வைட்டமின் ஈ கேப்ஸ்யூல் மாத்திரையை பயன்படுத்துவதற்கு முன்பு இதை தெரிந்துகொள்ளுங்கள்

vitamin e capsule side effects in tamil

வைட்டமின் ஈ கேப்ஸ்யூல் தீமைகள்

வணக்கம் நண்பர்களே இன்றைய  ஆரோக்கிய பதிவில் வைட்டமின் ஈ கேப்ஸ்யூல் மாத்திரை  பயன்படுத்துவதால் வரும் பின்விளைவுகளை பற்றித்தான் தெரிந்து கொள்ளப்போகின்றோம். பெரும்பாலும் அதிகமாக பயன்படுத்தப்படும் மாத்திரைகளில் இதுவும் ஒன்றாகும். இந்த வைட்டமின் ஈ கேப்ஸ்யூல் மாத்திரை ஆரம்பத்தில் அதிக நன்மைகளை தந்து வந்தாலும், கடைசியில் பல பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறது.

இந்த வைட்டமின் ஈ கேப்ஸ்யூல் மாத்திரை ஆண்களை விட பெண்கள் அதிகமாக உபயோகித்து வருகிறார்கள். இந்த வைட்டமின் ஈ கேப்ஸ்யூல் சருமத்தை பொலிவுடன் வைத்திருப்பதற்கும் , முக பருக்களை அகற்றுவதற்கும், தலைகளில் அதிகமாக முடி வளருவதற்கும் பயன்படுத்தி வருகிறார்கள், இவை ஆரம்பத்தில் ஒரு சிலருக்கு நல்ல பயன்களை அளித்து வந்தாலும், கடைசியில் அது விளைவுகளை ஏற்படுத்துகிறது.  அவற்றை நம் பதிவில் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க.

முல்தானி மெட்டியின் தீமைகள் பற்றி தெரிந்துகொள்வோம் வாங்க..!

வைட்டமின் ஈ கேப்ஸ்யூல் பக்கவிளைவுகள்:

இந்த வைட்டமின் ஈ கேப்ஸ்யூல் மாத்திரைகளை மருத்துவரின் அனுமதியின்றி ஆண், பெண் இருபாலாரும் அதிக அளவில் உபயோகப்படுத்தும் பொழுது சரும பிரச்சனைகள் ஏற்படுத்துவதற்கு காரணமாக உள்ளது.

வைட்டமின் ஈ கேப்ஸ்யூல் மாத்திரையில் எந்தவிதமான காய்கறிகள், பழங்கள், கீரைகள் என எதுவும் இல்லாமல்,  முழுவதுமாக வேதிப்பொருட்கள் கொண்டு  செய்யப்படுகிறது. இதை நாம்  அழகிற்காக முகத்தில் வெறுமையாக பயன்படுத்துவதால் முகத்தில் எரிச்சல், சருமங்கள் சிவந்த நிறத்தில் காணப்படுதல், கொப்பளம் போன்ற பின்விளைவுகளை ஏற்படுத்துகிறது. இதனை தொடர்ந்து அதிகமாக பயன்படுத்தி  வரும் பொழுது இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்படுத்துவதற்கு காரணமாக உள்ளது.

வைட்டமின் ஈ கேப்ஸ்யூல் மாத்திரையை உணவு முறைகளாக  உட்கொள்ளும் பொழுது  தலைவலி,  வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளும் ஏற்படுகின்றன.

வைட்டமின் ஈ கேப்ஸ்யூல் மாத்திரை தொடர்ந்து சாப்பிட்டு வரும் பொழுது அதிகமான தூக்கம்,   உடலில் மிக பெரிய பாரத்தை சுமந்தது இருப்பது போல இருப்பது இது போன்ற அறிகுறிகள் இருந்தால் வைட்டமின் ஈ கேப்ஸ்யூல் மாத்திரையை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்> ஆரோக்கியமும் நல்வாழ்வும்