3 மாத குழந்தைக்கு சளி மற்றும் இருமல் குணமாக..!

Advertisement

3 மாத குழந்தைக்கு சளி மற்றும் இருமல் குணமாக..!

குழந்தை பிறந்தது முதல் அவர்கள் வளர்ந்து பேசும் வரை, அவர்களுக்கு என்ன பிரச்சனை என்பதை கண்டறிவது என்பது மிகவும் கடினமான, விஷயமாகும். இதை பெற்றோர்கள் தான் கவனித்து, அதற்கான சிகிச்சை முறைகளை மேற்கொள்ள வேண்டும்.

அதாவது குழந்தையின் அழுகையை வைத்து குழந்தை எதனால் அழுகிறார்கள் என்று கவனித்து, அதற்கான சிகிச்சை முறைகளை பின்பற்ற வேண்டும்.

சரி இப்போது 3 மாத குழந்தைக்கு சளி மற்றும் இருமல் பிரச்சனைக்கு வீட்டு மருத்துவ குறிப்புகள் என்னென்ன உள்ளது என்பதை பற்றி படித்தறிவோம் வாங்க…

குழந்தைக்கு வரட்டு இருமல் குணமாக 8 கைவைத்தியம்..!

3 மாத குழந்தைக்கு சளி மற்றும் இருமல் குணமாக..!

தாய்ப்பால்:-

குழந்தைகளுக்கு 6 மாதம் வரை தாய் பால் மட்டுமே சிறந்த உணவு. தாய்ப்பாலில் உள்ள ஆண்டிபயாடிக் குழந்தைகளுக்கு ஏற்படும் அனைத்து ஆரோக்கிய பிரச்சனைகளை குணப்படுத்த உதவுகிறது.

தாய்ப்பால் வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றுகளில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கிறது.

எனவே 3 மாத குழந்தைக்கு சளி (newborn baby cold home remedies) மற்றும் இருமல் குணமாக குழந்தையின் இரு மூக்கிலும் சில துளிகள் இடுவதன் மூலம் இந்த பிரச்னையை சரி செய்து விடலாம்.

கல் உப்பு:

3 மாத குழந்தைக்கு சளி (3 matha kulanthai sali) மற்றும் இருமல் குணமாக (newborn baby cold home remedies),  ஒரு தேக்கரண்டி கல் உப்பை மிதமான சூட்டில் இருக்கும் கடுகு எண்ணெயுடன் சேர்த்து குழந்தையின் மார்பு மற்றும் முதுகு பகுதியில் மசாஜ் செய்யவும்.

பிறகு குழந்தையை பருத்தி துணி அல்லது போர்வையால் போர்த்தி விடுங்கள். இந்த முறை உங்கள் குழந்தைக்கு கதகதப்பான சூழலை தரும்.

மேலும் கூடிய விரைவிலேயே 3 மாத குழந்தையின் சளி மற்றும் இருமல் குணமாகும்.

குங்குமப்பூ:

குழந்தைகளுக்கு ஏற்படும் சளிக்கு குங்குமப்பூ ஒரு மிக சிறந்த மருந்தாக விளங்குகிறது. இது 3 மாத குழந்தைக்கு சளி, இருமல், நெஞ்செரிச்சல் மற்றும் காய்ச்சலை குணப்படுத்த உதவுகிறது. பெரியவர்கள் குங்குமப்பூவை பாலில் கலந்து குடிக்கலாம்.

ஆனால், குழந்தைகளுக்கு அப்படி கொடுக்க முடியாது.

அதற்கு பதிலாக, சிறிது குங்குமப்பூவை சில துளி தண்ணீர் சேர்த்து அரைத்து குழந்தையின் தலை, மார்பு, தொண்டை மற்றும் பாதங்களில் தடவலாம். இதை தினமும் செய்து வர சிறந்த பலன் தரும்.

இரண்டு மாத குழந்தைக்கு மலச்சிக்கலா அப்படி என்றால் இதை பண்ணுங்க..!

பூண்டு:-

3 மாத குழந்தைக்கு சளி (newborn baby cold home remedies) மற்றும் இருமல் பிரச்சனைக்கு பூண்டு ஒரு சிறந்த நிவாரண பொருளாக விளங்குகிறது.

பூண்டின் சில பற்களை எடுத்து அதனை கடுகு எண்ணெயில் வேகவைத்து, அந்த எண்ணெயை குழந்தையின் முதுகு, கழுத்து மற்றும் மார்பு பகுதியில் நன்றாக தடவி விடவும்.

பின்பு மசாஜ் செய்ய வேண்டும். இந்த எண்ணெய் பாக்ட்டீரியாக்களுக்கு எதிராக செயல்படும் தன்மை கொண்டுள்ளதால் அது சளிக்கு காரமான பாக்ட்டீரியக்களை அழிக்கவும் உதவுகிறது.

எனவே இந்த முறையை பின்பற்றுவதினால் 3 மாத குழந்தைக்கு சளி மற்றும் இருமல் பிரச்சனை சரியாகும்.

குறிப்பு எண்ணெய் மிதமான சூட்டில் இருக்க வேண்டியது மிகவும் அவசியம்.

ஓமம்:-

பாக்டீரியாகளுக்கு மற்றும் வைரஸ் எதிராக செயல்படும் பண்புகளை ஓமம் கொண்டுள்ளது.

வெறும் பாத்திரத்தை அடுப்பில் வைத்து அவற்றில் சிறிதளவு ஓமத்தை சேர்த்து வறுக்கவும். பின் அதை சுத்தமான பருத்தி துணியில் போட்டு, மூட்டை போல் கட்டி கொள்ளவும்.

அந்த மூட்டையின் சூடு குழந்தை தாங்கும் வெப்பநிலைக்கு இருக்க வேண்டியது மிகவும் அவசியம், பின்பு அந்த மூட்டையை குழந்தையின் மார்பு, முதுகு, உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்களில் ஓத்திடம் கொடுக்க வேண்டும்.

இதை மூட்டையை குழந்தையின் மூக்கின் அருகில் வைப்பது, அவர்களின் சுவாசத்தின் வழியில் உடலிற்குள் சென்று நல்ல பலனை தரும்.

பொறுப்பு துறப்பு:

3 மாத குழந்தைக்கு சளி மற்றும் இருமல் குணமாக மேல் கூறப்பட்டுள்ள அனைத்து வைத்திய குறிப்புகளையும் குழந்தை நல மருத்துவர்களின் ஆலோசனைகளை பெற்று, பின்பு மேற்கொள்ளவும். நன்றி நண்பர்களே..!

 

இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> குழந்தை நலன் 
Advertisement