வசம்பு மருத்துவ குணங்கள் | Vasambu Benefits in Tamil

vasambu-benefits-in-tamil

வசம்பு பயன்கள் | vasambu uses in tamil

Sweet Flag Uses in Tamil:- வணக்கம் நண்பர்களே இன்றைய பொதுநலம்.காம் பதிவில் அதிசியம் மிகுந்த வசம்பு மருத்துவ குணங்கள் பற்றி தெரிந்து கொள்வோம். பொதுவாக வசம்பினை குழந்தைகளுக்கு தான் அதிகளவு பயன்படுத்துவார்கள். இருப்பினும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த வசம்பினை உடல் ஆரோக்கிய பிரச்சனைக்கு பயன்படுத்தலாம். வசம்பு ஒரு மூலிகை பொருள் என்பதினால் சித்த வைத்திய முறைகளில் அதிகளவு பயன்படுத்தப்பட்டு வருகின்றது. சரி இந்த வசம்பு மூலிகையின் பல்வேறு மருத்துவ குணங்கள் பற்றி இங்கு அறிந்து கொள்ளலாம்.

வசம்பு மருத்துவ குணங்கள் | Vasambu Benefits in Tamil

sweet flag uses

தொற்று நோய் குணமாக:-

இப்போது உள்ள காலகட்டத்தில் பலவகையான தொற்று நோய்கள் ஏற்படுகின்றது. ஆகவே நமது உடல் ஆரோக்கியத்தில் நம் தான் அதிக கவனமாக இருக்க வேண்டும். ஆகவே தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வசம்பை நன்கு பொடி செய்து, இரண்டு ஸ்பூன் அளவு எடுத்து கொள்ளுங்கள் பின் அவற்றை தேனில் கலந்து சாப்பிட்டு வர அனைத்துவகை தொற்று நோய்களும் குணமாகும்.

ஜலதோஷம் நீங்க:-

பொதுவாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மழை மற்றும் குளிர்காலங்களில் சளி, இருமல், ஜலதோஷம், மூக்கடைப்பு, மூக்கில் நீர் வடிதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவது சாதாரணமான விஷயம் தான். இந்த பிரச்சனைகளுக்கு எளிய வீட்டு வைத்தியமாக வசம்பு பயன்படுகிறது. அதாவது 1/4 ஸ்பூன் வசம்பு தூளை ஒரு டம்ளர் வெந்நீரில் கலந்து பருகி வர இந்த ஜலதோஷம் பிரச்சனை குணமாகும்.

பொடுகு நீங்க சித்த மருத்துவம்:-

சித்த மருத்துவம் என்றாலே பலவகையான மூலிகைகள் இடம்பெறும் அவற்றில் ஒன்றாக வசம்பு திகழ்கின்றது. பொடுகு நீங்க சித்த மருத்துவம் முறையில் அதிகளவு வசம்பு பயன்படுத்தப்படுகிறது. பொடுகு தொல்லையால் அதிகம் அவஸ்த்தை படுபவர்கள் சிறிதளவு இடித்த வசம்பு மற்றும் சிறிதளவு வேப்பிலை ஆகியவற்றை எடுத்து தேங்காய் எண்ணெயில் கொதிக்க வைக்கவும். பின் எண்ணெய் நன்றாக ஆறியதும் வடிகட்டி தலைக்கு பயன்படுத்தலாம். இந்த எண்ணெய்யை தலைக்கு பயன்படுத்துவதன் மூலம் பொடுகு தொல்லை குணமாகும்.

கிருமி நாசினி:

வசம்பு இயற்கையாகவே அமிலத்தன்மை கொண்டது என்பதினால் கைக்குழந்தை வைத்திருப்பவர்களின் வீட்டில் ஆங்காங்கே வசம்பு பொடியை தூவி விடுவதன் மூலம், வீட்டில் எந்த ஒரு கிருமிகள் மற்றும் நுண்ணுயிரிகளால் குழந்தைகளுக்கு எந்த ஒரு பாதிப்பு வராமல் குழந்தையை ஆரோக்கியமாக பாதுகாக்கலாம்.

