முட்டை உடைத்து ஊற்றி முருங்கைக் கீரை பொரியல் எப்படி செய்வது? | Murungai Keerai Muttai Poriyal Seivathu Eppadi
கீரை என்றாலே பலருக்கும் கசப்பான உணவு. ஆனால் நாம் ஒதுக்கி வைக்கின்ற கீரையில் தான் அதிகமாக சத்துக்கள் நிறைந்துள்ளது. அதிலும் குறிப்பாக முருங்கை கீரையில் உடலுக்கு தேவையான இரும்புச்சத்து அதிகமாக நிறைந்திருக்கிறது. முருங்கை கீரை பிடிக்காதவர்களுக்கு கூட இது மாதிரியான முட்டை பொரியலில் கீரையை சேர்த்து சாப்பிட்டால் கீரை டேஸ்டானது பிடிக்கும். இன்றைய சமையல் குறிப்பு பகுதியில் வித்தியாசமான ஒரு ரெசிபிதான் பார்க்கப்போகிறோம். அது என்ன ரெசிப்பினு கேக்குறீங்களா..! சுவையான முருங்கை கீரை முட்டை பொரியல். வாங்க அதை எப்படி செய்யலாம்னு பார்க்கலாம்..
எல்லாருக்கும் பிடிக்கும் மணத்தக்காளி கீரை பொரியல் |
முருங்கை கீரை முட்டை பொரியல் செய்ய – தேவையான பொருள்:
- முருங்கை கீரை – 2 கட்டு உருவியது
- தண்ணீர் – சிறிதளவு
- எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
- உளுந்து – 1/4 டீஸ்பூன்
- கடலைப்பருப்பு – 1/4 டீஸ்பூன்
- கடுகு – 1/4 டீஸ்பூன்
- காய்ந்த மிளகாய் – 2
- வெங்காயம் – 2 பொடிதாக நறுக்கியது
- பூண்டு பல் – 5 அல்லது 6
- முட்டை – 2
- உப்பு – தேவையான அளவு
- துருவிய தேங்காய் – 3 மேசைக்கரண்டி
முருங்கை கீரை முட்டை பொரியல் – செய்முறை விளக்கம்:
ஸ்டேப்: 1
முதலில் 2 கட்டு முருங்கை கீரையை உருவி தண்ணீரில் அலசி ஒரு கடாயில் சேர்க்கவும்.
ஸ்டேப்: 2
பிறகு கீரையுடன் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து 5 முதல் 10 நிமிடம் வேக வைக்கவும்.
ஸ்டேப்: 3
கீரை பாதி அளவிற்கு வெந்ததும் தனியாக எடுத்து வைக்கவும். அடுத்து தனியாக ஒரு கடாயில் 2 மேசைக்கரண்டி அளவு எண்ணெய் சேர்க்கவும்.
ஸ்டேப்: 4
எண்ணெய் சேர்த்ததும் உளுந்து, கடலை பருப்பு, கடுகு 1/4 டீஸ்பூன், இரண்டு காய்ந்த மிளகாயை கிள்ளி போடவும்.
ஸ்டேப்: 5
அனைத்தையும் சேர்த்த பிறகு ஒருமுறை வதக்கிவிடவும். இப்போது கடுகு நன்றாக பொரிந்ததும் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து வதக்கிக்கொள்ளவும்.
ஸ்டேப்: 6
வெங்காயம் சேர்த்த பிறகு பூண்டு பல் சேர்த்து வதக்கவும். (பூண்டினை பொடிதாக நறுக்கியும் சேர்க்கலாம்).
ஸ்டேப்: 7
பிறகு 2 முட்டையை உடைத்து ஊற்றவும். முட்டையை சேர்த்த பிறகு நன்றாக கிண்டவும்.
ஸ்டேப்: 8
முட்டை இப்போது நன்றாக வெந்தததும் வேக வைத்துள்ள கீரையை அதில் சேர்த்து கிளறவும். அடுத்து தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறவும்.
ஸ்டேப்: 9
கடைசியாக துருவி வைத்துள்ள தேங்காயை அதில் சேர்த்து கிளறவும். டேஸ்டியான முருங்கை கீரை முட்டை பொரியல் ரெடியாகிட்டு. இந்த பொரியலை சாம்பார், ரசம் போன்ற குழம்புடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும். ட்ரை பண்ணி பாருங்க..
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | samayal kurippugal |