குழந்தைகள் விரும்பி சாப்பிடும் டீக்கடை கஜடா எப்படி செய்வது! How to Make Tea Kadai Style Kajada Recipe in tamil
Tea Kadai Kajada recipe in tamil: பொதுநலம் இணையதளத்தின் மூலமாக அனைவருக்கும் அன்பான வணக்கம்!. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வீட்டில் அடிக்கடி இன்று நம் வீட்டில் என்ன ஸ்பெஷல் என்று ஒருநாள் கூட கேட்காமல் இருந்து இருக்க வாய்ப்பு குறைவு!, அதுபோல pothunalam.com சமையல் குறிப்பு பகுதியில் இன்றைய ஸ்பெஷல் என்னவென்றால், மொறு மொறு டீ கடை கஜடா எப்படி செய்வது என்பதை தான் பார்க்கப்போகிறோம், பார்ப்பதோடு மட்டுமல்லாமல் அதனை உங்களின் வீட்டில் செய்து எங்களுக்கு உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்!. டீ கடை போண்டா, டீக்கடை பஜ்ஜி, டீக்கடை வடை தெரியும், அது என்ன டீக்கடை கஜடா என்று யோசிக்க வேண்டாம். கஜடா என்பது ஆட்டுக்கால் கேக் என்று சொல்லலாம். பல நண்பர்கள் டீக்கடையில் பார்த்து இருப்பார்கள் அதனை இனிப்பு கேக் என்று கூட சொல்லுவார்கள். அதனை எப்படி வீட்டில் செய்வது என்பதை பார்ப்போம்.
இந்த கஜடா குழந்தைகள் நன்கு விரும்பி சாப்பிடுவார்கள் நல்ல Crispy யாகவும், சுவையாகவும் இருக்கும். சரி வாங்க இந்த எளிமையான டீக்கடை கஜடா செய்வதற்கு என்ன பொருள் தேவை என்பதை விரிவாக படிக்கலாம்.
தேவையான பொருட்கள்:
கஜடா செய்வதற்கு தேவையான பொருள் வீட்டில் உள்ள நபர்களை கொண்டு மாறுபடும். இங்கு நாங்கள் 3 நபருக்கு தேவையான பொருள்களை மட்டும் பதிவிட்டுளோம்.
♦ சக்கரை (சீனி) – 100grams
♦ ஏலக்காய் – 3-4 எண்ணிக்கை.
♦ முட்டை – 1
♦ மைதா மாவு அல்லது கோதுமை மாவு.
♦ ரவை
♦ சமையல் சோடா
♦ உப்பு – தேவையான அளவு
♦ தண்ணீர் – தேவையான அளவு.
சமோசா செய்வது எப்படி | Samosa Recipe in Tamil |
டீக்கடை கஜடா எப்படி செய்வது?
Step-1: முதலில் சக்கரை (சீனி)யை ஒரு மிக்ஸி ஜாரில் இட்டு, அதனுடன் ஏலக்காய் சேர்த்து நன்கு அரைக்க வேண்டும். அரைத்த சக்கரையுடன் 1 முட்டை சேர்த்து நன்கு கிளறி கொள்ளவேண்டும்.
Step-2: முட்டை எதற்கு என்பது எல்லாருக்கும் நன்கு தெரியும். முட்டை சேர்ப்பதால் Crispy யாகவும், soft-காவும் மற்றும் சுவையை மேலும் கூட்டும் என்பதற்காக தான் முட்டை சேர்க்கவேண்டும். முட்டை சேர்க்காமல் கூட செய்யலாம்.
Step -3: நல்ல பதத்துடன் மாவு கிளற வேண்டாம், இல்லையென்றால் எண்ணையில் போடு பொரிக்கும் பொது உதிரியாக போய்விடும். நல்ல பதத்துடன் இருக்கும் மாவில் மைதா அல்லது கோதுமை மாவு சேர்த்து கொள்ளவும்.
Step -4: சேர்த்தபிறகு அதனுடன் கொஞ்சம் ரவை, தேவையான அளவு உப்பு, கொஞ்சம் சமையல் சோடா சேர்த்து நன்கு கிளறவும். அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொள்ளலாம்.
Step -5: உங்களுக்கு எப்படி தேவையோ சிறியதாகவும் அல்லது கடையில் இருப்பது போல கொஞ்சம் பெரியதாகவும் மாவினை தட்டி, பின்னர் ஒரு கடாயில் பொரிப்பதற்கு எண்ணெய் விட்டு, தட்டிய மாவினை எண்ணெயில் போட்டு மாநிறம் வரும் வரை பொரித்து எடுக்க வேண்டும். அவ்ளோதான் மொறு மொறு டீ கடை கஜடா ரெடி!.
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள் |