குழந்தைகளின் வயிற்றில் உள்ள குடற்புழுக்களை முற்றிலும் நீக்க பாட்டி வைத்தியம்..!

Advertisement

Home Remedies for Stomach Worms in Child in Tamil

இன்றைய பதிவில் குழந்தைகள் வைத்துள்ள அனைத்து தாய்மார்களுக்கும் மிகவும் பயனுள்ள தகவலை பற்றி தான் பார்க்க இருக்கின்றோம். அது என்ன தகவல் என்றால் குழந்தைகளின் வயிற்றில் உள்ள குடற்புழுக்களை முற்றிலும் நீக்க பாட்டி வைத்தியம் பற்றி தான். பொதுவாக சிலர் கூறுவார்கள் என் குழந்தை நன்றாக சாப்பிட மறுக்கிறார்கள் என்றால் அவர்களின் வயிற்றில் குடற்புழுக்கள் உள்ளது. ஆனால் அதனை எவ்வாறு நீக்குவது என்றுதான் தெரியவில்லை என்று. அப்படி உங்களின் குழந்தைகளின் வயிற்றிலும் குடற்புழுக்கள் உள்ளதா அப்படியென்றால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள பாட்டி வைத்தியத்தை ஒரு முறை மட்டும் செய்து பாருங்கள் உங்களின் குழந்தைகள் வயிற்றில் உள்ள குடற்புழுக்கள் அனைத்தும் முற்றிலும் நீங்கிவிடும்.

இதையும் படித்துப்பாருங்கள்=> குழந்தைகளின் மலச்சிக்கலை உடனடியாக சரிசெய்ய இதை மட்டும் செய்யுங்கள்

Home Remedy for Stomach Worms in Tamil:

Home Remedy for Stomach Worms in Tamil

டிப்ஸ் – 1

முதலில் இந்த டிப்ஸிற்கு தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.

  1. சர்க்கரைவள்ளி கிழங்கு – 1
  2. ஆமணக்கு எண்ணெய் – 1 டீஸ்பூன் 
  3. மிளகுத்தூள் – 1 சிட்டிகை 
  4. மஞ்சள்தூள் – 1 சிட்டிகை 

முதலில் நாம் எடுத்து வைத்துள்ள 1 சர்க்கரைவள்ளி கிழங்கின் தோல்களை நீக்கிவிட்டு சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளுங்கள். பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொள்ளுங்கள்.

பிறகு அதனுடன் நாம் நறுக்கி வைத்துள்ள சர்க்கரைவள்ளி கிழங்கு, 1 டீஸ்பூன் ஆமணக்கு எண்ணெய், 1 சிட்டிகை மிளகுத்தூள் மற்றும் 1 சிட்டிகை மஞ்சள்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு வேகவைத்து மசித்துக்கொள்ளுங்கள்.

இதனை ஒரே ஒரு நாள் காலையில் வெறும் வயிற்றுடன் உங்களின் குழந்தைக்கு கொடுத்து பாருங்கள். அவர்களின் வயிற்றில் உள்ள அனைத்து குடற்புழுக்களும் வெளியேறிவிடும்.

இதையும் படியுங்கள்=> உங்கள் குழந்தைகளுக்கு ஏற்படும் வயிறு சம்மந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் இந்த ஒரு தீர்வு போதும்

டிப்ஸ் – 2

முதலில் இந்த டிப்ஸிற்கு தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.

  1. வேப்பிலை கொழுந்து – 1 கைப்பிடி அளவு 
  2. சீரகம் – 1 டீஸ்பூன் 
  3. மஞ்சள்தூள் – 1 சிட்டிகை 
  4. ஏழைக்காய்தூள் – 1 சிட்டிகை
  5. சின்ன வெங்காயம் – 2
  6. தண்ணீர் – 1 டம்ளர் 

முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் 1 டம்ளர் தண்ணீரை ஊற்றி கொள்ளுங்கள். பின்னர் அதனுடன் 1 கைப்பிடி அளவு வேப்பிலை கொழுந்து, 1 டீஸ்பூன் சீரகம், 1 சிட்டிகை மஞ்சள்தூள், 1 சிட்டிகை ஏழைக்காய்தூள் மற்றும் 2 சின்ன வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து நன்கு கொதிக்கவிடுங்கள்.

பின்னர் அதனை வடிக்கட்டி காலையில் வெறும் வயிற்றுடன் உங்களின் குழந்தைக்கு கொடுத்து பாருங்கள். அவர்களின் வயிற்றில் உள்ள அனைத்து குடற்புழுக்களும் வெளியேறிவிடும்.

இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> குழந்தை நலன்

 

Advertisement