பித்தம் அறிகுறி | Symptoms of Pitham in Tamil
Pitham Symptoms in Tamil: வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவில் உடலில் ஏற்படும் பித்த நோய்க்கான அறிகுறி என்னென்ன உள்ளது என்பதை பற்றி தெரிந்துக்கொள்ளுவோம்..! உடலில் தோன்றும் பித்த டோசமந்து மூன்று வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒன்று பித்த தோஷம் இது நெருப்பு ஆதிக்கம் கொண்டவை. இரண்டாவது வாத தோஷம் இது காற்று மற்றும் ஆகாயம் ஆதிக்கம் கொண்டவை, மூன்றாவது கபம் தோஷம் இது பூமி மற்றூம் நீர் கூறுகளில் ஆதிக்கம் செலுத்துகின்றன. உடலில் இருக்கும் முன்று விதமான பித்த தோஷங்களும் சமநிலையில் இருக்க வேண்டும். அதில் ஒன்றான பித்தம் உங்கள் உடலில் அதிகமாக இருந்தால் அதற்கான அறிகுறிகள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.
பித்தம் குணமாக பாட்டி வைத்தியம்..! |
பித்தம் அதிகமானால் அறிகுறிகள்
எரிச்சல் உணர்வு ஏற்படும்:
pitham symptoms in tamil: உடலில் பித்தம் அதிகமாக இருந்தால் உடலில் ஒருவித எரிச்சலை உணர்வீர்கள். சிலருக்கு உடலில் ஏதாவது ஒரு இடத்தில் திடீரென்று எரியும் உணர்வு உண்டாகும். சிலருக்கு கால்கள், உள்ளங்கைகளில் எரிச்சல் உணர்வு இருக்கும்.
பசியும் தாகமும்:
பித்தம் அறிகுறிகள்: உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பதால் உடலில் நீர்ச்சத்து பிரச்சனை ஏற்படும். இதனால் உடலில் பித்தம் அதிகமாகும். இந்த தாகமும், பசியும் பித்த தோஷத்துடன் தொடர்புடையது என்பதால் இதை தொடர்ந்து செரிமான பிரச்சனைகளும் சந்தித்தால் அது பித்த தோஷத்தின் அறிகுறிகள் ஆகும். இது இருக்கும் போது பசியும் தாகமும் இருப்பது போன்றே உணர்வீர்கள்.
தூக்கமின்மை பிரச்சனை:
பித்தத்தின் அறிகுறிகள்: பித்தம் அதிகமாக இருக்கும் போது உண்டாகும் அறிகுறியில் தூக்கமின்மையும் ஒன்று. பித்தம் ஏற்றம் இறக்கம் இருக்கும் போது உண்டாகும் அறிகுறியில் தூக்கமின்மை ஒன்று. வாதம் அதிகரிக்கும் போது தூக்கமின்மை பிரச்சனை உண்டாகலாம்.
லோ சுகர் அறிகுறிகள் |
அடிக்கடி காய்ச்சல் ஏற்படுவது:
அடிக்கடி காய்ச்சல் வருவது வெப்பநிலை அதிகரிப்பு எதிர்கொண்டால் அது பித்த தோஷத்தின் அறிகுறியாக இருக்கலாம்.
அதிக வியர்வை இருக்கும்:
வியர்வை வழக்கமாக எல்லோருக்கும் வரக்கூடியதுதான். பித்த தோஷம் இருப்பவர்களுக்கு மற்றவர்களை காட்டிலும் அதிகமாக வியர்வை இருக்கும். குறிப்பாக உடலில் பித்ததோஷம் அதிகமாக இருந்தால் வெளிப்படும் வியர்வை ஒருவித துர்நாற்றத்தை வெளிப்படுத்தும்.
முன்கூட்டியே நரை:
பித்த நரை என்று சொல்வதை நாம் எல்லோரும் தெரிந்து வைத்திருப்போம். இளம் வயதிலேயே தலை முடியில் நரை விழுவதை பித்தநரை என்று கூறுவோம். உடலில் பித்த தோஷம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருந்தால் அது முன்கூட்டியே தலை முடியில் நரையை உண்டாக்கும். இவையும் உடலில் பித்த தோஷத்துக்கான அறிகுறியே (பித்தம் அறிகுறி) ஆகும்.
சிறுநீர் மஞ்சள் நிறத்தில் இருக்கும்:
உடலில் பித்தமானது அதிகரிக்கும் போது தோல் சார்ந்த பகுதிகளில், கண் பகுதி மற்றும் சிறுநீர் மஞ்சள் நிறத்தில் காணப்படும். மேலும் உடல் பகுதியானது சிவந்த நிலையில் இருக்கும்.
காயம் விரைவில் ஆறாது:
அதிக பித்தம் உள்ளவர்களுக்கு ஏதேனும் காயம் ஏற்பட்டால் காயமான இடத்தில் சீழ் அல்லது கசிவு ஏற்படும். காயமானது விரைவில் ஆறாது. மேலும் உடலில் பித்தம் (symptoms of pitham in tamil) ஏற்றம் இறக்கம் இருந்தால் மஞ்சள் காமாலை வருவதற்கு வாய்ப்புள்ளது.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | உடல் ஆரோக்கிய குறிப்புகள் |