மூக்கில் சதை வளர்ச்சியா? காரணம் என்ன?
அன்பான பொதுநலம் நேயர்களே. இன்றைய ஆரோக்கியம் பதிவில் மூக்கில் சதை எப்படி வளர்கிறது என்பதை பற்றி தான் பார்க்கப்போகிறோம். இன்றைய நிலையில் நூற்றில் 20% சதவீதம் மக்களுக்கு இந்த மூக்கில் சதை வளர்ச்சி உருவாகிறது. இது உருவாவதற்கான காரணத்தையும் அதற்கான தீர்வையும் பற்றி பார்ப்போம்.
இந்த சதை வளர்ச்சியை ஆங்கிலத்தில் “நாசல் பாலிப்ஸ்” (சைனஸ்) என்று கூறுகிறார்கள். இது மூக்கின் உட்புறத்தில் வளரக்கூடிய மென்மையான அல்லது வழியில்லாத திசு ஆகும். இதை பாலிப் நீர்க்கட்டிகள் என்று கூறலாம்.
இது அதிகம் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. இருந்தாலும் இதற்கு சிகிச்சையளிக்க தவறினால் மூக்கில் அடைப்பு ஏற்படுவதோடு சுவாசிப்பதில் சிரமம் ஏற்படுகிறது. இந்த பாலிப் நீர்கட்டிகள் 60 வயதிற்கு மேற்பட்டவர்களை அதிகம் பாதிக்கிறது. இந்த பிரச்சனை உள்ளவர்களுக்கு மூக்கின் ஒரு பக்கத்திலிருந்து மட்டுமே சுவாசிக்க முடிகிறது. அதுமட்டுமில்லாமல் இதனால் மூக்கில் நீர்வடிதல், அடிக்கடி காய்ச்சல் மற்றும் சளி, தும்மல் போன்ற சைனஸ் பிரச்சனைகள் உருவாகிறது. இதனால் தலையின் பின்புறத்தில் கடுமையான வலி ஏற்படுவதோடு இதனால் மூச்சிரைப்பு போன்ற பிரச்சனைகள் உருவாகிறது. இது எதனால் உருவாகிறது என்ற காரணம் இன்னும் அறியப்படவில்லை. இருந்தாலும் ஆண் பெண் என பின்வரும் நிலையினை கொண்டிருந்தால் அவர்களுக்கு நாசல் பாலிப்ஸ் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.
சைனஸ் குணமாக சித்த மருத்துவம் |
சைனஸ் என்பது என்ன:
சைனஸ் என்பது மூக்கில் உள்ள எலும்புகளின் உட்புறத்தில் உள்ள காற்றறைகளை சைனஸ் என்று கூறுகிறார்கள். நமது முகத்தில் நான்கு வகையான சைனஸ் படலம் இருக்கின்றன. மூக்கினுடைய உட்பகுதியில் எப்படி ஒரு மிருதுவான சளி சவ்வு படலம் இருக்கிறதோ அதுபோல சைனஸ் என்று சொல்லக்கூடிய காற்று அறைகளுக்குள்ளேயும் மிருதுவான சளிச்சவ்வு படலம் இருக்கும். ஏதாவது ஒரு ஒவ்வாமையின் காரணமாக அதாவது குளிர்ச்சியான இளநீர், குளிர்பானங்கள் போன்ற உணவுகளை சாப்பிடுவதன் மூலம் மற்றும் தூசு, புகை அல்லது பூக்களிலிருந்து வரக்கூடிய மகரந்தம் இவைகளை சுவாசிப்பதனால் அலர்ஜி ஏற்பட்டு சளிசவ்வு படலம் அதிகமான திரவத்தை சுரப்பதினால் காற்று அறைகளுக்குள் நீர்கோர்க்கிறது.
இதனால் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை சைனஸ் என்று கூறுகிறோம். இந்த சைனஸ் பிரச்சனை சாதாரணமாக எல்லோர்க்கும் வரக்கூடிய ஓன்று தான். சைனஸ் பிரச்சனை குழந்தைகளுக்கு இருந்தால் அவர்கள் மூச்சி விட சிரமப்படுவார்கள். அதுமட்டுமில்லாமல் வாசனையும் தெரியாது. இதற்கான அறிகுறிகளை பற்றி பார்ப்போம்.
இதன் முக்கிய அறிகுறிகள் என்ன:
- மூக்கில் நீர்வடிதல்
- மூக்கில் வாசனை இழப்பு
- தும்மல்
- மூக்கினுள் அரிப்பு
- அடிக்கடி சளி பிடிப்பது
- தலையின் பின்புறத்தில் கடுமையான வலி அல்லது தலையில் எரிச்சல்
- மூக்கில் அடைப்பு ஏற்பட்டு சுவாசிக்க முடியாமல் இருப்பது.
- கன்னங்களில் வலி ஏற்படுவது
- சில சமயம் மூக்கில் இரத்தம் கசிவது
- தூக்கத்தில் குறட்டை வருவது
- தொண்டையில் ஏதோ இருப்பது போன்ற உணர்வு
50 வகை பாட்டி வைத்தியம் இயற்கை மருத்துவம் |
சைனஸ் தவிர்க்க வேண்டிய உணவுகள்:
குளிர்ச்சியான உணவுகள்:
சைனஸ் பிரச்சனை உள்ளவர்கள் தயிர், இளநீர், நொங்கு மற்றும் திராட்சை, ஆரஞ்சு போன்ற குளிர்ச்சி நிறைந்த பழங்கள், குளிர்ச்சியான உணவுகள் மற்றும் குளிர்பானங்கள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். பால் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். காரணம் பாலில் குளிர்ச்சி தன்மை அதிகம் இருக்கிறது. அப்படி சாப்பிட்டு வந்தால் அவர்களுக்கு சளி தொல்லை ஏற்பட்டு மூச்சு திணறல் ஏற்படவும் வாய்ப்புள்ளது. குளிர்ச்சியான உணவு பொருட்களை தவிர்ப்பது நல்லது.
வாழைப்பழம்:
இந்த பிரச்சனை உள்ளவர்கள் வாழைப்பழம் சாப்பிடக்கூடாது. காரணம் வாழைப்பழம் சாப்பிடுவதால் ஹிஸ்டமைனைத் தூண்டி உடலில் சளியின் உற்பத்தியை அதிகரிக்கும். ஹிஸ்டமைன் என்பது ஒவ்வாமையை எதிர்கொள்ளும் போது உடல் செல்கள் வெளியிடும் ஒருவிதமான கெமிக்கல் ஆகும். இதனால் மூக்கு ஒழுகுதல் தும்மல் போன்ற ஒவ்வாமை உருவாக காரணமாகிறது.
சாதம்:
இரவு நேரங்களில் சாதம் சாப்பிடகூடாது. ஏனென்றால் இதில் குளிர்ச்சி பண்புகள் அதிகம் இருப்பதால், இது சைனஸ் அலர்ஜியை தூண்டுகிறது.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |