Bread Upma Recipe in Tamil!
பெரும்பாலும் காலை உணவுக்கு சீக்கிரமா செய்ய வேண்டும் என்று உப்புமாவைதான் தேர்ந்தெடுக்கிறோம். அதிலும் ரவை உப்புமா தான் அதிகம் செய்கிறோம். ஆனால் பலருக்கு ரவை உப்புமா பிடிப்பதே இல்லை. ரவை வைத்து மட்டுமா உப்புமா செய்ய முடியும். பிரட்டினை பயன்படுத்தியும் உப்புமா செய்யலாமே? பிரட் உப்புமா எப்படி சீக்கிரமாக எல்லாருக்கும் பிடிக்கும் வகையில் செய்வது என்பதனை பற்றி இப்பதிவில் பார்ப்போம்!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
தேவையான பொருட்கள்:
- பிரட் – 10 துண்டுகள்
- ஆயில் – 1 டேபிள் ஸ்பூன்
- வெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
- கரம் மசாலா – 1 டீஸ்பூன்
- கடுகு – 1/4 டீஸ்பூன்
- உளுத்தம் பருப்பு – சிறிதளவு
- சீரகம் – 1/4 டீஸ்பூன்
- வெங்காயம் பெரியது – 1
- பச்சை மிளகாய் – 1
- முந்திரி – சிறிதளவு
- கருவேப்பிலை – 1 கொத்து
- இஞ்சி, பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன்
- மஞ்சள் தூள் – சிறிதளவு
- தக்காளி – 1
- கேரட் – 1
செய்முறை:
ஸ்டேப் 1:
முதலில் பிரட் துண்டுகளை சதுர வடிவங்களாக வெட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.மற்றும் வெங்காயம், தக்காளியினை சிறு சிறு பொடி துண்டுகளாக நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.மேலும் கேரட்டினை துருவி எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஸ்டேப் 2:
வெட்டி வைத்துள்ள பிரட் துண்டுகளை லேசாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
ஸ்டேப் 3:
பிறகு காடாயில் தேவைக்கேற்ப ஆயில் ஊற்ற வேண்டும். அதனுடன் சிறிதளவு வெண்ணெயும் சேர்க்க வேண்டும். பிரட் ரெசிபிகளுக்கு வெண்ணெய் சேர்ப்பதனால் சுவையானது நன்றாக இருக்கும்.
இதையும் படியுங்கள்=>பிரட் சில்லி செய்வது எப்படி | Bread Chili Recipe in Tamil!
ஸ்டேப் 4:
எண்ணெய் காய்ந்தது அதனுடன் கடுகு, சிறிது உளுத்தம் பருப்பு மற்றும் சீரகத்தினை சேர்க்க வேண்டும். பின் அதனை நன்கு கலந்து விட வேண்டும்.
ஸ்டேப் 5:
பிறகு அதனுடன் முந்திரிகளை சேர்த்து நன்கு கலந்து விடவும். அதனுடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தினையும் சேர்க்க வேண்டும்.
ஸ்டேப் 6:
பிறகு அதனுடன் பச்சை மிளகாய் மற்றும் கருவேப்பிலையை சேர்த்து வெங்காயம் நன்றாக வதங்கும் வரை கலந்து விட வேண்டும்.
ஸ்டேப் 7:
வெங்காயம் வதங்கிய பின்னர் அதனுடன் இஞ்சி, பூண்டு விழுது, மஞ்சள் தூள் சேர்த்து கலந்து விட வேண்டும். இஞ்சி, பூண்டு விழுதின் பச்சை வாசம் போகும் வரை நன்கு வதக்க வேண்டும்.
ஸ்டேப் 8:
இஞ்சி, பூண்டு விழுது வதங்கிய உடன் அத்துடன் தக்காளி, மற்றும் கேரட்டினை சேர்க்க வேண்டும். தக்காளி, கேரட் வதங்கிய பின்னர் அதனுடன் கரம் மசாலா மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து விட வேண்டும்.
இதையும் படியுங்கள்=> 5 நிமிடத்தில் காலை உணவு ரெடி!
ஸ்டேப் 9:
பின்னர் அதனுடன் 1/4 கப் அளவிற்கு தண்ணீர் சேர்க்க வேண்டும். கலந்து விட வேண்டும் பின் அதனுடன் வறுத்து வைத்துள்ள பிரட் துண்டுகளை சிறுது நேரம் கலந்து இறக்கி விட வேண்டும். சூடான பிரட் உப்புமா தயார்!
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள் |