வறட்டு இருமல் வராமல் தடுப்பதற்கு பச்சை திராட்சையா.!

Advertisement

பச்சை திராட்சை நன்மைகள் | Thiratchai Benefits in Tamil

வணக்கம் நண்பர்களே.! நம்ம ஊரில் கிடைக்க கூடிய பழங்களில் திராட்சையும் ஒன்றாகும். இந்த பழம் குழந்தைகள் முதல் பெரியவர் வரை விரும்பி சாப்பிடுவார்கள். பச்சை திராட்சை சாப்பிடுவதற்கு ருசியாக இருக்கும். பச்சை திராட்சையில் ஊட்டச்சத்துக்கள், ஆன்டி -ஆக்ஸிடன்ட்டுகள், கனிம சத்துக்கள் நிறைந்துள்ளது . திராட்சை சாப்பிடுவதனால் நம் உடலில் சில நோய்களிலிருந்து விடுபடலாம். அது என்னனென்ன நோய்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

இதையும் படியுங்கள் ⇒ ஆரஞ்சு பழத்தின் நன்மைகள்

ஆஸ்துமா குணமாக:

ஆஸ்துமா குணமாக

திராட்சை நுரையீரலில் உள்ள ஈரப்பசையை அதிகரித்து வறட்டு இருமல் வராமல் தடுக்கும். சுவாசிப்பதற்கு சிரமப்படுவர்கள் பச்சை திராட்சையை தினமும் சாப்பிடலாம். மேலும் ஆஸ்துமா பிரச்சனையிலுருந்து விடுபட பெரிதும் வழி வகுக்கிறது .

செரிமான பிரச்சனைக்கு தீர்வு:

செரிமான பிரச்சினைக்கு தீர்வு

பச்சை திராட்சையை தினமும் சாப்பிட்டு வந்தால் வயிற்று எரிச்சல் மற்றும் செரிமான பிரச்சனை வராமல் இருக்க உதவுகிறது .

வைட்டமின் ஏ உள்ள பழம்:
வைட்டமின் ஏ உள்ள பழம்

திராட்சையில் வைட்டமின் ஏ அதிகம் நிறைந்துள்ளது. வைட்டமின் ஏ நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நம் உடலில் ஏற்படும் கிருமிகளிலிருந்து எதிர்த்து போராட உதவுகிறது. ஆதலால் திராட்சையை தினமும் சாப்பிடுவது நல்லது.

கொலஸ்ட்ரால் குறைப்பது எப்படி.?

கொலஸ்ட்ரால் குறைப்பது எப்படி

இன்றைய நவீன உலகில் எல்லாருக்கும் கொலஸ்ட்ரால் வருகிறது. அதை சரி செய்ய திராட்சை பழம் வழி செய்கிறது. அது எப்படியென்றால் திராட்சையில் உள்ள Pterostilbene என்னும் உட்பொருள் கெட்ட கொலஸ்ட்ராலை கரைத்து கொலஸ்ட்ராலை சீராக வைக்க உதவுகிறது.

எலும்பு வலிமை பெற:

எலும்பு வலிமை பெற

திராட்சையில் காப்பர், இரும்புச்சத்து, மாங்கனீசு போன்ற சத்துக்கள் உள்ளது. அதனால் திராட்சையை சாப்பிடுவதனால் எலும்புகள் வலிமை பெறும். வயதான காலத்தில் வரும் எலும்பு தேய்மானத்திலுருந்து விடுபடலாம்.

சருமம் பளபளப்பாக:

சருமம் பளபளப்பாக

பொதுவாக திராட்சையில்  நீர்ச்சத்து உள்ளது. அதனால் தினமும் 4 திராட்சையின் சாற்றை முகத்தில் தடவி 10 நிமிடங்கள் கழித்து கழுவினால் முகம் பளபளப்பாக மாறிவிடும். திராட்சையுடன் புதினா இலை, கஸ்தூரி மஞ்சள் தூள், எலும்பிச்சை  சாறு இவற்றை கலந்து கொள்ளவும்.  பின் முகத்தில் அப்ளை செய்யவும். 10 நிமிடம்  வைத்திருந்தால் பரு நீங்கிவிடும்.

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்

 

Advertisement