குழந்தை வளர்ச்சியில் கவனிக்க வேண்டியவை (Child development in tamil)..!
குழந்தையின் உடல் வளர்ச்சி என்பது… உயரம் மற்றும் எடையில் நடக்கும் மாற்றத்தையும், பிற உடல் மாற்றங்கள் ஏற்படுவதையும் குறிக்கின்றது. அதாவது முடி வளர்கிறது, பற்கள் வளர்கிறது, பற்கள் விழுவது போன்ற அறிகுறிகள் தொடர்கின்றன. இது வளர்ச்சி செயல்முறையின் ஒரு பகுதியாகும்.
ஒரு குழந்தையின் வளர்ச்சியில் ஒரு வயது முதல் மூன்று வயது வரையுள்ள காலம் பெரும்பாலும் கடினமானதாக இருக்கும். குறிப்பாக குழந்தைகளின் உணவு பழக்கம். இவற்றை சரியாக கண்காணிக்க தேவையான சில குறிப்புகளை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம் வாங்க..!
குழந்தைக்கு வரட்டு இருமல் குணமாக 8 கைவைத்தியம்..! |
குழந்தை வளர்ச்சியில் கவனிக்க வேண்டியவை (Child development in tamil)..!
குழந்தை வளர்ச்சியில் கவனிக்க வேண்டியவை டிப்ஸ்: 1
வளர்ச்சிப் பட்டியல்கள் மூலம் ஒரு குழந்தை அதே வயது மற்றும் அதே பாலினம் குழந்தைகளுடன் ஒப்பிடுகையில் எப்படி குழந்தைகள் வளர்ந்து வருகிறது என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம்.
மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், குழந்தைகள் உயரம் மற்றும் எடை அதிகரிப்பு, முறையான சதவிகிதத்தில் உள்ளதா? என்று சரி பார்க்க உதவுகின்றனர்.
குழந்தை வளர்ச்சியில் கவனிக்க வேண்டியவை டிப்ஸ்: 2
குழந்தைகளின் தலை சுற்றுளவு (தலையின் மிகப்பெரிய பகுதியைச் சுற்றியுள்ள நீளம்) மூளை வளர்ச்சியை பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள முடியும்.
ஒரு குழந்தையின் தலையானது மற்ற குழந்தைகளை விட அதிகமாகவோ அல்லது சிறியதாகவோ இருந்தால் அப்போது மருத்துவரை பார்ப்பது மிகவும் அவசியம்.
குழந்தை வளர்ச்சியில் கவனிக்க வேண்டியவை டிப்ஸ்: 3
குழந்தைகளுக்கு சிறிய தொப்பை உண்டாகும். அதனால் அவர்கள் ஆரோக்கியம் மற்றும் வலுவாக வளர தேவையான ஊட்டச்சத்துக்கள் உள்ள உணவை அதிகரித்து, இனிப்பு மற்றும் நிறைய கலோரிகள் நிறைந்த உணவுகளை குறையுங்கள்.
இதுவே அவர்களுடைய சரியான எடை மற்றும் உயரத்தை பராமரிக்க முக்கியமான வழியாகும்.
குழந்தையை சாப்பிட வைக்க அருமையான வழி இதோ..! |
குழந்தை வளர்ச்சியில் கவனிக்க வேண்டியவை டிப்ஸ்: 4
ஒரு குழந்தையின் எடை மற்றும் உயரம் அந்த குழந்தையை போல் உள்ள மற்ற குழந்தைகளுடன் பொருந்தாமல் வித்தியாசமாக இருந்தாலோ அல்லது உயரம் குறைந்தது எடை அதிகரித்து இருந்தாலோ அல்லது உயரம் அதிகரித்து எடை குறைந்து இருந்தாலோ குழந்தை நல மருத்துவரிடம் அணுகி ஆலோசனை பெறவேண்டியது மிகவும் அவசியம்.
குழந்தை வளர்ச்சியில் கவனிக்க வேண்டியவை டிப்ஸ்: 5
இரண்டு வயதிற்கு உட்பட்ட பெரும்பாலான குழந்தைகள் சாதாரண வளர்ச்சிக்கும் மூளை வளர்ச்சிக்கும் கொழுப்புச்சத்து மிக்க பால், கால்சியம், விட்டமின் சி போன்ற சத்துக்கள் மிகவும் பயன்படுகிறது.
எனவே வளரும் குழந்தைகளுக்கு இம்மாதிரியான ஊட்டச்சத்துக்களை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும். இதனால் குழந்தையின் எடை மற்றும் உயரத்தை அதிகரிக்கலாம்.
குழந்தை வளர்ச்சியில் கவனிக்க வேண்டியவை டிப்ஸ்: 6
குழந்தைக்கு 1 வயது எட்டியதும் இரும்பு சத்து குறைப்பாட்டை கண்காணிக்க வேண்டியது மிகவும் அவசியம். இது அவர்களின் உடல், மன மற்றும் நடத்தை சார்ந்த வளர்ச்சியை பாதிக்கும்.
மேலும் இரத்த சோகை பிரச்சனைக்கு வழிவகுக்கும். எனவே குழந்தையின் உணவில் கீரை, மீன், பயர் வகைகள் போன்ற இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை பழக்க வேண்டும்.
குழந்தைக்கு தடுப்பூசி அட்டவணை ..! |
பெற்றோருக்கான அறிவுரை:-
குழந்தைகளை ஓடியாடி விளையாட விடுங்கள். விளையாடாமல் உணவை மட்டுமே உட்கொள்ளும் குளந்தைகளுக்கு எடை மற்றும் உயரத்தில் சரியில்லாத மாற்றங்கள் ஏற்படும். அதேபோல் குழந்தைகளுக்கு உணவை திணிக்காமல் பசிக்கும்போது உணவு உட்கொள்ள பழகுங்கள்.
குழந்தை வளர்ச்சியில் ஆரம்பத்திலிருந்தே அக்கறை கொண்டு கவனித்தால் பிற்காலத்தில் குழந்தை ஆரோக்கியமாக வளர்வார்கள்.
இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Baby health tips in tamil |