2 நிமிடத்தில் தேங்காயில் பூண்டு சேர்த்து இதுபோல் சட்னி செய்து சாப்பிட்டு பாருங்கள்..!

Advertisement

பூண்டு தேங்காய் சட்னி

நண்பர்களே வணக்கம் தினமும் ஒரே விதமான சட்னி செய்து அலுத்து போய்ட்டா இனி கவலை வேண்டாம். Pothunalam.com பதிவில் வெவ்வேறு விதமாக சட்னி வையான சட்னி வகைகளை பதிவு செய்து வருகிறோம்.அதில் உங்களுக்கு பிடித்ததை செய்து சாப்பிடுங்கள். இன்று புதியதாக தேங்காயில் பூண்டு சேர்த்து ஒரு சட்னி எப்படி செய்வது என்று தெரிந்துகொள்ள போகிறோம். கொலஸ்டரால் அதிகம் உள்ளவர்கள் தேங்காய் சட்னி சாப்பிடுவதை விரும்புவதில்லை. ஆனால் ஒரு சிலருக்கு தேங்காய் சட்னி என்றால் மிகவும் பிடிக்கும். அவர்களுக்கு இந்த பதிவு உதவியளிக்கும்.

பூண்டு தேங்காய் சட்னி செய்ய தேவையான பொருட்கள்:

  1. துருவிய தேங்காய் – 1 கப்
  2. வரமிளகாய் – 3 அல்லது நான்கு
  3. பூண்டு – 3 அல்லது 4 போதுமானது
  4. உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை:

முதலில் ஒரு மிக்சி  ஜாரை எடுத்துக்கொள்ளவும் அதன் பின் நாம் எடுத்துவைத்த தேங்காய், வரமிளகாய், பூண்டு ஆகியவற்றை சேர்க்கவும். பின்பு இந்த மூன்றையும் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.

பின் உங்களுடைய தேவைக்கேற்ப உப்பு சேர்த்து அதில் தண்ணீர் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.

பின்பு அதனை ஒரு ஒரு கிண்ணத்தில் தனியாக எடுத்துவைக்கவும். பின் ஒரு கடாயை எடுத்து அதில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் கடுகு மற்றும் உளுத்தம்பருப்பு சேர்த்து பொரிந்த பின் அதில் ஒரு சிறிய அளவில் பெரிய வெங்காயம் எடுத்து நறுக்கி அதில் சேர்க்கவும்.

அதன் கூடவே கருவேப்பிலை சேர்த்து வருத்தவுடன் தனியாக எடுத்துவைத்த சட்னியை அதில் சேர்க்கவும். நன்றாக கலந்த பின் அதனை மொறு மொறுவென்று  தோசை ஊற்றி அதில் இந்த சட்னியை ஊற்றி சாப்பிட்டால் அடாடா அருமையாக இருக்கும்.

தக்காளி இல்லாமல் சட்னி செய்வது எப்படி?

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Samayal kurippu tamil
Advertisement