Noodles Side Effects in Tamil
வணக்கம் நண்பர்களே..! குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் உணவுகளில் நூடுல்ஸ்ம் முக்கியாக பங்கு வகிக்கிறது. நூடுல்ஸ் சாப்பிடும் போது அனைவருடைய கண்ணை கவரும் நிறத்திலும் மற்றும் சுவையும் அதிகமாக இருப்பதால் அதனை பெரும்பாலான மக்கள் விரும்பி சாப்பிடுகின்றனர். அதுமட்டும் இல்லாமல் சமைப்பதற்கு எளிதாக இருப்பதால் இதை உடனே வாங்கி சமைத்து விடுகின்றனர். அப்படி நாம் சாப்பிடும் நூடுல்ஸில் நமக்கு தெரியாத தீமைகளும் உள்ளன. அந்த தீமைகள் என்ன மாதிரியான பிரச்சனையை நமது உடலுக்கு ஏற்படுத்துகிறது என்று இன்றைய ஆரோக்கிய பதிவில் தெரிந்துகொள்ளலாம் வாங்க..!
இதையும் படியுங்கள்⇒ தினமும் பால் குடிப்பவர்களுக்கு முக்கியமான தகவல்..! கண்டிப்பா தெரிந்துகொள்ளுங்கள்..!
நூடுல்ஸ் தீமைகள்:
நூடுல்ஸில் நார்ச்சத்துக்களும், புரோட்டீன்களும் மிக குறைவாக இருப்பதால் இது உடல் நலத்திற்கு தீங்கு விளைவைக்க கூடியதாகும்.
இது பதப்படுத்தப்பட்ட உணவாக இருப்பதால் அதனை நாம் சாப்பிடும் போது உடல் எடை அதிகரிக்க செய்யும்.
நூடல்ஸை தொடர்ந்து நாம் சாப்பிட்டால் உடலில் குமட்டல் மற்றும் தலைவலி போன்ற பிரச்சனைகள் வரும்.
இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகரிக்க செய்து சர்க்கரை நோய் வருவதற்கு இந்த நூடுல்ஸ் காரணமாக இருக்கிறது. ஏனென்றால் நூடுல்ஸில் மைதா மாவும் கலந்து இருப்பதால் அதனை அதிகமாக சாப்பிட கூடாது.
இத்தகைய நூடுல்ஸை அளவுக்கு அதிகமாக சாப்பிடும் போது ஒரு கட்டத்திற்கு மேல் உடலில் மலசிக்கல் பிரச்சனையை வர செய்யும். மேலும் அது மலக்குடல் புற்றுநோயக மாறும் வாய்ப்பும் இருக்கிறது.
இதயம் சமந்தமான பிரச்சனைகள் வருவதற்கும் இந்த நூடுல்ஸ் ஒரு காரணமாக இருக்கிறது. அதனால் நூடுல்ஸை அளவுக்கு அதிகமாக சாப்பிடாமல் இருப்பது நல்லது.
கர்ப்பிணி பெண்கள் நூடுல்ஸை சாப்பிட கூடாது. ஏனென்றால் அது வயிற்றில் உள்ள குழந்தையின் ஆரோக்கியத்திற்கு நல்லது கிடையாது.
நூடுல்ஸ் சாப்பிடும் போது ஒட்டாமல் தனி தனியாக பிரிந்து இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு சில நூடுல்ஸில் பாராஃபின் மெழுகு என்ற திடப்பொருள் கலந்து செய்யப்படுகின்றன.
இதையும் படியுங்கள்⇒ ஓட்ஸ் சாப்பிடுவதால் ஏற்படும் பக்கவிளைவுகள் பற்றி உங்களுக்கு தெரியுமா…?
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | உடல் ஆரோக்கிய குறிப்புகள் |
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>