கல்கத்தா ஸ்பெஷல் அண்டா ரோல் செய்வது எப்படி..?

Kolkata Egg Roll Recipe in Tamil 

பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு தினமும் எதாவது ஒரு புதுவிதமான உணவு அளிக்கவேண்டும் என்ற ஆசை நம் மனதில் இருக்கும். அப்படி எதாவது புதுவிதமான உணவாக இருந்தால் அதனை அவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள்.  உங்களின் குழந்தைகளுக்கு ஏதாவது புதுமையான மற்றும் மிகவும் ருசியான உணவு அளிக்கவேண்டும் என்ற ஆசை உங்கள் மனதில் உள்ளதா.

அப்படியென்றால் இந்த பதிவில் கூறியுள்ள கல்கத்தா ஸ்பெஷல் அண்ட ரோல் ரெசிபியை முழுதாக படித்துவிட்டு நீங்களும் உங்களின் குழந்தைகளுக்கு இந்த ரெசிபியை செய்துகொடுங்கள். சரி வாங்க பதிவினுள் செல்லலாம்.

Kolkata Famous Egg Roll in Tamil:  

Kolkata Egg Roll Recipe in Tamil

முதலில் இந்த கல்கத்தா ஸ்பெஷல் அண்ட ரோல் செய்வதற்கு தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.

 1. மைதா – 2 கப் 
 2. முட்டை – 5 
 3. வெங்காயம் – 2 
 4. கரம்மசாலா – 1 டீஸ்பூன்
 5. மிளகுத்தூள் –  1 டீஸ்பூன்
 6. மஞ்சள்தூள் – 1/2 டீஸ்பூன் 
 7. கொத்தமல்லியிலை – 1 கைப்பிடி அளவு 
 8. பச்சை மிளகாய் – 4 
 9. எண்ணெய் – தேவையான அளவு  
 10. தண்ணீர் – தேவையான அளவு  
 11. உப்பு – தேவையான அளவு

இதையும் படியுங்கள்=> சுவையான முட்டை மஞ்சூரியன் எப்படி செய்வது? Egg Manchurian Recipe..!

செய்முறை:  

ஸ்டேப் – 1 

முதலில் ஒரு பாத்திரத்தில் நாம் எடுத்துவைத்துள்ள 2 கப் மைதாவை சேர்த்து அதனுடன் தேவையான அளவு தண்ணீர், தேவையான அளவு எண்ணெய் மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி வைத்துக்கொள்ளுங்கள்.

ஸ்டேப் – 2

அடுத்து மற்றொரு பாத்திரத்தில் நாம் எடுத்துவைத்துள்ள 5 முட்டையை உடைத்து ஊற்றிக்கொள்ளுங்கள். பின்னர் அதனுடன் 2 வெங்காயம், 1 கைப்பிடி அளவு கொத்தமல்லியிலை மற்றும் 4 பச்சைமிளகாய் ஆகியவற்றை நன்கு பொடி பொடியாக நறுக்கி சேர்த்து நன்கு கலந்து வைத்துக் கொள்ளுங்கள்.

ஸ்டேப் – 3

பின்னர் அதனுடன் 1 டீஸ்பூன் கரம்மசாலா, 1 டீஸ்பூன் மிளகுத்தூள், 1/2 டீஸ்பூன் மஞ்சள்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றையும் சேர்த்து நன்கு கலந்து வைத்துக் கொள்ளுங்கள்.

ஸ்டேப் – 4

அடுத்து நாம் பிசைந்து வைத்துள்ள மைதா உருண்டைகளை சப்பாத்திபோல தேய்த்துக் கொள்ளுங்கள். பின்னர் அடுப்பில் ஒரு தோசைக்கல்லை வைத்து அதில் சிறிதளவு அளவு எண்ணெயை ஊற்றி நாம் தேய்த்து வைத்துள்ள சப்பாத்திகளை போட்டு ஓரளவு வேகவைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

ஸ்டேப் – 5

Famous egg roll recipe in tamil

பிறகு அதே தோசைக்கல்லில் தேவையான அளவு எண்ணெயை ஊற்றி அதில் நாம் முன்னரே தயார் செய்து வைத்திருந்த முட்டையிலிருந்து ஒரு கரண்டி எடுத்து ஊற்றிகொள்ளுங்கள்.

பின்னர் அதன் மீது நாம் தயார் செய்துவைத்துள்ள சப்பாத்தியை போட்டு முன்னும் பின்னும் பிரட்டி போட்டு நன்கு வேகவைத்து எடுத்தால் நமது கல்கத்தா ஸ்பெஷல் அண்ட ரோல் தயார் ஆகிவிட்டது.

இதன் நடுவில் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளி சாஸ் ஆகியவற்றை வைத்து ரோல் பண்ணி உங்களின் குழந்தைகளுக்கு கொடுத்தீர்கள் என்றால் அவர்கள் அதனை மிட்சம் வைக்காமல் சாப்பிட்டு விடுவார்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

இதுபோன்று சுவைசுவையான சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்பு