வைட்டமின் டி அதிகம் உள்ள உணவுகள் | Vitamin D Foods in Tamil
Vitamin D Rich Foods: வணக்கம் நண்பர்களே இன்றைய பொதுநலம்.காம் பதிவில் நாம் வைட்டமின் டி குறைபாட்டால் என்ன நோய்கள் வருகின்றன என்பதையும், இந்த வைட்டமின் டி சத்து என்னென்ன உணவுகளில் இருக்கின்றது என்பதையும், வைட்டமின் டி சத்து உள்ள உணவை சாப்பிடுவதால் என்ன நன்மைகள் என்பதை பற்றி பார்க்கலாம்.
வைட்டமின் டி சத்து குறைவாக இருந்தால் இதய நோய், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், நோய் எதிர்ப்பு சக்தி குறைவு, மார்பக புற்று நோய் மற்றும் ஸ்களீரோசிஸ் போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. சரி வாங்க வைட்டமின் டி அதிகம் உள்ள உணவு மற்றும் அதன் நன்மை பற்றி விரிவாக பார்க்கலாம்.
வைட்டமின் டி பயன்கள்
எலும்பு வளர்ச்சியை அதிகரிக்க உதவும் பால் – Vitamin D Containing Foods in Tamil:
தினமும் காலை ஒரு டம்ளர் பால் குடிப்பதன் மூலம் 20% வைட்டமின் டி சத்து நம் உடலில் கிடைக்கிறது. மேலும் பாலில் Vitamin D மற்றும் Calcium அதிகம் நிறைந்துள்ளது. Non-Veg பிடிக்காதவர்கள் பால் அவசியம் சாப்பிட வேண்டிய பொருள். பால் பிடிக்காதவர்கள் தயிராக சாப்பிடலாம். பால் குடிப்பதால் ஆஸ்டியோபோரோசிஸ் என்னு எலும்பு முறிவை தடுக்கவும் மற்றும் உடலை கட்டுக்கோப்பாகவும் பாதுக்காக்கிறது.
முகம் வெள்ளையாக வைட்டமின் ஈ மாத்திரை அழகு குறிப்பு |
இரத்த சோகையை குணப்படுத்த உதவும் ஆரஞ்சு ஜூஸ் – வைட்டமின் டி பழங்கள்:
ஆரஞ்சை நாம் பழமாகவும் சாப்பிடலாம் ஆனால் Juice செய்து குடித்தால் Orange-ல் இருக்கும் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் டி சத்து உடலுக்கு அப்படியே கிடைக்கும். மேலும் சருமத்தை பளபளப்பாகவும், ரத்தசோகையை குணபடுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. ரத்த சோகை உள்ளவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய முக்கியமான உணவு ஆரஞ்சு.
வைட்டமின் பி12 அதிகம் உள்ள உணவுகள் |
சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவும் ஓட்ஸ் – Vitamin D Foods in Tamil
Vitamin d Rich Foods in Tamil: ஓட்ஸில் அதிக அளவு இருக்கும் வைட்டமின் டி, தாதுக்கள் மற்றும் கார்போஹைட்ரெட் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் தருகிறது. ஓட்ஸை காலை உணவாக எடுத்து கொள்வதன் மூலம் கொலஸ்ட்ரால் மற்றும் இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
வைட்டமின் குறைபாடு அறிகுறிகள் & அதற்கான உணவு முறைகள் |
வைட்டமின் டி அதிகரிக்க – புற்று நோய் வராமல் பாதுகாக்கும் காளான்:
காளானில் விட்டமின் டி அதிகம் உள்ளது. காளான் சூரிய ஒளியில் வளர்வதன் மூலம் vitamin B1, B2, B5, காப்பர் மற்றும் தாதுக்கள் போன்ற சத்து அதிகமாக உள்ளது. அல்சைமர்ஸ், இதய நோய், புற்றுநோய் மற்றும் நீரிழிவு போன்ற நோய்கள் வராமல் தடுக்கவும் உதவுகிறது.
இரும்பு சத்து அதிகம் உள்ள உணவுகள் |
Vitamin D Foods in Tamil – உடலை பராமரிக்க உதவும் முட்டை – வைட்டமின் டி பயன்கள்:
முட்டையின் மஞ்சள் கருவில் அதிக அளவு Vitamin D சத்து நிறைந்துள்ளது. அதே சமயத்தில் கொழுப்பு மற்றும் அதிக கலோரியும் நிறைந்துள்ளது. மேலும் புரதம் மற்றும் carbohydrate சத்து நிறைந்துள்ளது. Bodybuilding செய்ய விரும்புவர்களுக்கு முட்டை ஒரு சிறந்த உணவு.
Vitamin D Foods in Tamil – நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் வைட்டமின் டி அதிகரிக்க உதவும் மீன்:
மீனில் அதிக அளவு புரதம், பாஸ்பரஸ், வைட்டமின் டி, கால்சியம் அதிகம் உள்ளது. இதனை நாம் தினமும் கூட உணவில் சேர்த்து கொள்ளலாம். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படாமல் தடுக்கலாம். மேலும் மூளை வளர்ச்சியை அதிகரிக்கவும், கண்பார்வை அதிகரிக்கவும் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.
மேலும் கீரை, ஓக்ரா, காலார்ட்ஸ், சோயாபீன்ஸ, வெள்ளை பீன்ஸ் போன்ற காய்கறிகளில் வைட்டமின் டி அதிக அளவு உள்ளது.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | உடல் ஆரோக்கிய குறிப்புகள் |