வில்வம் மருத்துவம் பயன்கள் | Vilvam Benefits in Tamil

vilvam uses in tamil

வில்வம் மருத்துவ குணங்கள் | Vilvam Leaves Benefits in Tamil

வணக்கம் நண்பர்களே இன்றைய பொதுநலம்.காம் பதிவில் வில்வ மரத்தின் மருத்துவ குணங்கள் மற்றும் பயன்கள் பற்றி பார்க்கலாம். இந்த மரத்தை நீங்கள் பல புனித ஸ்தலங்களில் பார்த்திருப்பீர்கள். இது இலையுதிர்கால மரத்தின் வகையை சார்ந்தது. இந்த மரம் கோவிலில் இருப்பதால் மட்டும் சிறப்பானவை அல்ல அந்த மரத்தின் இலை, பூ, காய், கனிகள், வேர், பட்டை என அனைத்தும் மருத்துவ குணமிக்கது. அப்படி என்ன அந்த மரத்தின் மருத்துவ குணங்கள் என்று பார்க்கலாம் வாங்க.

வில்வம் மருத்துவ குணங்கள் – நரம்பு மணடலத்தை சரிசெய்ய:

வில்வம்

 • நரம்பு மண்டலம் பிரச்சனை உள்ளவர்கள் இந்த மரத்தில் இருக்கும் கோந்து போன்ற பிசினை வெயிலில் நன்கு காய வைத்து பொடியாக்கி அதனுடன் 4 டேபிள் ஸ்பூன் பசு வெண்ணெய் சேர்த்து 10 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர நரம்பு மண்டலம் வலுப்பெற்று உடலை சீராக்கும்.
ஆடாதோடை இலையின் மருத்துவ குணம்

Vilvam Leaf Medicinal Uses in Tamil – ஆஸ்துமாவை குணப்படுத்த:

vilvam benefits in tamil

 • மூச்சு திணறல் உள்ளவர்கள் வில்வ இலையுடன், துளசி மற்றும் மிளகு சேர்த்து அரைத்து கொள்ளவும். பின் அதனை 3 மிளகு அளவு எடுத்து கொண்டு சாப்பிட்டு வர மூச்சு திணறல் சரியாகும்.

வில்வ மரம் பயன்கள் – புற்றுநோயை குணப்படுத்த:

vilvam leaves benefits in tamil

 • புற்று நோய் உள்ளவர்கள் பழமையான வில்வ மரத்தின் கொழுந்து இலையை சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் குணமாகும். இதை சித்த மருத்துவர்களும் பரிந்துரைக்கிறார்கள்.

வில்வம் மருத்துவ குணங்கள் – சர்க்கரை நோயை குணப்படுத்த:

vilvam leaves benefits in tamil

 • இந்த மரத்தின் மஹா வில்வத்தின் இலையை ஒரு கையளவு எடுத்துக்கொண்டு அதில் அரை டேபிள் ஸ்பூன் கருஞ்சீரகம், அரை டேபிள் ஸ்பூன் வெந்தயம் இவற்றை சேர்த்து 1 லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைக்க வேண்டும்.
 • பின் நீர் கொதித்து பாதியாக வந்தவுடன் வடிகட்டி காலையில் குடித்தால் 48 நாளில் உடம்பில் உள்ள சர்க்கரை அளவை குறைத்து உடம்பை சரியான நிலையில் வைத்துக்கொள்வதற்கு உதவுகிறது.

Vilvam Benefits in Tamil – அல்சர் குணமாக:

வில்வம் மருத்துவ குணங்கள்

 • இந்த மரத்தின் இலை அல்சர் குணமாக உதவுகிறது. 50 கி மகா வில்வத்தின் இலை, அதனுடன் நெல்லிக்காய் பொடி, தான்றிக்காய் பொடி, கடுக்காய் பொடி, ஓமம், மாங்காய் விதை, மஞ்சள் தூள், வெந்தயம், சீரகம் அனைத்தையும் சேர்த்து 20 கி அளவு பொடியாக்கி வைத்து கொள்ளவும். இதை மூன்று வேலையும் உணவிற்கு முன் தண்ணீரில் கலந்து குடிக்க அல்சர் குணமாகும்.

வில்வம் – உடலை பராமரிக்க:

Vilvam Uses in Tamil

 • உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள நினைப்பவர்கள் இந்த மகா வில்வத்தின் வேரினை 50 கி எடுத்து அதனை நன்றாக இடித்து அதனுடன் 1 டேபிள் ஸ்பூன் சோம்பு அதில் மஞ்சள் சேர்த்து பின் 1 லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைக்க வேண்டும்.
 • பின் நீர் கொதித்து பாதியாக வந்தவுடன் வடிகட்டி அதிகாலையில் குடித்தால் உடல் வலிமையடையவும் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லதாக இருக்கும்.

Vilvam Leaves Benefits in Tamil – காசநோய் குணமாக:

Vilvam Uses in Tamil

 • இளைப்பு நோய் உள்ளவர்கள் இந்த வில்வமரத்தின் வேர், தூதுவளை வேர், கண்டங்கத்திரி வேர், முசுமுசுங்கை வேர் அதனுடன் மிளகு மற்றும் மஞ்சள் சேர்த்து வதக்கி 50 கி வரை எடுத்துக்கொள்ள வேண்டும்.
 • பின் வதக்கியதை பொடியாக்கி காலை மற்றும் மாலை தேனுடன் கலந்து சாப்பிட மூச்சு தடை நீங்கி இயல்பான சுவாசம் பெறலாம்.
 • மேலும் இது சைனஸ், சளி, தும்மல், இருமல், ஆஸ்துமா, காசநோய் போன்ற நோய்கள் குணமாவதற்கும் உதவுகிறது.

Vilvam Uses in Tamil – மஞ்சள் காமாலையை குணப்படுத்த:

வில்வம் மருத்துவ குணங்கள்

 • மகா வில்வத்தின் வேர் மற்றும் கீழாநெல்லியின் வேர், நெல்லிமுள்ளி வேர் சேர்த்து வதக்கி 20கி அளவு எடுத்துக்கொண்டு அரை லிட்டர் தண்ணீர் சேர்த்து அது பாதியளவு வரும் வரை சூடாக்க வேண்டும்.
 • பின் அதை 1 வாரம் காலை, மாலை, இரவு குடித்து வர மஞ்சள் காமாலை சரியாகும்.
 • கல்லிரல் சம்மந்தமான நோய்கள் குணமாவதற்கும், கல்லிரல் வழுப்பெறுவதற்கும் உதவுகிறது.
 • வில்வத்தின் இலை அல்லது வில்வத்தின் பொடியை சாப்பிட்டால் அசுத்த இரத்தம் வெளியாகி தூய்மையான இரத்தத்தை பெறலாம்.

வில்வம் வகைகள்:

வில்வம் பழம் மருத்துவம்

 • வில்வம் 12 வகைகளை கொண்டுள்ளது. அதில் மகா வில்வம், காசி வில்வம், ஏக வில்வம் மூன்றும் முக்கியமானவையாகும்.
நொச்சி இலை மருத்துவம்
கசகசா அற்புத மருத்துவ குணங்கள்

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>Natural health tips in tamil