Murungakkai Kulambu Recipe in Tamil
என்னதான் வீட்டில் குழம்பு வைத்து சாப்பிட்டாலும் வெளியில் சாப்பிட்டாலோ அல்லது வேறு யாரு வீட்டில் சாப்பிட்டாலும் அதனுடைய ருசியானது வேற மாறி இருக்கும் என்று தான் சொல்வார்கள். அதேபோல் நம் அனைவருக்குமே ஐயர் வீட்டில் செய்யும் சமையல் மிகவும் பிடிக்கும். அவர்கள் வைக்கும் குழம்பாக இருக்கட்டும் அல்லது அங்கு செய்யும் சாதமாக இருக்கட்டும் அனைத்தும் அவ்வளவு சுவையாக இருக்கும். அந்த வகையில் இன்று ஐயர் வீட்டு அரைச்சு விட்ட சாம்பார் எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
Murungakkai Kulambu Recipe in Tamil:
முதலில் கடாயில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி கால் கப் தனியாவை வறுத்து கொள்ளவும். அது கொஞ்சம் வறுபட்டவுடன் அதில் கால் கப் கள்ளப்பருப்பை சேர்த்துக் கொள்ளவும். அடுத்து 1 ஸ்பூன் மிளகு சேர்த்துக் கொள்ளவும். அடுத்து 12 காய்ந்த மிளகாய், 1 கொத்து கறிவேப்பிலை சேர்த்து நன்கு வறுத்துக் கொள்ளவும். ஆறியதும் அதனை மிக்சி ஜாரில் போட்டு பவுடர் போல் அரைத்துக் கொள்ளவும். அதனை அப்படியே தனியாக வைத்துக் கொள்ளவும்.
குறிப்பு: இதில் உங்களுக்கு தேவையான காய்கறிகளை சேர்த்தும் செய்து கொள்ளலாம். ஆனால் முருங்கைக்காய் சாம்பார் என்பதால் முருங்கைக்காய் மட்டும் சேர்த்துக் கொள்கிறோம்.
தேவையான பொருட்கள்:
- சின்னவெங்காயம் – 10
- தக்காளி – 2
- கொத்தமல்லி கருவேப்பிலை – 2 கொத்து
- பெருங்காயம் – சிறிதளவு
- முருங்கைக்காய் – 1
- கடுகு – 1 ஸ்பூன்
- வெந்தயம் – 1/4 டீஸ்பூன்
- பச்சை மிளகாய் – 1
- எண்ணெய், உப்பு – தேவையான அளவு
- துவரம்பருப்பு மசித்தது – 1.4 கிலோ
- புளி தண்ணீர் – தேவையான அளவு
ஸ்டேப்: 1
கடாயில் எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும். அதில் கடுகு சேர்த்து கடுகு பொரிந்தவுடன் 1/4 ஸ்பூன் வெந்தயம் சேர்த்து வறுபட்டவுடன் கொஞ்சம் பெருங்காயம் சேர்க்கவும். அடுத்து நாம் நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயத்தை சேர்த்து வதங்கட்டும். அடுத்து அதில் 1 கொத்து கருவேப்பிலை போட்டு வதக்கவும்.
ஸ்டேப்: 2
அடுத்து அதில் 2 தக்காளி சேர்த்து வதக்கவும். அதில் 1 பச்சைமிளகாய் நறுக்கி போட்டு அதனையும் வதக்கவும். அடுத்து 1 முருங்கைக்காய் நறுக்கி அதையும் சேர்த்து வதக்கவும். அடுத்து அதில் கொஞ்சம் மஞ்சள் தூள் சேர்த்து 5 நிமிடம் மூடி அப்படியே வைக்கவும்.
இதையும் படியுங்கள் ⇒ சின்ன வெங்காய சாம்பார் இப்படி செய்து பாருங்கள்.!
ஸ்டேப்: 3
அடுத்து காய் வதங்கியதும் அதில் 4 ஸ்பூன் அரைத்து வைத்துள்ள சாம்பார் பொடி போட்டு நன்கு கலந்துவிடவும். அடுத்து கரைத்து வைத்துள்ள புளி தண்ணீரை கரைத்து ஊற்றிக் கொள்ளவும். அதை நன்கு கொதிக்கவிடவும்.
ஸ்டேப்: 4
அடுத்து வேகவிட்டு மசித்து எடுத்து வைத்துள்ள பருப்பை சேர்க்கவும். கடைசியாக உப்பு சேர்த்து நன்கு கலந்துவிடவும். அடுத்து நன்கு கொதிக்கவிட்டு கெட்டியாக வேண்டுமென்றால் கெட்டியாக கொதிக்கவிட்டு சாப்பிடுங்கள்.
காய்கறிகள் சேர்க்காமல் சுவையான ராயலசீமா சாம்பார் செய்வது எப்படி?
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | samayal kurippugal in tamil |