வெர்டிகோ அறிகுறிகள் | Thalai Sutral Symptoms in Tamil
Vertigo Symptoms in Tamil: அனைவரும் சந்திக்கக்கூடிய பிரச்சனையில் ஒன்றுதான் தலைசுற்றல். தலைச்சுற்றல் பிரச்சனை வரும்போது நமது உடலானது சம நிலையாக இருக்காது. சில நேரத்தில் தலை சுற்றலானது காரணம் எதுவும் இல்லாமலே வரும். தலை சுற்றல் ஏற்படும் போது பக்கத்தில் இருக்கும் பொருட்கள் எல்லாம் மங்கலாக தெரியும். வெர்டிகோ நோயால் மிகவும் அவதிப்பட்டவர்களுக்கு உடலில் அதிகமாக வியர்வை வெளியேறும். சரி தலை சுற்றல் ஏற்படும்போது எது மாதிரியான அறிகுறிகள் வரும் என்பதை கீழே படித்து அறிவோம்..!
பித்தம் அறிகுறிகள் |
வெர்டிகோ வர காரணம்:
வெர்டிகோ பிரச்சனையானது ஒரு சில காரணத்தினால் வருகிறது. வெர்டிகோ பிரச்சனையிலிருந்து முற்றிலும் விடுபட முதலில் இந்த காரணத்தை அறிந்திருக்க வேண்டும்.
- குறைந்த அல்லது உயர் இரத்த அழுத்தம் ஏற்படும்.
- உடலில் அதிகமாக தேவையில்லாத கொழுப்பு
- மூளை பகுதியில் கட்டி உண்டாகும்.
- நீரழிவு பிரச்சனை வரும்.
- தலை அல்லது கழுத்து பகுதிகளில் காயம் உண்டாகும்.
- உள் காது வீக்கம் ஆகும்.
தலைசுற்றல் அறிகுறி:
- முதலில் தலை சுற்றல் அறிகுறியாக குமட்டல், வாமிட் ஏற்படும்.
- மங்கலான பார்வைத்திறன், கண் கட்டுதல் போன்றவை தலைசுற்றல் அறிகுறியாகும்.
- உடலில் அதிகமாக வியர்வை தோன்றும்.
- தலைசுற்றல் அறிகுறியாக காது கேட்காத நிலை உருவாகும்.
- நடக்கும் போது மிகவும் சோர்வு ஏற்படும்.
உடல் சிகிச்சை மேற்கொள்வது அவசியம்:
வெர்டிகோ பிரச்சனையினால் தொடர்ச்சியாக அவதிப்படுபவர்களுக்கு உடல் சிகிச்சையானது மிகவும் முக்கியமான ஒன்று. இதன் மூலம் காதுகளில் உள்ள வெஸ்டிபுலர் (vestibular) பகுதிக்கு சமநிலையை கொடுக்கிறது.
பிறகு நரம்பு செல்களில் இருந்து மூளைக்கு சிக்னலை அனுப்புகிறது. வெஸ்டிபுலர் (vestibular) உறுப்புகளின் ஒருங்கிணைப்பை உணர்வு உறுப்புகளுடன் உறுதிப்படுத்த இது போன்ற சிகிச்சை உதவுகிறது. இதனால் உடல் நிலையானது சமநிலையாகும்.
உணவு மற்றும் நீர் சரியாக எடுத்துக்கொள்ளுதல்:
உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க சரியான நேரத்திற்கு உணவும், உடலுக்கு நீர்ச்சத்து போதுமான அளவிற்கு கிடைக்க தண்ணீர் குடிப்பது அவசியம். ஏனென்றால் நீரிழிவு பிரச்சனை தலைசுற்றல் பிரச்சனையை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. உடல் இரத்த அழுத்தத்தில் ஏற்படும் சிறு சிறு மாற்றங்கள் கூட உங்களுக்கு தலைசுற்றல் வர காரணமாக உள்ளது. சரியான உணவு மற்றும் நீர் எடுத்துக்கொள்வதன் மூலம் உடலில் ஏற்படக்கூடிய வலி குறைந்து நல்ல தூக்கம் வரும்.
லோ சுகர் அறிகுறிகள் |
ஓய்வு தேவை:
உடலில் அசைவுகள் குறைவதன் மூலமாகவும் தலைசுற்றல் பிரச்சனை ஏற்படும். நீங்கள் அதிகமாக வேலை செய்பவர்களாக இருந்தால் அதற்கேற்ற ஓய்வினையும் எடுக்க வேண்டும். வெர்டிகோ பிரச்சனையை தவிர்க்க நிம்மதியான உறக்கமும், செய்யும் வேலைக்கு ஏற்ற ஓய்வும் மிக முக்கியம்.
தலை சம்பந்த பயிற்சி முறை:
தலை சம்பந்தமான பயிற்சிகள் செய்வதன் மூலம் வெர்டிகோ பிரச்சனையிலிருந்து தப்பிக்கலாம். இந்த பயிற்சியை கேனலித் மறுசீரமைப்பு நடைமுறை என்று அழைக்கிறார்கள்.
மருத்துவரை எப்போது அணுகுவது:
சில சமையம் தலைசுற்றல் பிரச்சனை அதிகமாக இருக்கும் போது பாதிக்கப்பட்டவர்களினால் மருத்துவமனை செல்ல முடியாது. மருத்துவமனைக்கு செல்ல முடிந்தவர்கள் மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது. முடியாதவர்கள் ஆன்லைன் மூலம் மருத்துவர்களின் ஆலோசனையை பெற்றுக்கொள்ளலாம். அதன் பிறகு தலைச்சுற்றல் பிரச்சனைக்கு மருத்துவர் கூறும் அறிவுரைகளை கேட்டு சரியான சிகிச்சையை பின்பற்றி ஆரோக்கியத்துடன் இருங்கள்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | உடல் ஆரோக்கிய குறிப்புகள் |