பருத்தி பால் நன்மைகள் | Paruthi Paal Benefits in Tamil
இளம் வயதில் இருந்தே அனைவரும் பால் குடித்து தான் வளர்ந்திருப்போம். பாலில் இருக்கும் சத்துக்கள் தான் நாம் ஆரோக்கியமாக இருப்பதற்கும், உடல் வலுப்பெறுவதற்கும் உதவி வருகிறது. தாய்ப்பாலுக்கு பிறகு நாம் அனைவரும் பருகுவது விலங்குகளின் பால் தான். மாட்டுப்பால், ஆட்டுப்பால், ஒட்டகப்பால் இவையெல்லாம் விலங்குகளிடம் இருந்து பெறப்படுகிறது.
இவை தவிர தாவரங்களின் விதைகளில் இருந்து பெறப்படும் பால் தான் தேங்காய் பால், பாதாம் பால், பருத்திப்பால். இந்த ஒவ்வொரு பாலுமே உடலுக்கு வலிமை தரக்கூடியவை தான். அந்த வகையில் நாம் இந்த பதிவில் பருத்தி பால் குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க.
Paruthi Milk Benefits in Tamil | பருத்தி பால் பயன்கள்:
பருத்தியில் வைட்டமின்கள்,புரதங்கள், ஆன்டி ஆக்சிடண்ட்டுகள்,கொழுப்பு அமிலங்கள்,
மற்றும் கனிமச் சத்துக்கள் போன்றவை அடங்கியுள்ளது. மேலும், பருத்தி பாலில், பச்சை அரிசி,
சுக்கு, கருப்பட்டி, ஏலக்காய், மிளகு, திப்பிலி, சித்தரத்தை, தேங்காய்ப்பால், கடலைப்பருப்பு மற்றும்
முந்திரி ஆகியவையும் சேர்க்கப்பட்டுள்ளது.
எனவே, பருத்தியில் உள்ள சத்துக்களும், பருத்தி பாலில் சேர்க்கப்படும் பொருட்களும் சேந்து உடலிற்கு ஏராளமான ஆரோக்கியமான நன்மைகளை அளிக்கிறது. அவை அனைத்தையும் ஒவொன்றாக பார்க்கலாம்.
நீரிழிவு நோயாளிகளுக்கு மருந்து:
நீரிழிவு நோயாளிகள் பருத்தி பால் சாப்பிடலாமா என்ற கேள்வி நம்மில் பலருக்கும் இருக்கும். கண்டிப்பாக சாப்பிடலாம். பருத்தி பால் குடிப்பதன் மூலம் கணையம் ஆரோக்கியமாக இருக்கும்.
மலச்சிக்கல்:
- இந்த பாலில் அதிக அளவு நார்ச்சத்து இருப்பதால் மலச்சிக்கலை சரி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே மலச்சிக்கல் உள்ளவர்கள் ஒரு டம்ளர் பருத்தி பால் குடிப்பதன் மூலம் மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
தாய்மார்களுக்கு:
- தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு பால் சுரக்க பயன்படுகிறது. அது மட்டும் இல்லாமல் தாய்மார்களுக்கு உடலுக்கு தேவையான சக்தியை தருகிறது.
- பருத்தி பாலில் விட்டமின்கள், புரதம், கொழுப்பு போன்ற சத்துக்கள் இருப்பதால் உடலுக்கு தேவையான அனைத்து சக்தியும் கிடைத்து, உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு உதவுகிறது.
வயிற்று புண்களை குணப்படுத்த:
- வயிற்று புண், குடல் புண் இருப்பவர்கள் வெறும் வயிற்றில் பருத்திப்பாலை குடிப்பது நல்லது. விரைவாக வயிற்றில் உள்ள புண்கள் அழிந்து உடலை பாதுகாப்பாக வைத்து கொள்ள உதவுகிறது. வயிறு சம்மந்தமான அனைத்து பிரச்சனைகளுக்கும் பருத்திப்பால் ஒரு சிறந்த தீர்வாக உள்ளது.
முதுகு வலி:
- பருத்தி பாலுடன் வறுத்து அரைத்த கோதுமையை சேர்த்து காய்ச்சி குடிப்பதன் மூலம் கை, கால், மூட்டு வலி, முதுகு வலி போன்றவை குணமாகும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் இந்த பால் உதவி வருகிறது.
சளி, இருமல்:
- பருத்தி பால் நன்மைகள்: பருத்திப்பாலில் பச்சரிசி, கருப்பட்டி மற்றும் சில பொருட்கள் சேர்க்கப்படுகிறது. இதில் சேர்க்கப்படும் கருப்பட்டி சளி, தீராத இருமல் போன்றவற்றை குணப்படுத்தும் தன்மை கொண்டது. டயட் இருப்பவர்களுக்கு இது சிறந்த பானமாக உள்ளது.
மாதவிடாய்:
- இப்போது உள்ள பெண்களுக்கு மாறிவரும் பழக்க வழக்கங்கள் மற்றும் உணவு முறை காரணமாக மாதவிடாய் சரியாக வருவதில்லை. அப்படிப்பட்டவர்கள் வாரம் ஒருமுறை இந்த பாலை எடுத்துக்கொண்டால் மாதவிடாய் சரியான நேரத்தில் வெளிவரும்.
இதய ஆரோக்கியத்திற்கு:
- உடலில் இரத்த அழுத்தத்தை சரியான நிலையில் பராமரிக்கவும், இதயத்தை ஆரோக்கியமாக வைத்து கொள்ளவும் பெரிதும் உதவுகிறது.
- மாட்டுப்பால் குடிக்க பிடிக்காதவர்கள் பருத்திப்பால் குடிக்கலாம். பொதுவாக அனைத்து பாலிலும் கால்சியம் சத்து அதிகம். அதே போல பருத்திப்பாலில் இருக்கும் கால்சியம் எலும்புகள் மற்றும் மூட்டுகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது.
தேங்காய் பால் நன்மைகள் |
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Health Tips In Tamil |