குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சில்லி கார்லிக் நூடுல்ஸ் | Chilli Garlic Noodles Recipe Tamil

Advertisement

சில்லி கார்லிக் நூடுல்ஸ் செய்வது எப்படி? | Chilli Garlic Noodles Recipe in Tamil

நூடுல்ஸ் என்ற பெயரை கேட்டாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் நாக்கில் எச்சில் ஊரும். சமையல் செய்ய தெரியாதவர்கள் கூட செய்யும் ஒரு சாப்பாடு என்றால் அது நூடுல்ஸ் என்றே சொல்லலாம். குழந்தைகள் அடம்பிடிக்காமல் உடனே சாப்பிட்டு விடுவார்கள். அப்படி குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த நூடுல்ஸை சற்று வித்தியாசமாக எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:

  1. நூடுல்ஸ் – 300 கிராம்
  2. எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
  3. பூண்டு – 2 (பொடிதாக நறுக்கியது)
  4. வெங்காயம் – 2 (Slice-ஆக நறுக்கியது)
  5. பச்சை மிளகாய் – 1 (பொடிதாக நறுக்கியது)
  6. கேரட் – 1 (மெல்லியதாக நறுக்கியது)
  7. முட்டைகோஸ் – 1 கப் (மெல்லியதாக நறுக்கியது)
  8. மெல்லியதாக நறுக்கிய பச்சை குடை மிளகாய், சிவப்பு குடைமிளகாய், மஞ்சள் குடை மிளகாய் – அரை கப்
  9. வெங்காயத்தாள் – சிறிதளவு (வெள்ளை பாகம்)
  10. வினிகர் – 2 டேபிள் ஸ்பூன்
  11. சோயா சாஸ் – 2 டேபிள் ஸ்பூன்
  12. ரெட் சில்லி சாஸ் – 1 டேபிள் ஸ்பூன்
  13. கிரீன் சில்லி சாஸ் – 1 டேபிள் ஸ்பூன்
  14. வெங்காயத்தாள் – சிறிதளவு (பச்சைப்பாகம்)
வெஜ் நூடுல்ஸ் செய்முறை

செய்முறை – Chilli Garlic Noodles Recipe in Tamil:

ஸ்டேப்: 1

சில்லி கார்லிக் நூடுல்ஸ்: முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். தண்ணீர் கொதித்த பிறகு சிறிதளவு உப்பு சேர்த்து 300 கிராம் நூடுல்ஸ் சேர்த்து வேக வைக்கவும். நூடுல்ஸ் வெந்த பிறகு அதில் உள்ள தண்ணீரை வடிக்கட்டி ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்து கொள்ளவும். அதன் மேல் சிறிது எண்ணெய் சேர்த்து கிண்டி கொள்ளவும்.

ஸ்டேப்: 2

ஒரு கடாயில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்து, பொடிதாக நறுக்கிய 2 பூண்டு, Slice-ஆக நறுக்கிய 2 வெங்காயம், பொடிதாக நறுக்கிய பச்சை மிளகாய் 1 சேர்த்து வதக்கவும்.

ஸ்டேப்: 3

Chilli Garlic Noodles Recipe in Tamil: பின் மெல்லியதாக நறுக்கிய கேரட் 1, மெல்லியதாக நறுக்கிய முட்டைகோஸ் ஒரு கப், மெல்லியதாக நறுக்கிய பச்சை குடை மிளகாய், சிவப்பு குடைமிளகாய், மஞ்சள் குடை மிளகாய் அரை கப், வெங்காயத்தாள் (வெள்ளைப்பாகம்) சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.

ஸ்டேப்: 4

ஐந்து நிமிடம் கழித்து 2 டேபிள் ஸ்பூன் வினிகர், 2 டேபிள் ஸ்பூன் சோயா சாஸ், 1 டேபிள் ஸ்பூன் ரெட் சில்லி சாஸ், 1 டேபிள் ஸ்பூன் கிரீன் சில்லி சாஸ், 1 டேபிள் ஸ்பூன் மிளகு தூள் சேர்த்து நன்றாக கிண்டவும்.

ஸ்டேப்: 5

Chilli Garlic Noodles: கிண்டிய பிறகு வேக வைத்த நூடுல்ஸை சேர்த்து மிக்ஸ் பண்ணவும். பின் அதன் மேல் வெங்காயத்தாள் பச்சைப்பாகம் சேர்த்து கிண்டி அடுப்பை அணைக்கவும். இப்போது ருசியான சில்லி கார்லிக் நூடுல்ஸ் தயார்.

மீந்து போன சப்பாத்தியில் நூடுல்ஸ் செய்யலாம் வாங்க

 

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்
Advertisement