Kesar Badam Pista Kulfi Recipe in Tamil
பொதுவாக கோடை காலம் வந்து விட்டாலே அனைவரின் மனமும் குளிர்ச்சியான உணவுகளை தேடும். அதனால் அனைவருமே குளிர்ச்சியான இளநீர், குளிர்பானம், ஐஸ்கிரீம் மற்றும் குல்ஃபி போன்றவற்றை கடைகளில் வாங்கி சாப்பிடுவார்கள். ஆனால் அவையாவும் சுத்தமான முறையில் தயாரிக்கபடுகின்றதா என்று நமக்கு தெரியாது. அதனால் அவற்றை வாங்கி சாப்பிடுவது நமக்கும் நமது உட ல்நலத்திற்கும் நன்மையை தராது.
அதனால் தான் இன்றைய பதிவில் கோடை காலத்திற்கு ஏற்ற குளுகுளு குல்ஃபியை எவ்வாறு வீட்டிலேயே செய்வது என்பதை பற்றி தான் பார்க்க இருக்கின்றோம். அதனால் இன்றைய பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள குல்ஃபி ரெசிபியை அறிந்து கொண்டு அதனை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்து அசத்துங்கள்..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
Kesar Badam Pista Kulfi Recipe in Tamil:
கோடை காலத்திற்கு ஏற்ற குளுகுளு குல்ஃபியை எவ்வாறு வீட்டிலேயே செய்வது என்பதை பற்றி தான் பார்க்கலாம். முதலில் இதற்கு என்னென்ன பொருட்கள் தேவைப்படும் என்பதை காணலாம்.
- பால் – 1 லிட்டர்
- பிரட் – 3
- பாதாம் – 4 டேபிள் ஸ்பூன்
- முந்திரி – 4 டேபிள் ஸ்பூன்
- பிஸ்தா – 4 டேபிள் ஸ்பூன்
- குங்குமப்பூ – 1 டீஸ்பூன்
- சர்க்கரை – 4 டேபிள் ஸ்பூன்
- ஏலக்காய் தூள் – 2 டீஸ்பூன்
இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> இனிமேல் ஆரஞ்சு பழத்தோலை தூக்கியெறியாமல் இந்த ரெசிபியை ஒருமுறை செய்து சுவைத்து பாருங்கள்
மிக்சி ஜாரை எடுத்து கொள்ளவும்:
முதலில் ஒரு மிக்சி ஜாரை எடுத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 4 டேபிள் ஸ்பூன் பாதாம், 4 டேபிள் ஸ்பூன் முந்திரி, 4 டேபிள் ஸ்பூன் பிஸ்தா மற்றும் 3 பிரட்டினை நறுக்கி மிக்சி ஜாரில் சேர்த்து நன்கு பொடியாக அரைத்து கொள்ளுங்கள்.
கடாயை எடுத்து கொள்ளவும்:
பின்னர் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 1 லிட்டர் பாலினை சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள்.
குங்குமப்பூவை சேர்க்கவும்:
பிறகு அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 1 டீஸ்பூன் குங்கும பூவை சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள்.
இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> வீட்டுலயே மிகச்சுவையான ஐஸ்கிரீம் செய்யலாம் அதுவும் கிரீம் இல்லாமல்
சர்க்கரையை கலக்கவும்:
அடுத்து அதனுடனே நாம் எடுத்து வைத்துள்ள 4 டேபிள் ஸ்பூன் சர்க்கரையை கலந்து கொள்ளுங்கள்.
ஏலக்காய் தூளினை சேர்த்து கொள்ளவும்:
அதனுடனே நாம் எடுத்து வைத்துள்ள 2 டீஸ்பூன் ஏலக்காய் தூளினை சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள். பிறகு அதனுடன் நாம் முன்னரே அரைத்து வைத்துள்ள பொடியை கலந்து கொள்ளுங்கள்.
இப்பொழுது இவையெல்லாம் ஒன்றுடன் ஒன்று நன்கு கலந்து கெட்டியாக மாற ஆரம்பிக்கும் அப்பொழுது அடுப்பில் இருந்து இறக்கி சிறிது நேரம் சூட்டினை ஆறவிடுங்கள்.
பின்னர் அதனை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து லேசாக அரைத்து கொள்ளுங்கள். பிறகு அதனை குல்ஃபி மோல்டு அல்லது டம்ளரில் ஊற்றி ஃபிரிட்ஜ் ஃபிரீஸரில் 12 முதல் 14 மணி நேரம் வைத்து எடுத்தால் நமது குளுகுளு குல்ஃபி தயாராகிவிடும். பின்னர் அதனை அனைவருக்கும் பரிமாறுங்கள்.
இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> இந்த 2 பொருட்கள் இருந்தால் போதும் வீட்டிலே 4 வகையான ஐஸ்கிரீம் செய்யலாம்
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Samayal Kurippugal |