குழந்தையை எந்த மாதத்தில் உட்கார வைக்கலாம்..! Age Of baby Sitting Up..!
Sitting Baby’s Simple Exercise: பொதுநலம்.காம் பதிவில் குழந்தையை எந்த மாதத்தில் உட்கார வைக்க வேண்டும், குழந்தையை எப்படி உட்கார வைக்க வேண்டும் என்று இந்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். சில குழந்தைகள் உட்கார வைத்ததுமே கீழே விழுந்து விடுவார்கள். தாய்மார்கள் அனைவரும் குழந்தையை எந்த மாதத்தில் பாதுகாப்போடு எப்படி உட்கார வைக்க வேண்டும் என்று சில டிப்ஸ்களை நாம் முழுமையாக படித்து தெரிந்துக்கொள்ளுவோம் வாங்க..!
குழந்தை தவழ என்ன செய்ய வேண்டும்? How to crawl my baby easy tips in Tamil..! |
குழந்தையை உட்கார வைக்க டிப்ஸ் 1:
தாய்மார்கள் அனைவரும் தங்களுடைய குழந்தையை 4 மாதம் ஆன பிறகு உட்கார வைத்து பழக்கி விடலாம். அடுத்து குழந்தையை தாய்மார்களின் கால் பகுதியின் இடையில் உட்கார வைத்து பழகலாம்.
கால் இடையில் உட்கார வைத்து பழக்குவதால் குழந்தையின் முதுகு பகுதி உட்கார சுலபமாக இருக்கும். 1 நிமிடம் வரை குழந்தை சாயாமல் உட்காரும்வரை இதை பழக்கி விடலாம்.
குழந்தை சுலபமாக உட்கார டிப்ஸ் 2:
குழந்தை உட்கார நான்கு புறத்திலும் தலையணை வைத்து உட்கார வைக்கலாம். குழந்தையை உட்கார வைத்து பழக, கடைகளில் விற்கும் பொருள்களை வாங்கிக்கூட குழந்தையை உட்கார வைத்து பழகி விடலாம். குறிப்பாக அந்த பொருள் எல்லாம் குழந்தை உட்காரும் வரை மட்டுமே பயன்படும்.
அதன்பிறகு தேவைப்படாது. அதனால் தலையணை பயன்படுத்தி குழந்தையை உட்கார வைப்பது மிகவும் நல்லது. முக்கியமாக குழந்தையை தலையணை மற்றும் கடைகளில் விற்கும் பொருளை வைத்து உட்கார வைக்கும் போது தாய்மார்கள் குழந்தையின் அருகில் கண்டிப்பாக இருக்க வேண்டும். குழந்தை கீழே விழும் நிலை ஏற்படும்.
குழந்தையின் கண் பார்வை திறனை அதிகரிக்கும் உணவுகள்..! |
குழந்தையை உட்கார வைத்து பழக டிப்ஸ் 3:
முந்தைய காலத்தில் குழந்தைகளை பனை ஓலை பெட்டியில் உட்கார வைத்து துணிகளை வைத்து விடுவார்கள். பனை ஓலை பெட்டியில் குழந்தையை உட்கார வைத்து பழகினால் குழந்தைகள் சீக்கிரம் உட்கார ஆரம்பித்துவிடுவார்கள்.
இது போன்று குழந்தையை உட்கார வைத்து பழகினால் தலை நிக்காத குழந்தைக்கு விரைவில் தலை நின்றுவிடும். குழந்தையை உட்கார வைத்துவிட்டு தாய்மார்கள் தனியாக செல்லக்கூடாது.
குழந்தையின் அருகில் இருக்கும்போது குழந்தைக்கு தைரியம் அதிகமாகி அதிக நேரம் உட்கார முயற்சி செய்வார்கள்.
தாய்ப்பாலுக்கு பிறகு முதலில் குழந்தைக்கு கொடுக்கவேண்டிய உணவுகள்..! baby food for 6 months..! |
இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Baby Health Tips Tamil |