2 பொருட்களை வைத்தே சுவையான பால்கோவா செய்யலாம்!

How to make Palkova in tamil

How to make Palkova in tamil!

வணக்கம்! பால்கோவா என்றாலே பெரியவர் முதல் சிறியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடிய ஸ்வீட் ஆகும். பலரும் பால்கோவாவினை கடைகளில்தான் அதிகம் வாங்கி சாப்பிடுகின்றனர். இனி கடைகளில் வாங்க வேண்டாம்! உங்கள் வீட்டிலையே குறைந்த பொருட்களை பயன்படுத்தி சீக்கிரமாகவும் சுவையாகவும் பால்கோவா செய்யலாமே!  இப்பதிவில் எப்படி பால்கோவா எளிதான முறையில் வீட்டிலையே செய்யலாம் என்பதனை பற்றிதான் தெளிவாக தெரிந்துக்கொள்ள போகிறோம்!

தேவையான பொருட்கள்:

பால் – 1 லிட்டர்

சர்க்கரை – 250 கிராம்

பால்கோவா செய்வது எப்படி?

ஸ்டேப் 1:

how to make palkova in tamil

முதலில் ஒரு கனமான காடாயினை அடுப்பில் வைத்து பாலை ஊற்ற வேண்டும்.

ஸ்டேப் 2:

பால் சூடாகி பொங்கி வரும் வரை அருகில் இருந்து கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும்.

ஸ்டேப் 3:

பால் பொங்கி வரும் போது கரண்டியினை கொண்டு கிண்ட வேண்டும். பாலினை பொங்க விடாமல் கிண்டிவிட்டு கொண்டே இருக்க வேண்டும். பாலானது அடிபிடிக்கும் எனவே அடிபிடிக்காதவாறு கிண்டி கொண்டே இருக்க வேண்டும்.

மேலும் ஒரு பயனுள்ள தகவல்👉 தீபாவளி ஸ்பெஷல் பால்கோவா இப்படி செய்யலாம்..!

ஸ்டேப் 4:

பால்கோவா செய்வது எப்படி

நாம் ஊற்றிய 1 லிட்டர் பாலானது 1/4 லிட்டர் அளவிற்கு வரும் வரை பாலினை நன்றாக காய்ச்ச வேண்டும். 1/2 மணி நேரம் கழித்து பாலானது சுண்டி வர தொடங்கும்.

ஸ்டேப் 5:

palkova recipe in tamil

பாலானது நன்கு திரண்டு வரும் வேளையில் சர்க்கரையினை சேர்க்க வேண்டும். சர்க்கரை சேர்த்த உடன் தண்ணீர் விட்டு வரும். 5 நிமிடங்கள் அதனை கொதிக்க வைக்க வேண்டும்.

ஸ்டேப் 6:

palkova recipe in tamil

பிறகு அதனுடன் சிறிதளவு ஏலக்காய் தூள் மற்றும் 1 டீஸ்பூன் நெய் சேர்த்து கிண்டி விட வேண்டும். பால்கோவா பதம் வந்ததும் இறக்கி விட வேண்டும்.  1 லிட்டர் பாலில் பால்கோவா செய்ய 1 மணி நேரம் ஆகும்.  சுவையான பா ல்கோவா ரெடி!

Palkova Seivathu Eppadi

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Samayal kurippu tamil