வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

வெறும் காலில் நடப்பது நல்லதா கெட்டதா?

Updated On: May 9, 2023 1:35 PM
Follow Us:
walk barefoot benefits in tamil
---Advertisement---
Advertisement

செருப்பு இல்லாமல் நடப்பது நல்லதா..?

ஹாய் நண்பர்களே இன்று நாம் வெறும் காலில் நடப்பது நல்லதா கெட்டதா என்பதை பற்றி பார்க்க போகிறோம். பொதுவாக அனைவரின் வீட்டில் குழந்தைகளுக்கு பரிந்துரைக்கும் ஒரே விஷயம் என்னவென்றால் வெளியில் செல்லும் போது செருப்புகள் அணிந்து செல்ல வேண்டும் என்று சொல்வார்கள். அப்படி இல்லையென்றால் வெளியில் செல்லக்கூடாது என்று சொல்லிவிடுவார்கள். உண்மையில் வெளியில் செருப்பு அணியாமல் நடந்தால் நன்மையா தீமையா என்று அனைவருக்கும் இருக்கும் கேள்விதான் வாங்க அதனையும் படித்து தெரிந்துகொள்வோம்.

வெறும் காலில் நடைபயிற்சி:

செருப்பு இல்லாமல் நடப்பது நல்லதா

பொதுவாக இந்த காலகட்டத்தில் வீட்டிலும் சரி வெளியிலும் சரி ஒரே மாதிரித்தான். வெளியில் செல்லும் போது ஒரு செருப்பு வீட்டிற்குள் செல்லும் போது ஒரு செருப்பு என்று மாறிவந்துவிட்டோம்.

இளமையாக இருக்க இதையும் படியுங்கள்Collagen Rich Foods in Tamil

அதிகபட்சமாக நாம் செருப்புயில்லாமல் இருப்பது தூங்கும் போது மட்டுமே. அதிகம் நபர்கள் செருப்பு போட்டுக்கொண்டால் தான் நோய்கள் நம்மை தீண்டாது. அப்படி ஒரு தவறான கருத்துக்கள் காரணமாக அதிகம் நபர்கள் செருப்புகள் இல்லாமல் இருப்பதில்லை.

பொதுவாக வெறும் காலில் நடந்தோம் என்றால் அது நமக்கு நல்ல சக்திகளை தருகிறது என்று மருத்துவ ரீதியான ஆயுவுகளில் சொல்கிறது.

வெறும் காலில் நடப்பதால் உடலுக்கு தேவையான ஆன்டி ஆக்ஸிடன்ட் அதிகம் கிடைக்கிறது.

வெறும் காலில் நடைபயிற்சி

அதிகமாக நாம் மண், புல் மணல் பரப்பு மேல் நடப்பதால் பூமிக்கும் நமக்கும் இருக்கும் எலக்ட்ரான் உறவு பாலமாக அமைகிறது என்று சொல்கிறார்கள் மருத்துவர்கள்.

நமது பூமிக்கு இயற்கையாக சக்தி இருக்கிறது அது நமக்கு இயற்கையாக சக்தி இருக்கிறது அது நேரடியாக தொடர்புகளில் இருப்பதால் நம் உடல் நோய்களிலிருந்து நம்மை காப்பாற்றுகிறது.

வெறும் காலில் நடைபயிற்சி

பூமியில் இருக்ககூடிய எலக்ட்ரான் எப்படி ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது என்று ஆய்வு அறிஞர்கள் சொல்கிறார்கள்.

அந்த ஆய்வில் மூளை சம்பந்தப்பட்ட நோயாளிகளுக்கு வெறும் காலில் நடக்கவைத்து ஆய்வு செய்ததில் நிறைய மாற்றங்களை கண்டறிந்தார்கள்.

மேலும் ஆய்வு செய்ததில் வெறும் காலில் நடப்பதால் தோல் பராமரிப்பு திறன், மிதமான இதயத்துடிப்பு, மேம்படுத்தப்பட்ட குளுக்கோஸ் கட்டுப்பாடு, மன அழுத்தத்தை குறைகிறது, எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது என்று அந்த ஆராய்ச்சியில் சொல்லப்பட்டிருக்கிறது.

அதுமட்டும்மில்லாமல் சிவப்பு இரத்த அணுக்கள் மேம்பரப்பு சக்தி அதிகரிப்பதை கண்டறிப்பட்டிருக்கிறது. இதன் மூலம் இரத்தத்தில் உள்ள பாகும் தன்மையை குறைக்கிறது.

பாகு தன்மை அதிகமாக இருந்தால் அது இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனை வருவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது. வேலும் வெறும் காலில் நடப்பதால் அந்த நோயிலிருந்து தடுக்கிறது.

காலணிகள் அணியாமல் நடந்தால் அது நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனை வராமலும் தடுக்கிறது என்று ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வெறும் காலில் நடைபயிற்சி

ஒரு நாளுக்கு அரை மணி(1/2) நேரம் நடப்பதால் புற்றுநோய்களுடைய ஆபத்தை குறைக்க முடிகிறது.

அதுமட்டுமில்லாமல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், அதிக எடை, நீரிழிவு பிரச்சனையிலிருந்து நம்மை காக்கிறது.

கூடுதல் நடைப்பயிற்சி மேற்கொள்வதால் நோய் எதிர்ப்பு, உடலில் உள்ள நச்சு நீக்குதல் போன்ற நன்மைகள் நமக்கு கிடைக்கிறது.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> உடல் ஆரோக்கிய குறிப்புகள்
Advertisement

Suvalakshmi

எனது பெயர் சுவலட்சுமி. Pothunalam.com இணையதளத்தில் Senior Content Writer ஆக பணியாற்றுகிறேன். அழகுக்குறிப்பு, ஆன்மீகம், தொழில் போன்ற செய்திகளில் தொடர்ந்து இந்த தளத்தில் எழுதி வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now