தான்றிக்காய் பொடி பயன்கள் | Thandrikai Uses in Tamil

Advertisement

தான்றிக்காய் பயன்கள் | Thandrikai Powder Uses in Tamil

வணக்கம் பிரண்ட்ஸ்..! தான்றிக்காய் பொதுவாக ஏராளமான மருத்துவ குணங்கள் கொண்டது. உடலில் ஏற்படும் பலவகையான ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வு அளிக்கிறது. இதன் காரணமாகவே பாட்டி வைத்தியம், சித்த வைத்தியம், நாட்டு வைத்தியம் போன்றவற்றில் இதனை அதிகளவு பயன்படுத்துகின்றன. தொடர்ந்து 48 நாட்கள் இந்த தான்றிக்காயை சாப்பிடுவதன் மூலம் உடல் காய கல்பமாகும். சரி இந்த பதிவில் தான்றிக்காய் மருத்துவ குணங்களை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..

பல் வலி குணமாக – Thandrikai Powder Benefits in Tamil:

பல் வலியால் அவஸ்த்தை படுபவர்கள், தான்றிக்காயைச் சுட்டு மேல் உள்ள தோல் பகுதியை பொடி செய்து கொள்ளுங்கள். அந்த பொடிக்கு சமமாக சர்க்கரை கலந்து, தினமும் காலை வெந்நீரை கலந்து அருந்தி வந்தால் பல்வலி மற்றும் பல் சம்மந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளும் குணமாகும்.

அல்லது:

பல் வலி பிரச்சனையால் தினமும் சிரமப்படுபவர்கள் காலை எழுந்தவுடன் தான்றிக்காய் பொடியில் பல் துலக்கி வந்தால் பல் வலி குணமாகும்.

அல்லது:

கடுக்காய், நெல்லிக்காயுடன் தான்றிக்காய் பொடி சேர்த்து பல் துலக்கி வந்தால், பல் இறுகி, ஈறுகளும் பலப்படும்.

வசம்பு மருத்துவ குணங்கள்

முடி வளர:

தொடர்ந்து தான்றிக்காய் பொடி சாப்பிடுவதன் மூலம் தலைமுடி நன்கு புத்துணர்ச்சியுடன் வளரும், மெலிந்த முடிகளை நன்கு வளர செய்யும், முடி உதிர்வு பிரச்சனையை தடுக்கும். குறிப்பாக தான்றிக்காய் தலைமுடிக்கு நன்கு ஊட்டமளிக்கும்.

கண் பார்வை தெளிவு பெற:

கண் பார்வை நன்கு தெளிவு பெற தான்றிக்காய் பொடியை ஒரு தேக்கரண்டி எடுத்து கொள்ளுங்கள், அவற்றில் ஒரு டம்ளர் நீரில் கலந்து காலை மாலை என இரண்டு வாரங்கள் அருந்தி வர கண் பார்வை நன்கு தெளிவு பெரும்.

இரத்த மூலம் குணமாக:

இரத்த மூலம் நோய் உள்ளவர்கள் தான்றிக்காயைக் கொட்டை நீக்கி, தோலை, கருக்கவிடாமல், இலேசாக வறுத்து, பொடி செய்து, 1 கிராம் அளவு தான்றிக்காய் பொடியுடன், சிறிதளவு சர்க்கரை, 1 டம்ளர் மோருடன் கலந்து காலை, மாலை ஆகிய இரண்டு வேளையும் சாப்பிட வேண்டும். இவ்வாறு சாப்பிடுவதினால் இரத்த மூலம் குணமாகும்.

தொண்டை கரகரப்பு சரியாக:

தொண்டை கரகரப்புக்கு தான்றிக்காய் சிறந்த மருந்தாகவும், தான்றிக்காய் குரல் வளத்தினை பெருக்கவும், ஆஸ்துமா மற்றும் இரத்தத்துடன் கலந்து வரும் சளி, சாதாரண சளி இருமல் போன்ற பிரச்சனைகளுக்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. மேலும் தான்றிக்காய் வாய் துர்நாற்றம் நீங்கவும் பயன்படுகிறது.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Tamil maruthuvam tips
Advertisement