1 மாத குழந்தைக்கு பேதி குணமாக பாட்டி வைத்தியம்…!

Advertisement

குழந்தைகளுக்கு பேதி நிற்க

நமது வீட்டில் இருக்கும் குழந்தைகளை எப்போதும் பாதுகாப்பாகவும் மற்றும் ஆரோக்கியமாகவும் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு வீட்டில் உள்ள பெரியவர்களுக்கு தான் இருக்கிறது. பொதுவாக குழந்தைகள் என்றாலே சரியாக சாப்பிட மறுப்பார்கள். அதேபோல சிலநேரத்தில் அவர்கள் சாப்பிட உணவு சரியாக செரிமானம் ஆகாமல் இருக்கும். இவை இரண்டும் ஒன்று சேர்ந்து சில நேரத்தில் வாந்தி மற்றும் பேதி போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதனால் இன்று 1 மாத குழந்தைக்கு பேதி வந்தால் அதனை சரி செய்வதற்கான பாட்டி வைத்தியம் பற்றி தான் தெரிந்ததுக்கொள்ள போகிறோம்.

6 மாத குழந்தைக்கு நோய்யெதிர்ப்பை அதிகரிக்க வைக்கும் உணவு..!

குழந்தை பேதி குணமாக பாட்டி வைத்தியம்:

குழந்தை பேதி குணமாக பாட்டி வைத்தியம்

குழந்தைக்கு பேதி நிற்க செய்ய வேண்டிய பாட்டி வைத்தியம் பற்றி தான் பார்க்கப்போகிறோம்.

தேவையான பொருட்கள்:

  1. மாசிக்காய் பொடி- 1 சிட்டிகை
  2. தாய்ப்பால்- 5 சொட்டு
  3. புதிய அகல் விளக்கு- 1

குழந்தைகளுக்கு பேதி நிற்க:

முதலில் ஒரு புதிய அகல் எடுத்துக்கொண்டு அதனை தண்ணீரில் 1/2 மணி நேரம் ஊறவைத்து விடுங்கள். 1/2 மணி நேரம் கழித்த பிறகு அகலினை சுத்தமாக துடைத்து கொள்ளுங்கள்.

இப்போது அந்த அகலில் தாய்ப்பால் 5 சொட்டு மற்றும் 1 சிட்டிகை மாசிக்காய் பொடி இந்த இரண்டையும் கலந்து கொள்ளுங்கள்.

அதன் பிறகு கலந்து வைத்துள்ள மருந்தை குழந்தையின் நாக்கில் தொட்டு வைத்தால் போதும் குழந்தைக்கு உள்ள வயிற்றுப்போக்கு 3 நாட்களில் விரைவில் சரி ஆகிவிடும்.

இந்த வைத்தியத்தை 1 மாத குழந்தைக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும்.

குழந்தைக்கு பேதி மட்டும் இருந்தால் தான் இந்த மருந்தை நீங்கள் குழந்தைக்கு கொடுக்க வேண்டும்.  (குறிப்பு: மேலே சொல்லப்பட்டுள்ள பாட்டி வைத்தியத்தினை குழந்தை நல மருத்துவரின் ஆலோசனை படி மட்டுமே குழந்தைக்கு கொடுக்க வேண்டும்)

இதையும் படியுங்கள்⇒ 3 மாத குழந்தைக்கு சளி மற்றும் இருமல் குணமாக..!

இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> குழந்தை நலன் 

 

Advertisement