வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

டேஸ்டா செட்டிநாடு இறால் கிரேவி செய்யணுமா..! அப்போ இதை பாருங்கள்..!

Updated On: November 23, 2022 1:00 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

செட்டிநாடு இறால் கிரேவி

ஹாய் நண்பர்களே..! நீங்கள் பல வகையான கிரேவி ரெசிபிகள் சாப்பிட்டு இருப்பீர்கள். மட்டன் கிரேவி, சிக்கன் கிரேவி, முட்டை கிரேவி, நண்டு கிரேவி, மீன் கிரேவி இதுபோன்ற கிரேவி வகைகளை சமைத்து அலுத்துபோகிருக்கும். அதனால் சமைக்கும் தாய்மார்களுக்கும் கிரேவி பிரியர்களுக்கும் இன்றைய பதிவானது மிகவும் உதவியானதாக இருக்கும். செட்டிநாடு சமையல் என்றால் சொல்லும் போதே நாவிற்கு சுவை தரும். அத்தகைய செட்டிநாடு இறால் கிரேவி சூப்பரா செய்வது எப்படி என்று இன்றைய சமையல் குறிப்பு பதிவை படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்⇒ செட்டிநாடு மட்டன் கிரேவி சுவையாக இப்படி ஒருமுறை செய்து பாருங்கள்..!

செட்டிநாடு இறால் கிரேவி செய்ய தேவையான பொருட்கள்:

  • இறால்- 1/2 கிலோ 
  • சோம்பு- 1/2 ஸ்பூன்
  • சின்ன வெங்காயம்- 1/2 கப் 
  • தக்காளி- 2
  • பச்சை மிளகாய்- 3
  • மஞ்சள் தூள்- 1/2 ஸ்பூன்
  • எண்ணெய்- தேவையான அளவு 
  • உப்பு- தேவையான அளவு 
  • கறிவேப்பிலை- ஒரு கையளவு

வறுத்து அரைப்பதற்கு தேவையான பொருட்கள்:

  • சோம்பு- 1/2 ஸ்பூன் 
  • மிளகு- 1 ஸ்பூன் 
  • பூண்டு- 10 பல்
  • காய்ந்த மிளகாய்- 8
  • துருவிய தேங்காய்- 1/2 கப்

இறால் கிரேவி செய்முறை:

chettinad eral gravy in tamil

ஸ்டேப்- 1

முதலில் நீங்கள் 1/2 கிலோ இறாலை எடுத்துக்கொண்டு தண்ணீரில் சுத்தமாக அலசி தனியாக வைத்து கொள்ளுங்கள். அதன் பிறகு பச்சை மிளகாய், தக்காளி மற்றும் வெங்காயம் அனைத்தையும் நறுக்கி தனியாக வைத்து விடுங்கள்.

ஸ்டேப்- 2

அடுத்ததாக மேலே வறுத்து அரைப்பதற்கு கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை எடுத்துக்கொள்ளுங்கள். அதன் பிறகு அடுப்பை பற்ற வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி எடுத்து வைத்துள்ள பொருட்களை அதில் போட்டு பொன் நிறமாக வறுத்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்- 3

வறுத்த பொருட்களை 5 நிமிடம் ஆற வைத்து விடுங்கள். அதன் பின்பு ஒரு மிக்சி ஜாரை எடுத்துகொண்டு அதில் ஆறவைத்த பொருட்களை போட்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து தனியாக வைத்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்- 4

இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்த பிறகு சோம்பு 1/2 ஸ்பூன், நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, கறிவேப்பிலை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து பொன்னிறமாக 10 நிமிடம் வதக்கி கொள்ளுங்கள்.

ஸ்டேப்- 5

10 நிமிடம் களித்து மஞ்சள் தூள் மற்றும் அரைத்து வைத்துள்ள மசாலாவை அதனுடன் சேர்த்து 5 நிமிடம் கிண்டி கொள்ளுங்கள். அதன் பிறகு அந்த மசாலாவுடன் எடுத்துவைத்துள்ள இறாலை அதில் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் வேக வைத்து  விடுங்கள்.

அவ்வளவு தான் சுவையான செட்டிநாடு இறால் கிரேவி தயார். இப்படி செய்து கொடுத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள்.

இதையும் படியுங்கள்⇒ செட்டிநாடு முட்டை குழம்பு மிகவும் சுவையாக செய்யும் முறை

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>  சமையல் குறிப்புகள்
Advertisement

Prabha R

நான் உங்கள் பிரபா. நான் Business, Banking, News, Schemes, தொழிநுட்பம் என இத்தகைய பிரிவில் அன்றாடம் நடக்கும் பதிவுகளையும், நமக்கு தெரியாத பல பயனுள்ள தகவலையும் தமிழில் Pothunalam.com இணையத்தளத்தின் வாயிலாக பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

Bread Spring Roll Recipe in Tamil

School -ல் இருந்து வரும் குழந்தைகளுக்கு இந்த மாதிரி ஸ்நாக்ஸ் செஞ்சி கொடுங்க..!

paruppu sadam in cooker tamil

பக்கத்து தெரு வரைக்கும் மணக்கும் ஐயர் வீட்டு பருப்பு சாதம் செய்வது எப்படி.?

Food To Boost Child Memory in Tamil

குழந்தைகளுக்கு ஞாபக மறதி நீங்கி ஞாபகசக்தி அதிகரிக்க இதை மட்டும் செய்து கொடுங்கள்..!

அடிக்கிற வெயிலுக்கு வீட்டிலேயே கேரட் ஐஸ் கிரீம் இந்த மாதிரி செஞ்சி சாப்பிட்டு பாருங்க..! டேஸ்ட் வேற லெவல இருக்கும்..!

mutton murtabak recipe in tamil

வாட்டர் பாட்டில் இருந்தால் ருசியான ஜாலர் முர்தபா செய்து பாருங்கள்

Mutton Fry Recipe  

பக்ரீத் ஸ்பெஷல் செட்டிநாடு மட்டன் பொரிச்ச கறி

Homemade Ice Cream Recipe in Tamil

இந்த 2 பொருட்கள் இருந்தால் போதும் வீட்டிலே 4 வகையான ஐஸ்கிரீம் செய்யலாம்..!

பஞ்சாபி லஸ்ஸி செய்வது எப்படி | Sweet Lassi Recipe in Tamil

முருகருக்கு பிடித்த திருப்பாகம் செய்வது எப்படி.?