குழந்தை ஊனமுடன் பிறக்க என்ன காரணம்..! Reason Of handicap Babies..!
Reason For handicap Baby Born: வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவில் குழந்தை பிறக்கும் போது ஊனமாக பிறப்பதற்கான காரணம் பற்றித்தான் பார்க்க போகிறோம். தாய்மார்கள் அனைவருமே தன்னுடைய குழந்தைகள் தான் செல்வம் என்று பலரும் நினைத்து கொண்டிருப்பார்கள். குழந்தைகளுக்கு எந்த வித நோய் பாதிப்பும் இல்லாமல் அவர்களை பெற்று எடுப்பதில் தாய்மார்கள் அனைவருமே மிகுந்த கவனிப்புடன் இருப்பார்கள். குழந்தைகளை பெற்று எடுப்பதோடு இல்லாமல் அவர்களை இந்த உலகில் எந்த குறைபாடு இல்லாமலும் வளர்ப்பதில் தனி கவனம் செலுத்த வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். சில குழந்தைகள் மன வளர்ச்சியுடனும், உடல் குறைபாட்டுடனும் பிறப்பார்கள். குழந்தை குறைபாட்டுடன் பிறக்க என்ன காரணம் என்று விரிவாக படித்து தெரிந்துக்கொள்ளலாம்..!
குழந்தை தலை சரியான வடிவம் பெற..! |
தாய்மார்களுக்கு போலிக் அமில குறைபாடு:
கருவில் வளர்ந்து வரும் குழந்தைகளுக்கு மிகவும் முக்கியமான சத்து வைட்டமின் பி ஆகும். வைட்டமின் பி சத்து குழந்தைகளின் வளர்ச்சி ஊட்டத்திற்கு மிகவும் உதவியாக இருக்கிறது. பிரசவ காலத்தில் உள்ள பெண்கள் கண்டிப்பாக போலிக் அமிலம் நிறைந்த மாத்திரைகளை எடுத்துக்கொள்வது மிக அவசியம்.
கர்ப்பிணிகளுக்கு வைட்டமின் பி 12, போலிக் அமிலத்தில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் குழந்தை ஊனமாக பிறக்க வாய்ப்புள்ளது. இந்த சத்தானது அதிகமாக கீரை மற்றும் தானியம் வகைகளில் அதிகமாக உள்ளது.
பயோட்டின் சத்து இருக்க வேண்டும்:
கருவில் வளரும் குழந்தைக்கு மிகவும் முக்கியமான சத்து பயோட்டின். இந்த சத்துக்கள் குறைபாடாக இருந்து பெரிய விளைவுகள் ஏற்படுத்தாமல் இருந்தாலும் கை குழந்தைகளுக்கு குறைபாட்டுடன் கூடிய வளர்ச்சி, குழந்தைக்கு நரம்பியல் சம்மந்த பிரச்சனைகள் வரக்கூடும்.
பிறக்கும் போது இருக்கக்கூடிய குழந்தையின் வளற்சிதை மாற்றம் நாம் எடுத்துக்கொள்ளும் உணவின் மூலம் பயோட்டின் தேவையான அளவிற்கு எடுத்துக்கொள்ளாவிட்டாலும் பயோட்டின் குறைபாடுகளின் விளைவினை காட்டிவிடும்.
மரபணு குறைபாட்டால் வரும் உடல் குறைபாடுகள்:
மனித குலத்தில் பாரம்பரியமாக இருந்து வரும் மன குறைபாடுகள், மரபணு குறைபாடுகள் என்று சொல்லக்கூடிய நோய் நம் உள்ள நலனை பாதிப்படைய செய்வதற்கு மிக முக்கிய காரணமாக உள்ளது. குழந்தை உடல் குறைபாட்டுடன் பிறக்க இதுவும் முக்கிய காரணமாகும்.
பிறந்த குழந்தை நன்றாக தூங்க வைப்பது எப்படி..?Baby Sleeping Tips in Tamil..! |
தாய்மார்களின் உடல் இரத்த அளவு குறைதல்:
தாய்மார்களின் உடலில் இரத்த அளவானது குறையும் போது கருவில் உள்ள குழந்தையின் உடல் வளர்ச்சி பாதிப்புகள் அடைந்து குழந்தை உடல் குறைபாட்டுடனும், உடல் ஊனமாக பிறப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது.
குறிப்பாக இரத்த சோகை, உடல் இரத்தத்தில் கால்சியம் குறைபாடுகள் இருந்தாலும் கூட குழந்தை பிறப்பில் குறைபாடுகள் இருக்க அதிக வாய்ப்பு இருக்கிறது.
மன அழுத்தம் ஏற்படாமல் இருக்க வேண்டும்:
பெண்கள் கர்ப்ப காலத்தில் இருக்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். தாய்மார்கள் எப்படி உள்ள மனநிலையில் இருக்கிறார்களோ அதுபோன்று தான் கருவில் உள்ள குழந்தையும் வளரும். கர்ப்ப காலத்தில் இருக்கும் தாய்மார்கள் உடலை எப்போதும் சந்தோசமாகவும், பாதுகாப்பாகவும் வைத்திருக்க வேண்டும்.
தாய்மார்கள் இது போன்ற நிலையில் இல்லாமல் இருந்தால் குழந்தை உடல் குறைபாட்டுடன் பிறக்க வாய்ப்புண்டு. தாய்மார்கள் அனைவர்க்கும் இந்த பதிவு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.
தாய்ப்பாலுக்கு பிறகு முதலில் குழந்தைக்கு கொடுக்கவேண்டிய உணவுகள்..! baby food for 6 months..! |
இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Baby Health Tips Tamil |