ஆந்திரா ஸ்பெஷல் கொண்டா ரெட்டி சிக்கன் பிரியாணி செய்வது எப்படி..?

Andhra Style Chicken Biryani Recipe in Tamil 

அனைவருக்கும் இனிய வணக்கங்கள் நண்பர்களே..! அசைவ உணவு பிரியர்கள் அனைவருக்கும் மிக பிடித்த உணவு என்றால் அது பிரியாணி தான். அதிலும் சிக்கன் பிரியாணி என்றால் சொல்லவா வேண்டும். ஒவ்வொரு நபருக்கும் மிகவும் பிடித்த உணவுப்பட்டியல் என்று ஒன்று கண்டிப்பாக இருக்கும். அந்த உணவுப்பட்டியலில் கண்டிப்பாக சிக்கன் பிரியாணியும் இடம் பெற்றிருக்கும். அப்படி அனைவருக்கும் மிக பிடித்த உணவான சிக்கன் பிரியாணியை இப்படி ஒருமுறை செய்து சுவைத்து பாருங்கள்.

Andhra Chicken Biryani Recipe in Tamil:

Andhra style biryani recipein tamil

முதலில் இந்த ஆந்திரா ஸ்பெஷல் கொண்டா ரெட்டி சிக்கன் பிரியாணி செய்வதற்கு தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.

  1. சிக்கன் – 1 கிலோ 
  2. பாசுமதி அரிசி – 2 கப் 
  3. பட்டை – 2 
  4. கிராம்பு – 5
  5. ஏலக்காய் – 5
  6. கல்பாசி – 2
  7. ஜவித்ரி – 2
  8. கசகசா – 2 டேபிள் ஸ்பூன் 
  9. மிளகு – 2 டேபிள் ஸ்பூன்
  10. தனியா – 3 டேபிள் ஸ்பூன்
  11. பூண்டு – 10 பற்கள் 
  12. சின்ன வெங்காயம் – 20
  13. கஸ்த்தூரிமேத்தி – 2 டேபிள் ஸ்பூன்
  14. காய்ந்த மிளகாய் – 10 
  15. மஞ்சள்தூள் – 2 டீஸ்பூன்  
  16. சீரகம் – 2 டீஸ்பூன் 
  17. சோம்பு – 2 டீஸ்பூன்
  18. பெரிய வெங்காயம் – 4
  19. தக்காளி – 2
  20. கொத்தமல்லி – 1 கைப்பிடி அளவு 
  21. புதினா – 1 கைப்பிடி அளவு
  22. எலுமிச்சை சாறு- 1 டீஸ்பூன்
  23. பச்சைமிளகாய் – 4
  24. தயிர் – 2 டேபிள் ஸ்பூன் 
  25. நெய் – 2 டேபிள் ஸ்பூன் 
  26. எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்
  27. உப்பு – தேவையான அளவு    
  28. தண்ணீர் – தேவையான அளவு

இதையும் படியுங்கள்=> மிகவும் ருசியான யாழ்ப்பாணம் சிக்கன் வறுவல் செய்வது எப்படி..?    

செய்முறை: 

ஸ்டேப் – 1

முதலில் நாம் எடுத்துவைத்துள்ள 2 கப் பாசுமதி அரிசியை தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 1 மணிநேரம் நன்கு ஊறவைத்துகொள்ளுங்கள். அதேபோல் நாம் எடுத்துவைத்துள்ள 10 காய்ந்த மிளகாவையும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 1 மணிநேரம் நன்கு ஊறவைத்துகொள்ளுங்கள்.

ஸ்டேப் – 2

அடுத்து ஒரு மிக்சி ஜாரில் 2 பட்டை, 2 கல்பாசி, 2 ஜவித்ரி, 5 கிராம்பு, 5 ஏலக்காய் , 2 டேபிள் ஸ்பூன் கசகசா, 2 டேபிள் ஸ்பூன் மிளகு மற்றும் 3 டேபிள் ஸ்பூன் தனியா ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளுங்கள்.

ஸ்டேப் – 3

பிறகு அதனுடன் 2 டேபிள் ஸ்பூன் கஸ்த்தூரிமேத்தி, 10 பற்கள் பூண்டு, 20 சின்ன வெங்காயம், 2 டீஸ்பூன் மஞ்சள்தூள், 2 டீஸ்பூன் சீரகம், 2 டீஸ்பூன் சோம்பு மற்றும் ஊறவைத்துள்ள 10 காய்ந்த மிளகாயையும் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு மசாலா பதத்திற்கு அரைத்து எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்=> கேரளா ஸ்டைல் டேஸ்டி சிக்கன் ரோஸ்ட்

ஸ்டேப் – 4

பின்னர் அடுப்பில் குக்கரை வைத்து அதில் 4 டேபிள் ஸ்பூன் எண்ணெய் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றிக்கொளுங்கள். பிறகு அதனுடன் 4 பெரிய வெங்காயம், 2 தக்காளி, 1 கைப்பிடி அளவு கொத்தமல்லி மற்றும் 1 கைப்பிடி அளவு புதினா ஆகியவற்றை நன்கு பொடி பொடியாக நறுக்கி சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள்.

ஸ்டேப் – 5

இவையெல்லாம் நன்கு வதங்கியவுடன் நாம் அரைத்துவைத்துள்ள மசாலாவையும் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளுங்கள். பிறகு அதில் 2 டேபிள் ஸ்பூன் தயிர், 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 4 பச்சை மிளகாய் ஆகியவற்றையும் சேர்த்து  வதக்கிக் கொள்ளுங்கள்.

ஸ்டேப் – 6

இவையெல்லாம் நன்கு வதங்கிய பிறகு அதனுடன் 1 கிலோ சிக்கனை சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு வேக வைத்துக் கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்=>ஹோட்டல் ஸ்டெயில் சிக்கன் நூடுல்ஸ் 10 நிமிடத்தில் செய்வது எப்படி?

ஸ்டேப் – 7

Andhra chicken biryani recipe in tamil

சிக்கன் நன்கு வெந்த பிறகு அதனுடன் நாம் ஊறவைத்துள்ள 2 கப் பாசுமதி அரிசியையும் சேர்த்து தேவையான தண்ணீர் ஊற்றி குக்கரின் மூடியை போட்டு மூடி 2 விசில் வரும்வரை நன்கு வேகவைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

இப்பொழுது நமது ஆந்திரா ஸ்பெஷல் கொண்டா ரெட்டி சிக்கன் பிரியாணி ரெடி வாங்க சுவைக்கலாம். நீங்களும் இந்த ஆந்திரா ஸ்பெஷல் கொண்டா ரெட்டி சிக்கன் பிரியாணியை உங்கள் வீட்டில் செய்து சுவைத்துப்பாருங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்