சாமை அரிசி பயன்கள் | Samai Rice Benefits in Tamil

சாமை அரிசி மருத்துவ பயன்கள் | Saamai Benefits in Tamil

Saamai Benefits/ samai rice benefits in tamil: நண்பர்களுக்கு வணக்கம்..! இன்றைய பொதுநலம்.காம்-ல் சாமை அரிசி சாப்பிடுவதால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் ஏற்படுகிறது என்று இந்த பதிவில் படித்து தெரிந்துக்கொள்ளுவோம். சிறுதானிய தாவரங்களில் சிறந்த தானியமாக விளங்குவது இந்த சாமை அரிசி. சாமை அரிசியானது இந்தியாவில் அதிகமாக விளைவிக்கப்பட்டு வருகிறது. சாமை அரசியை சாப்பிடுவதால் உடலுக்கு பல மருத்துவ குணங்கள் கிடைக்கிறது. இந்த அரசியில் புரதச்சத்து, கொழுப்புச்சத்து, தாது உப்புகள், மக்னீஷியம், சோடியம், பொட்டாசியம், காப்பர், மாங்கனீசு, துத்தநாகம், நார்ச்சத்து, மாவுச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து போன்றவை நிறைந்துள்ளது. சரி வாங்க இப்போது சாமை (saamai benefits in tamil) அரிசி சாப்பிடுவதால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்று படித்தறியலாம்..!

அரிசி வகைகளும் அதன் பயன்களும்..!

உடலுக்கு வலிமை கொடுக்கும் சாமை:

Saamai Benefits

சாமை அரிசியில் அதிகமாக கால்சியம் சத்துக்கள் அடங்கியுள்ளது. உடலில் எலும்பு முறிவு உள்ளவர்கள் சாமை அரிசி சாப்பிட்டு வந்தால் எலும்புகள் வலுப்பெறும். மேலும் உடலில் உள்ள தசை பகுதிகளை வலிமை பெற செய்கிறது.

விந்தணு உற்பத்தி அதிகரிக்கும்:

Saamai Benefits

சாமை (samai arisi benefits tamil) அரிசி எடுத்துக்கொள்ளுவதால் ஆண்களின் இனப்பெருக்க விந்தணுவை அதிகரிக்க செய்யும். ஆண்மை குறைபாட்டையும் நீக்கிவிடும். தாது பொருட்களை உடலில் அதிகரித்து உயிரணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். 

இரத்த சோகையை குணப்படுத்தும்:

Saamai Benefits

சாமை அரிசி மற்றும் சிறு தானியங்களில் அதிகளவு இரும்புச்சத்துக்கள் அடங்கியுள்ளது. உடலில் இரத்த சோகை உள்ளவர்கள் சாமை அரிசியை சாப்பிட்டு வரலாம். சாமை அரிசி சாப்பிடுவதால் உடல் நன்கு உறுதியாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.

கைக்குத்தல் அரிசி உணவை சாப்பிடுவதால் கிடைக்கும் 12 நன்மைகள்..!

சர்க்கரை அளவை குறைக்கும் சாமை:

 saamai benefits

சாதாரண அரிசியை விட சாமை அரிசியில் ஏழு மடங்கு நார்ச்சத்துக்கள் உள்ளது. உடலில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவியாக இருப்பது நார்ச்சத்து. சர்க்கரை அளவானது உடலில் அதிகம் உள்ளவர்கள் இந்த சாமை அரிசியை எடுத்துக்கொண்டால் சர்க்கரை அளவு குறையும். மேலும் ஆரம்ப நிலையில் உள்ள சர்க்கரை நோயை வராமல் தடுத்து நிறுத்தும்.

பூங்கார் அரிசி பயன்கள்

மலச்சிக்கலை குணப்படுத்தும்:

 saamai benefits

மலக்கழிவுகள் உடலிருந்து சரியாக வெளியேறாவிட்டால் பல்வேறு நோய்கள் வரக்கூடும். அனைத்து நோய்களுக்கும் சிறந்து விளங்கக்கூடிய சாமையை உணவில் சேர்த்துக்கொண்டால் மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து முற்றிலும் விடுபடலாம். மேலும் சாமை அரிசியை சாப்பிடுவதால் வயிற்று சம்பந்த அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்துவிடும். 

எலும்பு சம்பந்த பிரச்சனையை சரி செய்யும்:

Saamai Benefits

சாமை அரிசியில் இயற்கையான சுண்ணாம்பு சத்துக்கள் அதிகளவு அடங்கியுள்ளது. சாமை அரிசி சாப்பிடுவதால் எலும்பு முறிவு மற்றும் எலும்பு சம்பந்த அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு கொடுக்கும். மேலும் எலும்புகளுக்கு இடையில் இருக்கும் தசைகளையும் வலிமையாக வைத்திருக்கும்.

அவல் பயன்கள்

சிறிய குழந்தைகளுக்கு ஏற்ற சாமை அரசி:

 saamai benefits

குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, ஆஸ்துமா, நுரையீரல் பிரச்சனைகளை சாமை அரிசியானது சரி செய்யும். சாமை அரசியில் உள்ள போலிக் அமிலம் மூளை வளர்ச்சிக் குன்றிய குழந்தைகள் உருவாகாமல் தடுக்கும்.  சாமையில் உள்ள புரதச்சத்து மற்ற தானியங்களைவிட அதிகம் என்பதால் குழந்தைகளுக்கும், விளையாட்டு வீரர்களுக்கும் நல்ல உடல் வலிமையை தரும்.

மாரடைப்பை தடுக்கும் சாமை:

 saamai benefits

சாமை அரிசியில் உடலுக்கு நன்மை அளிக்கக்கூடிய கொழுப்பு சத்துக்கள் அதிகளவு நிறைந்துள்ளதால் இதயம் சம்பந்தமான நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்து மாரடைப்பு வராமல் தடுக்கும்.

என்னென்ன உணவுகள் செய்யலாம்:

 saamai benefits

சாமையில் அதிகமாக புரத சத்துக்கள் மற்றும் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது.  இந்த தானியத்தின் மாவு மூலம் சாமை முறுக்குசாமை சோறுசாமை இடியாப்பம், சாமை புட்டு, சாமை ரொட்டி, கேக்பிஸ்கட் என்று பலவிதமாக செய்து சாப்பிடலாம்.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>Health Tips in Tamil