உடலுக்கு ஆரோக்கியமான பீட்ரூட் கட்லெட் ஒரு முறை இப்படி செய்து பாருங்கள்.

Advertisement

Beetroot Cutlet Recipe in Tamil

வணக்கம் நண்பர்களே இன்றைய சமையல் பதிவில் மிகவும்  சுவையான பீட்ரூட் கட்லெட் எப்படி செய்வது என்று தான் தெரிந்துகொள்ளப் போகின்றோம். பொதுவாக பீட்ருட்டில் அதிகமான சத்துக்கள் நிறைந்துள்ளன, இதனை குழந்தைகளுக்கு சமைத்து கொடுத்தால், இதனை அவர்கள் விரும்பி சாப்பிடவே மாட்டார்கள்,  எனவே  குழந்தைகளுக்கு  பிடித்த அளவில் மிகவும் சுவையாக இந்த பீட்ருட் கட்லெட் எப்படி செய்வது என்று தெரிந்து கொள்வோம்.

இதனை செய்து குழந்தைகளுக்கு ஸ்கூல் போகும் பொழுது ஸ்நாக்ஸாகவும் கொடுக்கலாம், அப்படி இல்லை என்றால்  ஈவினிங் ஸ்நாக்ஸாகவும்  செய்து கொடுக்கலாம்.  மேலும் அவற்றை எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க.

மாலை நேரத்தில் டீயுடன் இந்த ஸ்னாக்ஸ் செஞ்சி சாப்பிட்டு பாருங்க..!

பீட்ரூட் கட்லெட் செய்ய தேவையான பொருட்கள்:

  1. பீட்ரூட்-2 சீவியது 
  2. சோம்பு – 1 டீஸ்பூன்
  3. எண்ணெய்- 1 டீஸ்பூன்
  4. பச்சை மிளகாய்- 1 சிறியதாக நறுக்கியது
  5. வெங்காயம்-1 சிறியதாக நறுக்கியது. 
  6. இஞ்சி  பூண்டு விழுது –1 டீஸ்பூன் 
  7. மஞ்சள் தூள்- சிறிதளவு
  8. கரம்  மசாலா- 1/2 டீஸ்பூன் 
  9. மிளகாய்த் தூள்- 1 டீஸ்பூன் 
  10. உப்பு- தேவையான அளவு
  11. உருளை கிழங்கு- 2 வேக வைத்தது
  12. கொத்தமல்லி – சிறிதளவு 
  13. கருவேப்பிலை- 1 கொத்து நறுக்கியது
  14. கோதுமை மாவு (அல்லது) சோளமாவு – 1 கப் 
  15. பிரட்– தூள் 

பீட்ரூட் கட்லெட் செய்வது எப்படி.?

ஸ்டேப்:1

முதலில் ஒரு நான்ஸ்டிக் பேன் எடுத்துக் கொள்ள வேண்டும். அடுத்தாக  பேன் சூடானதும், அதில் சிறிதளவு எண்ணெய் சேர்க்க வேண்டும், எண்ணெய் சூடானதும், சோம்பு சேர்க்க வேண்டும்

ஸ்டேப்:2

சோம்பு பொரிந்து வந்ததும் , அதில்  நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி  பூண்டு விழுது போன்றவற்றை நன்றாக கலந்து விட வேண்டும், அதன் பிறகு துருவி வைத்த பீட்ரூட்டை அதில் சேர்த்து வதக்க வேண்டும்.

ஸ்டேப்:3

பீட்ருட்டை வதக்கிய பிறகு அதில் மஞ்சள்தூள், கரம் மசாலா, மிளகாய்த்தூள் கடைசியாக உப்பு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். தண்ணீர்  சேர்க்காமல் வதக்க வேண்டும்.  பீட்ருட்டில் இருக்கும் தண்ணீர் இல்லாமல்  கெட்டி பதம் வரும் வரை வதக்கி வேக விட வேண்டும்.

ஸ்டேப்:4

பீட்ருட் நன்றாக வெந்த பிறகு அதில் வேக வைத்த உருளைக் கிழங்கை  அதில் சேர்த்து மசித்து விட வேண்டும்.  பிறகு, அதில் கொத்தமல்லி, கருவேப்பிலை சேர்த்து கலந்து விட்டு, அடுப்பை அணைக்க வேண்டும். இப்பொழுது கட்லட் மசாலா தயார். 

ஸ்டேப்:5

நாம் செய்து வைத்திருந்த கட்லெட் மசாலாவை அடுப்பில் இருந்து இறக்கிய  பிறகு, உங்களுக்கு தேவையான வடிவத்தில் அதை உருட்டி, தட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஸ்டேப்:6

அடுத்ததாக ஒரு கிண்ணத்தை எடுத்து கொண்டு அதில் சோளமாவு அல்லது மைதாமாவு இதில் ஒன்றை எடுத்துக் கொண்டு, அதில் தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல்  செய்து கொள்ள வேண்டும்.  அதன் பிறகு பிரட் தூள் ஒரு தட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும். 

ஸ்டேப்:7

இப்பொழுது ஒரு நான்ஸ்டிக் பேனை எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் வைத்து, அதில் எண்ணெய் சேர்க்க வேண்டும், இப்பொழுது நாம்  தட்டி வைத்த கட்லட் மசாலாவை, கலந்து வைத்த பேஸ்ட்டில் பிரட்டி எடுக்க வேண்டும், பிரட்டி எடுத்ததும், பிரட் தூள்களை அதில் தூவ வேண்டும். தூவிய பிறகு அதை எண்ணெயில் 2 பக்கமும்  பொறித்து எடுத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது பீட்ரூட் கட்லெட் தயார் வாங்க சாப்பிடலாம். 

5 நிமிடத்தில் மொறுமொறுனு ஸ்னாக்ஸ் செஞ்சி பாருங்க..!

 

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்
Advertisement