பூச்சி கடி சித்த மருத்துவம்:

பொதுவாக நாம் வசிக்கும் வீட்டின் தோட்டம் மற்றும் வீட்டின் சுவர் இடுக்குகளில் பூரான், தேள், விஷம் நிறைந்த வண்டுகள் இருக்கும். இவை சில சமயங்களில் நம்மை கடித்து நம் உடலில் விஷம் பரவிவிடும். பூச்சி கடியின் விஷம் நம் உடலில் பரவாமல் இருக்க வேண்டும் என்றால், உடனடியாக சிறிதளவு வசம்பை பொடி செய்து கடிபட்ட இடத்தில் வைப்பதன் மூலம் அல்லது கொதிக்க வைத்த நீரில் வசம்பை சேர்த்து காய்ச்சி பருகி வந்தாலும் உடலில் பூச்சிக்கடியினால் பரவிய விஷம் முறிந்துவிடும். பூச்சி கடி சரியாக இது ஒரு சிறந்த சித்த மருத்துவ முறையாகும்.

வசம்பு குழந்தை மருத்துவம்

காக்கை வலிப்பு குணமாக மற்றும் மனநிலை பாதிப்பு நீங்க:

Vasambu Benefits in Tamil – வசம்புடன் திரிகடுகு, பெருங்காயம், அதிமதுரம், கடுக்காய் தோல், கருப்பு உப்பு ஆகியவற்றில் சிறிதளவு எடுத்து கொள்ளுங்கள். இவை அனைத்தும் ஒன்றாக சேர்த்து இடித்து பொடி செய்து கொள்ளுங்கள். பின் ஒரு கிளாஸ் காய்ச்சிய பாலில் ஒரு ஸ்பூன் பொடி சேர்த்து காலை மாலை என இரு வேளை காக்கை வலிப்பு பிரச்சனை உள்ளவர்களுக்கு கொடுத்து வர இந்த வலிப்பு பிரச்சனை குணமாகும். அதேபோல் மனநிலை பாதிப்பு பிரச்சனை உள்ளவர்களுக்கும் கொடுத்து வர சித்தம் தெளியும்.

திக்குவாய் குணமாக:- 

வசம்பின் மருத்துவ குணங்கள் – பொதுவாக ஒரு சிலர் பேசும்போது திக்கிக்கொண்டே பேசுவார்கள். இந்த திக்குவாய் என்பது நாக்கு மற்றும் நரம்பு மண்டலத்தில் ஏற்படக்கூடிய சிறிய பாதிப்பினால் ஏற்படும் பிரச்சனையாகும். இதற்கு வசம்பு சிறந்த மருத்துவ பொருளாக பயன்படுகிறது. இந்த திக்குவாய் பிரச்சனையை குணப்படுத்த சரியான மருத்துவ முறை மற்றும் பேச்சு பயிற்சி பழகும் காலங்களில் வசம்பை நன்கு பொடி செய்து தேன் விட்டு குழைத்து திக்குவாய் பாதிப்பு கொண்டவர்களின் நாவில் தடவி வந்தால் திக்குவாய் குணமாக உதவும்.

வாந்தி மற்றும் குமட்டல் பிரச்சனை சரியாக:

நாம் சாப்பிடும் உணவு சரியாக செரிமானம் ஆகாமல் சிலருக்கு இது போன்ற வாந்தி மற்றும் குமட்டல் பிரச்சனை ஏற்படும். அதேபோல் சிலருக்கு வாகனத்தில் பயணம் செய்யும் போது வாந்தி, குமட்டல் போன்ற பிரச்சனை ஏற்படும். அந்த சமயத்தில் வசம்பை நன்கு பொடி செய்து வாயில் போட்டு சிறிது இதமான வெந்நீரை அருந்தினால் வாந்தி, குமட்டல் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கும்.

கீல்வாதம் குணமாக: 

நமது உடலில் வாதம் அதிகரிக்கும் போது உடலின் மூட்டு பகுதிகள் அனைத்தும் விரைத்து கொண்டு, அதிகளவு வலிகளை ஏற்படும். இந்த வாதம் பிரச்சனைகளில் கீல்வாதம் பிரச்சனை அதிக கஷ்டங்களை கொடுக்கக்கூடிய நோய் என்று சொல்லலாம். வசம்பு மற்றும் காசிக்கட்டி இரண்டியும் சிறிதளவு எடுத்து சிறிது நீர்விட்டு நன்கு அரைத்து மூட்டு பகுதிகளில் தடவி வந்தால் வாதம், கீல்வாதம் போன்ற அனைத்து பிரச்னைகளும் குணமாகும்.

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health Tips in Tamil