தேனில் ஊற வைத்த வெங்காயம்
ஹலோ நண்பர்களே வணக்கம்..! இன்றைய பதிவு உங்களுக்கு உதவிகரமான பதிவாக இருக்கும். பொதுவாக அனைவரும் காய்கறி கடைகளுக்கு சென்றால் முக்கியமாக வாங்குவது வெங்காயம் தக்காளி தான். அனைவருக்கும் தெரியும் வெங்காயம் எவ்வளவு நன்மையை அளிக்கிறது என்று நான் சொல்வது பொதுவாக வெங்காயம் மட்டுமே. அதிலும் சின்ன வெங்காயம் என்பது அனைவருக்கும் பிடிக்கும் அதில் அவ்வளவு நன்மை இருக்கிறது. அம்மா அப்பா அனைவருமே மோர் சாதத்திற்கு ஊறித்து சேர்த்துக்கொள்வார்கள். வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவது அவ்வளவு நன்மைகளை தருகிறது. ஆனால் சின்ன வெங்காயத்தை தேனில் சேர்த்து சாப்பிடலாம் இது யாருக்கு தெரியும். இப்படி சாப்பிடுவதால் மிகவும் நன்மை என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ளலாம் வாங்க..!
சின்ன வெங்காயம் நன்மைகள்:
வெங்காயத்தில் அதிகளவு சல்பர் சத்துக்கள் உள்ளது. இதனை தினமும் உணவில் சேர்த்துக்கொள்வது உடலுக்கு வலிமை தரும்.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க என்ன சாப்பிடலாம்:
சின்ன வெங்காயமானது உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. நம் உடலில் இருக்கிற நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தி உடல் வலிமைபெற வழிவகுக்கிறது. அதுபோல் தினமும் தேனில் ஊறவைத்த வெங்காயம் சாப்பிடுவதால் மூச்சுப் பிரச்சினைகள், ஆஸ்துமா, சளித் தொல்லை நுரையீரல் போன்ற பல பிரச்சனைக்கு தீர்வு கொடுக்கிறது.
நெஞ்சு சளி வெளியேற:
உடலில் சின்ன குழந்தைகளுக்கு நெஞ்சு சளி இருக்கும். வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்கு இந்த நெஞ்சு சளி இருக்கும் அப்போது ஒரு சின்ன வெங்காயத்தை சாப்பிடலாம். சாப்பிட்டப்பிறகு ஒரு டம்ளர் வெந்நீர் குடிக்கலாம். அதுபோல் வெங்காய சாறை சம அளவு தேன் கலந்து சாப்பிட்டு வர நெஞ்சு சளி குணமாகும்.
அதுபோல் இரவு நேரங்களில் தேனில் ஊறவைத்த சின்ன வெங்காயம் சாப்பிட்டால் காலையில் மலத்தின் மூலம் சளி வெளியேறும்.
ரத்தம் சுத்தம் செய்வது எப்படி:
சின்ன வெங்காயம் சாப்பிடுவதால் உடல் பலம் பெறும் என்பது தெரியும். ஆனால் தினமும் காலையில் தேனில் ஊறவைத்த சின்ன வெங்காயம் சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும். இரத்தத்தில் கலந்துள்ள கெட்ட கொழுப்புகளை வெளியேற்ற உதவியாக இருக்கும்.
பச்சையாக வெந்தயம் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்
தொப்பை குறைய என்ன செய்வது:
தினமும் காலையில் தேனில் ஊறவைத்த வெங்காயத்தை சாப்பிட்டுவர உடல் எடை குறையும், இடுப்பை சுற்றியுள்ள சதை குறையும். அதேபோல் அடிவயிற்றில் உள்ள கெட்ட கொழுப்புகள் குறைந்து உடல் எடை குறையும்.
செரிமான சக்தியை அதிகரிக்க:
தேன் மற்றும் சின்ன வெங்காயம் இரண்டிலும் ஆன்டி – ஆக்சிடண்ட்டுகள் அதிகம் உள்ளது. அதனால் இது நாம் என்ன சாப்பிட்டாலும் அதில் உள்ள சத்துக்கள் சேர்ந்து உடலில் செரிமான சக்தியை அதிகரிக்கும்.
அதுபோல் இதனை தினமும் சாப்பிடுவதால் தூக்கம் வராமல் இருப்பவர்களுக்கு இது ஒரு நல்ல மருந்தாக விளங்குகிறது.
தேன் கலந்த சின்ன வெங்காயம் செய்வது எப்படி?
ஒரு பெரிய கண்ணாடி பாத்திரத்தை எடுத்து அதில் சின்ன வெங்காயத்தை லேசாக கீறி அதில் போட்டுக்கொள்ளவும் பின் அதில் தேனை ஊற்றி ஊறவிடவும். இரண்டு நாட்கள் கை படாமல் ஊறவிட்ட பிறகு நீங்கள் தினமும் சாப்பிடலாம்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |