தினமும் பன்னீர் சாப்பிடுபவராக இருந்தால் இந்த பதிவு உங்களுக்கு தான்

paneer payangal in tamil

Paneer Payangal in Tamil

பன்னீர் பலருக்கும் பிடித்தமான உணவாக உள்ளது. பன்னீரை நீங்கள் பொரித்தோ அல்லது மசாலா மாதிரி செய்து சாப்பிடலாம். எப்படி செய்தாலும் இதனை சுவை சூப்பராக இருக்கும். இவை எப்படி சுவையாக உள்ளதோ அதே போல் சத்துக்களும் நிறைந்துள்ளது. பன்னீரில் என்னென்ன சத்துக்கள் நிறைந்துள்ளது, அதனுடைய நன்மைகள் பற்றி இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்வோம்.

பன்னீரில் உள்ள சத்துக்கள்:

பன்னீரில் கால்சியம், பொட்டாசியம், செலினியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், வைட்டமின் எ, வைட்டமின் டி போன்ற சத்துக்கள் உள்ளது.

100 கிராம் பன்னீரில் உள்ள சத்துக்கள்,

  • கலோரிகள்- 265
  • கொழுப்பு – 20.8 கிராம்
  • கார்போஹைட்ரேட் –1.2 கிராம்
  •  புரதம்- 18.3 கிராம்
  •  கால்சியம் – 208 மில்லி கிராம்

இதையும் படியுங்கள் ⇒ காலிபிளவரை சாப்பிடுவதற்கு முன்பு நாம் தெரிந்துக்கொள்ள வேண்டியவை..!

பன்னீரில் உள்ள நன்மைகள்:

பன்னீரில் உள்ள நன்மைகள்

எலும்பு பலம் பெற:

Foods For Bone Strength in Tamil

பன்னீரில் கால்சியம் சத்து இருப்பதால் எலும்புகளை பலம் பெற உதவுகிறது. மேலும் மூட்டு வலி பிரச்சனைகள் உள்ளவர்கள் பன்னீரை உணவில் சேர்த்து கொள்வது சிறந்த தீர்வாக இருக்கும்.

புரோஸ்டேட் புற்றுநோய்:

பன்னீரில் செலினியம் மற்றும் கால்சியம் சத்து ஆண்களின் பிறப்புறுப்பில் உருவாகும்  புரோஸ்டேட் புற்றுநோய் வராமல் தடுக்க உதவுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க:

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க

தினமும் பன்னீரை சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவுகிறது. மேலும் இரத்த ஓட்டம் சீராக செல்ல உதவுகிறது. அதுமட்டுமில்லாமல் நினைவு திறனை அதிகப்படுத்த உதவுகிறது.

விந்தணு அதிகரிக்க:

ஆண்களின் விந்தணுவை அதிகரிக்க பன்னீரில் உள்ள ஜின்க் சத்து உதவுகிறது. மேலும் விந்தணு சம்மந்தப்பட்ட நோய்களையும் சரி செய்ய உதவுகிறது.

கீல் வாதம் குணமாக:

கீல்வாதம் பிரச்சனை உள்ளவர்களுக்கு பன்னீர் சிறந்த தீர்வாக இருக்கும். பன்னீரில் உள்ள ஒமேகா 3 கர்ப்பிணி பெண்களுக்கு நல்லது.

பளபளக்கும் சருமம்:

பளபளக்கும் சருமம்

பன்னீரில் உள்ள செலினியம் சத்து சருமத்தை பளபளப்பாக வைக்க உதவுகிறது.

பன்னீரை யார் சாப்பிடலாம்:

பன்னீரை உடல் எடை குறைவாக உள்ளவர்கள் சாப்பிடலாம். உடல் எடை அதிகமாக உள்ளவர்கள், நார்மலா உள்ளவர்கள் வாரத்தில் ஒரு நாள் அல்லது 15 நாட்களுக்கு ஒரு முறை சாப்பிடலாம்.

இதையும் படியுங்கள் ⇒ அசைவ சாப்பாட்டினை மிஞ்சும் அளவிற்கு சுவையான பன்னீர் மசாலா கிரேவி இப்படி செய்து பாருங்கள்…!

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்