருக்கிறது.
- இந்த தைலத்தில் சந்தனம் மற்றும் மஞ்சள் இருப்பதால் சரும அழகை மேம்படுத்துகிறது.
- சரும அழகினை கெடுப்பதே முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகள் தான். முகத்தில் ஏற்படும் பருக்கள் கரும்புள்ளிகள் நீங்க இந்த தைலத்தை தடவி வர கரும்புள்ளிகள் மறைந்து முகம் பொலிவை கொடுக்கும்.
- முகத்தில் எப்போதும் எண்ணெய் பசை வழிந்துகொண்டே இருப்பவர்கள் இந்த தைலத்தை தடவி வர நல்ல மாற்றம் கிடைக்கும்.
- முடி உதிர்வு பிரச்சனை சரியாக இந்த தைலத்தை 100 மிலி மற்றும் 5 கிராம் மஞ்சள் பொடியுடன் சேர்த்து தலையில் தடவி வரலாம்.
- இந்த தைலத்தை தோளில் ஏற்படும் தழும்புகளை மறைப்பதற்கும், தீ காயங்களுக்கு, தோல் அலர்ஜி போன்ற பிரச்சனைக்கு பயன்படுத்தலாம் என்று ஹோமியோபதி மருத்துவர்கள் பரிந்துரை செய்கிறார்கள்.
ரோஸ்மேரி எண்ணெய் பயன்கள் |
பயன்படுத்தும் முறை:
- கண் பகுதிக்கு கீழ் கரும்புள்ளி இருப்பவர்கள் ஆள் காட்டி விரலின் மேல் நுனியில் 2 சொட்டு விட்டு கரும்புள்ளி உள்ள இடத்தில் தேய்த்து விடவும். அதன்பின் 30 நிமிடங்கள் கழித்து தண்ணீரில் கழுவி விடவும். இதை ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு முறை மட்டுமே செய்ய வேண்டும்.
- எண்ணெய் பசை இருப்பவர்கள் 5 சொட்டு இந்த தைலத்தை தடவி 30 நிமிடம் மட்டுமே வைத்திருக்க வேண்டும். அதன் பிறகு வாஷ் செய்துவிடவும்.
- முடி உதிர்வு பிரச்சனை இருக்கும் பெண்கள் இந்த தைலத்தை 100மிலி எடுத்து அதனுடன் 5 கிராம் மஞ்சள் பொடியுடன் கலந்து தலையில் தேய்த்து நன்கு மசாஜ் செய்து பின் 30 நிமிடத்திற்கு பின்பு மிதமான சூடான நீரில் குளித்து விடவும்.
நல்பமராதி தைலம் பக்க விளைவுகள் | Nalpamaradi Thailam Side Effects:
- நல்பமராதி தைலம் தேங்காய் எண்ணையில் இருந்து தயார் செய்வதால் சிலருக்கு சளி பிடிப்பதற்கு வாய்ப்புள்ளது.
- தங்களுக்கு இயற்கையாகவே முகத்தில் எண்ணெய் பசை இருப்பவர்கள் இந்த தைலத்தை அதிகமாக பயன்படுத்தும் போது எண்ணெய் சருமம் அதிகரித்து காணப்படும்.
- குழந்தைகளுக்கு பயன்படுத்தும் போது மருத்துவரிடம் ஆலோசனை கேட்ட பிறகு உபயோகிக்கலாம்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Natural health tips in tamil |