இட்லி மாவு இல்லாத டிபன்
நண்பர்களே வணக்கம் அனைவரின் வீட்டிலும் எப்போதும் அதிகளவு செய்யும் டிபன் இட்லி தான். ஏனென்றால் அது உடலுக்கும் நன்மையை அளிக்கும் சீக்கிரம் ஜீரணம் ஆகும் அதனால் அதனை அதிகம் நபர்கள் செய்து சாப்பிடுவார்கள். அப்படி இருந்தால் இந்த இட்லியானது அதிகம் குழந்தைக்கும் பிடிப்பதில்லை. அதனால் அவர்களுக்கு பிடித்தமான புதிதாக ஒரு சூப்பரான இட்லி பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
தேவையான பொருட்கள்:
ரவை – 1/2 கிலோ வருத்தது
தயிர் – 1/2 லிட்டர்
தக்காளி – 1 நறுக்கியது
வெங்காயம் -1 சிறிதாக நறுக்கியது.
குடைமிளகாய் -1 நறுக்கியது
உப்பு – தேவையான அளவு
நெய் – சிறிதளவு
சீரகம் – 1 டீஸ்பூன்
பூண்டு, மிளகாய் – அரைத்து வைத்துக்கொள்வோம்.
பாவுபாஜி மசாலா – 1 டீஸ்பூன்
ஸ்டேப் -1
முதலில் தயிர் மற்றும் ரவையை எடுத்து அதில் உப்பு சேர்த்து கலந்து 1.2 மணி நேரம் ஊறவைக்கவும். பின்பு அதனை எடுத்து சின்ன நெய் தடவி இட்லி தட்டில் ஊற்றி வைக்கவும்.
வெந்ததும் தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
ஸ்டேப் -2
இப்போது ஒரு கடாயில் சிறிதளவு நெய் அல்லது எண்ணெய் ஊற்றி அதில் சீரகம் – 1 டீஸ்பூன் போடவும். அதன் கூடவே ஓமம் சேர்த்துக்கொண்டால் நன்றாக இருக்கும்.
ஸ்டேப் -3
பின்பு அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். அதன் கூடவே பூண்டு மிளகாய் அரைத்து வைத்த பேஸ்டை போட்டு பச்சை தன்மை போகும் வரை வதக்கிக்கொள்ளவும்.
ஸ்டேப் -4
பின்பு அதில் சிறிதாக நறுக்கிய தக்காளியை சேர்த்து அதன் கூடவே குடை மிளகாயை சேர்த்து வதக்கிக்கொள்ளவும்.
ஸ்டேப் -5
பின்பு அதில் பாவுபாஜி மசாலா சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும். இதற்கு தேவையான உப்பை சேர்த்து தண்ணீரையும் ஊற்றிக்கொள்ளவும்.
15 நிமிடம் மீடியத்தில் அடுப்பை வைத்துவிடவும். பின்பு தனியாக எடுத்து வைத்த இட்லியை சேர்த்து கலந்து விடவும்.
சூடாக தேங்காய் சட்னி சேர்த்து சாப்பிட்டால் சுவை சூப்பராக இருக்கும்.
தோசைக்கல்லில் மசாலா இட்லி செய்வது எப்படி? வாங்க அதையும் செய்து பார்ப்போம்
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள் |