குழந்தை சளியை போக்கும் வசம்பு மருத்துவ குணங்கள்..! Vasambu Benefits For Babies In Tamil..!

Advertisement

குழந்தையை பாதுகாக்கும் வசம்பு..! Vasambu Uses For Babies..!

ஹாய் ஃப்ரண்ட்ஸ்..! இன்றைய பொதுநலம்.காம் பதிவில் குழந்தையின் உடலை பாதுகாக்கும் வசம்பு மருத்துவ குணங்களை(Vasambu Uses In Tamil) பற்றி இன்று படித்து தெரிந்து கொள்ளுவோம். குழந்தைக்கு ஏற்படும் சளி, இருமல், மலச்சிக்கல், பசியின்மை, தூக்கமின்மை, வயிற்று வலி போன்ற அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு வசம்பு. குழந்தைகள் இருக்கும் வீட்டில் இந்த வசம்பை(Sweet Flag) வைத்துக்கொள்ளுவது மிகவும் அவசியம். சரி வாங்க இந்த வசம்புவில் இருக்கும் மருத்துவம் நிறைந்த குணங்களை பற்றி முழுமையாக இந்த பொதுநலம் பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம்..!

newதாய்ப்பால் சுரக்க சாப்பிட வேண்டிய உணவுகள்..! Indian Food to Increase Breast Milk..!

மருத்துவ குணம் நிறைந்த வசம்பு:

இந்த வசம்புவில் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது. வசம்புவானது அனைத்து நாட்டு மருத்துவ கடைகளில் கிடைக்கும். வசம்பை நெருப்பில் நன்றாக காட்டி சுட்டு எடுத்து வைத்து கொள்ளவும்.

அனைவரின் வீட்டிலும் இழைப்பதற்கான கல் இருக்கும். அந்த கல்லில் வசம்புவை இளைத்து அதனுடன் தேன் அல்லது தாய்ப்பால் சேர்த்து மிக்ஸ் செய்து குழந்தைக்கு மருந்தாக கொடுக்கலாம்.

அலர்ஜி நோயை நீக்கும் வசம்பு:

அதுமட்டும் இல்லாமல் குழந்தைக்கு வரும் அலர்ஜி, பூச்சிக்கடி, உடலில் ஏற்படும் தடிப்பு, இது மாதிரியான பிரச்சனைக்கு தீர்வு தருகிறது வசம்பு.

குழந்தைகள் வளரும் வரை இந்த வசம்பை வைத்து எந்த மாதிரியான பிரச்சனைகள் ஏற்பட்டாலும் சரி செய்து விடலாம்.

குழந்தை உடலை பாதுகாக்கும் வசம்பு:

அடுத்த மருத்துவ குணம் என்னவென்றால் 1 மாத குழந்தை முதல் 6 மாத குழந்தைகள் வரை வசம்பை கற்களில் குழைத்து தாய்ப்பாலுடன் இணைத்து குழந்தைக்கு கொடுக்கலாம்.

பெரும்பாலும் குழந்தைகளுக்கு வசம்பினை சிறிய குழந்தைகளுக்கு கைகளில் கூட கட்டிவிட்டு இருப்பார்கள். கையில் கட்டிருக்கும் வசம்புவை குழந்தைகள் வாயில் வைத்தால் கூட இதனால் நிறைய நன்மைகள் ஏற்படும்.

newகுழந்தைகளுக்கு சளி இருமல் குணமாக..! Baby Cold And Cough Remedy..!

வசம்பை உடலில் எங்கெல்லாம் தடவலாம்:

குழந்தைகள் எப்போதும் கை, கால்களை வாயில் வைப்பது இயல்பு தான்.அதனால் வசம்புவினை நன்றாக மை போன்று தேய்த்து குழந்தையின் நெற்றியில் தடவி வரலாம்.

அதோடு குழந்தையின் உள்ளங்கை, உள்ளங்கால்களில் கூட இந்த வசம்பினை குழைத்து தடவினால் குழந்தைக்கு நிறைய மருத்துவ குணங்கள் அடங்கி இருக்கிறது.

குழந்தையின் வயிற்று வலியை நீக்கும் வசம்பு:

குழந்தைகள் எப்போதுமே வயிற்று வலியினால் அழுது கொண்டே இருப்பார்கள். அந்த பிரச்சனையை போக்க வசம்பை நன்றாக தேங்காய் எண்ணெய் அல்லது தண்ணீரில் குழைத்து குழந்தையின் தொப்புளில் தடவ வேண்டும்.

இந்த முறையை பின்பற்றினால் குழந்தைக்கு ஏற்படும் வாய்வு, வயிற்று வலி போன்ற அனைத்து பிரச்சனைகளும் விரைவில் குணமடையும்.

இந்த மருத்துவ குணத்தை குழந்தைப்பேறு பெற்ற அனைத்து தாய்மார்களும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயமாகும்.

newகுழந்தைகளுக்கு நன்றாக பசி எடுக்க என்ன செய்ய வேண்டும்?
இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Baby Health Tips Tamil
Advertisement