குழந்தை பிறந்து 12 மாதம் வரை என்ன உணவை சாப்பிட கொடுக்கலாம்..!

12 month baby food chart in tamil

12 Month Baby Food Chart in Tamil

தாய்மார்கள் அதிகளவு செய்யும் தவறு என்னவென்றால் பிறந்த குழந்தைக்கு என்ன உணவு கொடுப்பது என்பதில் நிறைய தவறான உணவு முறைகளை பழக்கப்படுத்தி விடுவீர்கள். அது இப்போது அவர்களுக்கு பிரச்சனை இல்லையென்றாலும் பிற்காலத்தில் அது அவர்களுக்கு சத்து குறைபாட்டை கொண்டு வரும். ஆகவே ஒரு குழந்தைக்கு ஊட்டச்சத்துக்கள் என்பது பிறந்த 12 மாதம் உட்கொள்ளவது தான் பிற்காலத்தில் அவர்களுக்கு சத்துக்களை கொடுக்கும். சரி இப்போது பிறந்த குழந்தைக்கு என்ன உணவுகளை சாப்பிட கொடுப்பது என்று தெரிந்துகொள்ளலாம்.

1 Month Old Baby Feeding Schedule in Tamil:

5 Month Old Baby Feeding Schedule in Tamil

பிறந்த குழந்தைக்கு முதல் மாதம் முழுவதுமே தாய் பால் மட்டுமே உணவாக இருக்கவேண்டும். பிறந்த குழந்தைக்கு எந்த ஒரு உணவு பொருட்களையும் சிறிய அளவு கூட கொடுக்கக் கூடாது. 1 மாதம் முழுவதுமே 2 மணி நேரத்திற்கு ஒரு முறை பால் கொடுக்க வேண்டும்.

2 Month Old Baby Feeding Schedule in Tamil:

2 மாதம் முழுவதும் தாய் பால் மட்டுமே கொடுக்கவேண்டும். ஒரு நாளுக்கு 7 முதல் 8 முறை பால் கொடுக்கவேண்டும்.

3 Month Old Baby Feeding Schedule in Tamil:

3 மாதத்தில் தாய் பால் போதுமானது என்று நினைக்கவேண்டாம். ஒழு நாளுக்கு 4 மணி நேரத்திற்கு ஒரு முறை தாய் பால் கொடுக்கவேண்டும்.

4 Month Old Baby Feeding Schedule in Tamil:

இந்த 4 வது மாதம் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று உங்களின் குழந்தைக்கு பழச்சாறுகளை கொடுக்கலாம். அதிலும் ஆரஞ்சு ஜூஸ் குழந்தைக்கு கொடுப்பது நல்லது. ஏதாவது ஒரு ஜூஸ் தேர்ந்தெடுத்து 4 மாதம் கொடுக்கலாம். அதுவும் சுத்தமாக உங்கள் வீட்டில் செய்ததாக இருக்கவேண்டும்.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்க உதவும் 5 உணவுகள்..!

5 Month Old Baby Feeding Schedule in Tamil:

5 Month Old Baby Feeding Schedule in Tamil

இந்த 5 மாதம் மருத்துவரை சந்தித்து குழந்தையின் ஆரோக்கியத்தை தெரிந்துகொண்டு உணவுகளை கொடுக்கலாமா என்று கேட்டுகொண்டு கொஞ்சம் கொஞ்சமாக கொடுக்க ஆரம்பம் செய்யலாம். சர்க்கரைவள்ளிக் கிழங்கு, வாழைப்பழம், ஆப்பிள் போன்றவற்றை அரைத்து, வேண்டுமானால் சிறிது தாய்ப்பால் சேர்த்து கலந்து குழந்தைக்கு சிறிது கொடுக்கலாம்.

6 Month Old Baby Feeding Schedule in Tamil:

நீங்கள் 5 மாதம் கொடுத்த உணவுகளை குழந்தைகள் உட்கொள்ள மறுத்தால் அந்த உணவுகளை குழந்தைகளுக்கு கொடுக்காதீர்கள். அதேபோல் திடமான உணவுகளை தாய் பாலுடன் அரைத்து கொடுக்கலாம்.

7 Month Baby Food Chart Tamil:

ஏழு மாதத்திற்கு பிறகு நன்கு பேஸ்ட் செய்த சாதம், தயிர், மசித்த ஆப்பிள் அல்லது வாழைப்பழம், வேக வைத்து மசித்த காய்கறிகள் போன்றவற்றை கொடுக்கலாம். காய்கறிகளை வேகவைத்து மசித்து கொடுக்கலாம். இதுவும் மருத்துவரின் ஆலோசனை பெற்று செய்யவேண்டும்.

8-9 Month Baby Food Chart in Tamil:

இதுவரை குழந்தைக்கு கொடுத்த உணவுகளை விட உணவின் அளவை சற்று அதிகமாக கொடுக்கலாம். கடையில் விற்கும் பொருட்களை சாப்பிட கொடுக்காதீர்கள். அது குழந்தையின் ஆரோக்கியத்தை கெடுத்துவிடும். முக்கியமாக சாக்லேட், ஜூஸ், சிப்ஸ், கேக் போன்ற உணவுகளை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.

10-11 Month Baby Food Chart in Tamil:

இந்த மாதங்கள் மேல் கூறப்பட்டுள்ள காய்கறிகள் பழங்கள் என அனைத்தையும் சாப்பிடக் கொடுக்கலாம். இது அனைத்துமே மருத்துவரின் ஆலோசனை படி எடுத்துக்கொள்வது நல்லது.

குழந்தைகளின் மூளை வளர்ச்சியை அதிகரிக்க உதவும் 5 உணவுகள் என்னென்ன தெரியுமா..?

 

இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> குழந்தை நலன்