திரிபலா சூரணம் சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள் என்ன தெரியுமா?

thiripala suranam side effects in tamil

திரிபலா சூரணம்

வணக்கம் நண்பர்களே இன்று நம் பொதுநலம்.காம் பதிவில் திரிபலா சூரணத்தை அதிகம் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் சில பக்கவிளைவுகளை பற்றித்தான் தெரிந்து கொள்ளப்போகிறோம். திரிபலா சூரணம் என்பது கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவை சேர்ந்த ஒரு கலவையாகும். இவை சிலர்க்கு அதிகமான ஆரோக்கியங்களை தந்து வந்தாலும். ஆனால் ஒரு சிலருக்கு சில பக்கவிளைவுகளை ஏற்படுத்திக்கிறது. மேலும் இதனை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்னவென்றும், இதனை அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகளை பற்றி நம் பதிவில் மூலம் படித்து அறியலாம் வாங்க.

தயிர் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள்

திரிபலா சூரணம் பயன்:

திரிபலா சூரணம் சாப்பிடுவதால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறிப்பதற்கு உதவியாக இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.

இந்த மூலிகையை சாப்பிடுவதால் கண்புரை மற்றும் கண் பார்வைகள் தெளிவாக இருப்பதற்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அதிகமான முடி உதிர்வு மற்றும் இளநரை போன்ற பிரச்சனைகளுக்கு திரிபலா சூரணம் மருத்துவ பயன்களை தருகிறது என்றும் சொல்லப்படுகிறது.

வயிற்று வலி பிரச்சனைகள் ஆன வாய்வு தொல்லை, மலச்சிக்கல், வயிறு உப்புதல் போன்ற பிரச்சனைகளையும் சரிசெய்கிறது. அதோடு செரிமான கோளாறுகள் மற்றும்  நீரழிவு நோய்களையும் கட்டுப்படுத்தி சரி செய்க்கிறது என்றும் சொல்லப்படுகிறது.

திரிபலா சூரணம் பக்க விளைவுகள்:

திரிபலா சூரணம் சிலருக்கு பல நன்மைகளை அளித்து வந்தாலும், இதனை உணவு பழக்கவழக்கத்தில் சேர்த்துக்கொள்ளும் பொழுது உடலுக்கு ஏதேனும் பக்க விளைவுகளை தருகின்றது என்றும் தெரிந்துகொள்வது அவசியம்.

குழந்தைகளுக்கு திரிபலா சூரணத்தை கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. திரிபலா சூரணத்தை அதிகம் சாப்பிடுவதால் தூக்கமின்மை போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

திரிபலா சூரணமானது  லேசான மலமிளக்கியாகும், இதனை உபயோகிக்கும் பொழுது பல நன்மைகளை செய்துவந்தாலும், இதனை அதிகம் சாப்பிடும் பொழுது வயிற்று கடுப்பு, வயிற்று போக்கு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

நீரழிவு நோய்களுக்கு திரிபலா சூரணம் பல நன்மைகளை அளித்து வந்தாலும், நீரழிவு நோய் உள்ளவர்கள் இதனை அதிகமாக எடுத்துக்கொள்ளும் பொழுது இரத்த அழுத்தமானது ஆபத்தான அளவிற்கு குறைந்து காணப்படும்.

கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்கள் திரிபலா சூரணத்தை உபயோகிப்பதற்கு விஞ்ஞான சான்றுகள் எதுவும் இல்லாத காரணத்தினால் கர்ப்பிணி பெண்கள் மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகு உபயோகிப்பது நல்லது.

திரிபலா சூரணத்தை சாப்பிடுவதற்கு முன்பு ஏற்கனவே ஏதேனும் மருந்துகளை உபயோகித்து  கொண்டிருக்கிறீர்கள் என்றால் ஆயுர்வேத மருத்துவரிடம் ஆலோசனைக்கு பிறகு உபயோகிப்பது நல்லது.

டாக்டர்களின் அறிவுரைப்படி வயதிற்கு வந்த பெண்கள் 2 தேக்கரண்டிக்கு மேல் அதிகமாக சாப்பிட கூடாது என்றும் சொல்லப்படுகிறது.

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்