சுகர் குறைய
வணக்கம் நண்பர்களே.! சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சந்திக்க கூடிய பிரச்சனைகளில் சுகரும் ஒன்று. முன்பெல்லாம் வயதானவர்களுக்கு சுகர் பிரச்சனை ஏற்படும். ஆனால் இப்பொழுது அப்படியில்லை அனைவருக்கும் சுகர் பிரச்சனை ஏற்படுகிறது. சுகர் பிரச்சனைக்காக வாழ்நாள் முழுவதும் மாத்திரை எடுக்க வேண்டும் என்று கவலைப்படுகிறவர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் சுகர் பிரச்சனை சரி ஆகுவதற்காக இதை சாப்பிடுங்கள், அதை சாப்பிடுங்கள் என்று சொல்ல போவதில்லை. நீங்கள் தினமும் செய்யும் செயல்களில் சில மாற்றங்களை ஏற்படுத்தினாலே போதுமானது. அது என்னென்ன என்று இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்வோம்.
தண்ணீர் குடிக்க வேண்டும்:
உடலில் உள்ள சர்க்கரையின் அளவை குறைப்பதற்கு தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். தண்ணீர் குடித்தால் எப்படி சரி ஆகும் என்ற கேள்வி இருக்கும். நீங்கள் தண்ணீர் அதிகமாக குடிப்பதன் மூலம் சிறுநீர் வெளியேற்றுவீர்கள். சிறுநீர் மூலமாக இரத்த சர்க்கரை வெளியேறும்.
நடைப்பயிற்சி செய்ய வேண்டும்:
நீங்கள் தினமும் நடைப்பயிற்சி செய்வது நல்லது. அதாவது 20 நிமிடம் நடைப்பயிற்சி செய்வது இரத்த சர்க்கரையின் அளவை குறைக்கஉதவுகிறது இதையும் படியுங்கள் ⇒ சர்க்கரை நோய் அறிகுறிகள்
நார்ச்சத்து உணவுகள்:
நீங்கள் தினமும் சாப்பிடும் உணவுகளில் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்து கொள்ளுங்கள். இப்படி சாப்பிடும் பொழுது சர்க்கரையின் அளவையும் குறைக்கும் மேலும் சர்க்கரை நோய் வராமலும் பாதுகாத்து கொள்ளும்.
கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகள்:
நீங்கள் சாப்பிடும் உணவுகளில் கார்போஹைட்ரேட் குறைவாக உள்ள உணவுகளாக சாப்பிட வேண்டும்.
தியானம் செய்வது:
சுகர் பிரச்சனை உள்ளவர்களும் சரி, சுகர் பிரச்சனை இல்லாதவர்களும் சரி மன அழுத்தம், கவலை போன்ற உணர்வுகள் அதிகமாக ஏற்படும் போது சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். அதனால் இந்த உணர்வுகள் ஏற்படும் பொழுது தியானம் மேற்கொள்வது நல்லது.சர்க்கரை நோய் வராமல் தடுப்பது எப்படி.?
- முதலில் நீங்கள் சாப்பிட்டவுடன் தூங்குவதை தவிர்க்க வேண்டும்.
- காலை உணவு சாப்பிடாமல் இருக்க கூடாது. இதனால் சுகர் பிரச்சனை ஏற்படும்.
- அடுத்து நீங்கள் நன்றாக தூங்க வேண்டும்.
- சத்தான உணவுகள் சாப்பிட வேண்டும். அதாவது காய்கறிகள், கீரை வகைகள், தானியங்கள் போன்றவை உங்கள் உணவில் சேர்த்து சாப்பிட வேண்டும்.
இதையும் படியுங்கள் ⇒ கேன்சர், சுகர் மற்றும் பல நோய்களை குணப்படுத்தும் நித்தியகல்யாணி பூ..!
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |