செம்பருத்தி பூ பயன்கள் | Semparuthi Poo Benefits in Tamil

Semparuthi Poo Benefits in Tamil

செம்பருத்தி பூ நன்மைகள் | Semparuthi Poo Maruthuvam Tamil

Semparuthi Poo Benefits in Tamil – இவ்வுலகில் பலவகையான மலர்கள் இருக்கின்றன. அவை பார்ப்பதற்கு அழகானதாகவும், வண்ண வண்ண நிறங்களுடனும், விதவிதமான வாசனைகளுடன் ஒவ்வொரு நாளும் பூத்து மலர்கின்றன. பொதுவாக பூக்கள் அலங்காரம் செய்வதற்கும், கூந்தலில் பூச் சூடுவதற்கு மட்டுமே மக்கள் இந்த நாள் வரை பயன்படுத்தி வந்துள்ளனர். இருப்பினும் நம் உடலில் ஏற்படும் நோய்களுக்கு சில வகையான பூக்கள் பயன்படுகிறது என்று பலருக்கும் தெரிந்ததில்லை. நமது வீட்டு தோட்டத்தில் அதிகமாக பூத்து குலுங்கும் செம்பருத்தி பூவின் மகத்தான மருத்துவ குணங்களை பற்றி உங்களுக்கு தெரியுமா? அப்படி தெரியாது என்றால் இந்த பதிவை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மாதவிடாய் பிரச்சனை சரியாக:

மாதவிடாய்

பொதுவாக சில பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் அதிக அளவிலான இரத்த போக்கு ஏற்படும். இதனால் உடல் சோர்வு அதிமாக இருக்கும், சரியாக அவர்களுடைய பணிகளை செய்ய முடியாத அளவுக்கு உடல் வலிமையினை இழந்துவிடுவார்கள். இதற்கு சிறந்த தீர்வாக செம்பருத்தி பூ விளங்குறது. பத்து செம்பருத்தி பூவின் இதழ்களை நெய்யில் வதக்கி மாதவிடாய் காலத்தில் பெண்கள் சாப்பிட்டு வந்தால் அதிக ரத்த போக்கு ஏற்படுவது தடுக்கப்படும்.

பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் Telegram, Youtube" சேனல Join" பண்ணுங்க: Pothunalam Telegram Pothunalam Youtube

இரத்த சோகை குணமாக:

இரத்த சோகை

 

உடலில் ரத்த விருத்தி அதிகரிப்பதற்கும், உடல் வலிமை பெறுவதற்கும் இரும்பு சத்தானது மிகவும் அவசியமான ஒன்றாகும். ஆகவே உடலில் இரும்பு சத்தினை அதிகரிக்க நினைப்பவர்கள் செம்மருத்தி பூ இதழுடன் சம அளவு மருதம் பட்டை கலந்து ஒரு தேக்கரண்டி அளவு காலை மாலை என இருவேளை சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் இரும்புச் சத்து அதிகரிப்பதோடு, இரத்த சோகை நோய் குணமாகும்.

தலைமுடி அடர்த்தியாக வளர:

தலைமுடி

இப்போது ஆண் பெண் இருபாலரும் சந்திக்கக்கூடிய ஒரே பிரச்சனை தலைமுடி உதிர்வது. இதற்கு சிறந்த தீர்வாக செம்பருத்தி பூ விளங்கிறது. ஆகவே செம்பருத்தி பூவின் சாற்றுடன் சம அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து வாணலியில் இட்டு காய்ச்சி, வடிகட்டி, கண்ணாடி பாட்டில்களில் பத்திரப்படுத்த வேண்டும். இந்த எண்ணெயை தொடர்ந்து தடவி வர தலை முடி கருமையாக, அடர்த்தியாக வளரும்.

வாய் புண் மற்றும் வயிற்று புண்  குணமாக:

வாய் புண்

உடலில் வெப்பத்தின் அளவு அதிகரிக்கும் காரணமாக பலருக்கு வாய் புண் மற்றும் வயிற்று புண் பிரச்சனை ஏற்பட்டு அதிகளவு அவஸ்த்தைப்படுகின்றன. இந்த பிரச்சனையை குணப்படுத்த தினம் 10 செம்பருத்தி பூவின் இதழ்களை மென்று சாப்பிட்டால் அத்தகைய புண்கள் ஆறும். இருப்பினும் இந்த முறையை ஒரு மாதகாலம் தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.

சிறுநீர் எரிச்சல் நீங்க:

பொதுவாக கோடைகாலங்களில் அனைவருக்குமே ஏற்படக்கூடிய பிரச்சனை என்றால் சிறுநீர் கடுப்பு. இந்த பிரச்சனையானது சிறுநீர் கழிக்கும் போது எரிச்சலை உண்டாக்கும். இத்தகைய பிரச்சனைக்கு செம்மருத்தி பூவின் சாறினை சாப்பிடலாம். சிறுநீர் கழிக்கும் பொழுது உண்டாகும் எரிச்சலை நீக்கும். நீர் சுருக்கை போக்கி சிறுநீரை பெருக்கி ரத்தத்தில் இருக்கும் நஞ்சுகளை வெளியேற்றும்.

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>Tamil maruthuvam tips