புதிய வகை குருமா செய்வது எப்படி..?
ஹாய் உணவு பிரியர் அனைவருக்கும் வணக்கம்..! இந்த பதிவை ஆர்வமான படிக்கும் அனைவருக்கும் எங்களது அன்பு வணக்கம்..! பொதுவாக நிறைய விதமான குருமாவை வைத்திருப்பீர்கள், சுவைத்திருப்பீர்கள். பார்த்திருப்பீர்கள். இது என்ன புதுசா இருக்குனு நினைப்பீர்கள். ஆமாங்க புதிய வகை குருமாதா இது அதை எப்படி செய்வது என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரியுன்கொள்வோம்..!
தேவையான பொருட்கள்:
- வெங்காயம் – 3
- தக்காளி – 2
- பச்சை மிளகாய் – 4
- இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
- புதினா – சிறிது
- பிரியாணி இலை – 2
- காய்கறி – 2 கப்
- கிராம்பு – 3
- ஏலக்காய் – 3
- பட்டை – 2 துண்டு
- சீரகம் – 1/4 டீஸ்பூன்
- சோம்பு – 1/4 டீஸ்பூன்
- தயிர் – 1 கப்
- நெய் – 4 டேபிள் ஸ்பூன்
- உப்பு – சுவைக்கேற்ப
- கொத்தமல்லி – சிறிது (அலங்கரிக்க)
- கறிவேப்பிலை – சிறிது
- முந்திரி – 10
- பால் – 1/2 கப்
- பன்னிர் -2 கப்
- துருவிய தேங்காய் – 1/2 மூடி
- மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
- மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
- மல்லித் தூள் – 3 டீஸ்பூன்
Navarathna Kurma in Tamil:
ஸ்டேப்- 1
முந்திரி 10, பால் 1/2 கப், தேங்காய் 1/2 மூடி துருவியது, ஒரு மூடி அரைபதற்காக எடுத்துபவைத்துக்கொள்ளவும். அதேபோல் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், காய்கறிகள் அனைத்தும் நைசாக நறுக்கிக்கொள்ளவும். பச்சை மிளகாய் மட்டும் கீறி வைத்துக்கொள்ளவும்.
ஸ்டேப்- 2
முதலில் அரைப்பதற்காக எடுத்து வைத்த முந்திரி 10, பால் 1/2 கப் எடுத்து மிக்சி ஜாரில் போட்டு அரைத்து தனியாக எடுத்துவைத்துவிடவும். பின் தேங்காய் துருவல் சேர்த்து சிறிது வெந்நீர் ஊற்றி பின் அதிலிருந்து பால் எடுத்து தனியாக வைத்துக்கொள்ளவும்.
ஸ்டேப்- 3
பின்பு ஒரு கடாயில் சிறிது நெய் ஊற்றி சூடானதும் அதில் பன்னீர் துண்டுகளை கொஞ்ச நேரம் வறுத்து மிதமான சூட்டில் இருக்கும் நீரில் போட்டுவைக்கவும்.
ஸ்டேப்- 4
உங்களுக்கு வசதியான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் சிறிதளவு நெய் ஊற்றி அது சூடானதும் அதில் பிரியாணியிலை கிராம்பு, பட்டை, ஏலக்காய், சீரகம், சோம்பு சேர்த்து தாளிக்கவும்.
ஸ்டேப்- 5
தாளிக்கும் போது அதில் பச்சை மிளகாய் புதினா சேர்த்து வதக்கி, கொள்ளவும் அதனை வதக்கும் போதே வெங்காயத்தை வதக்க வேண்டும். வெங்காயம் பொன்னிறமாகிய பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 2 நிமிடம் அதனுடைய பச்சை நறுமணம் போகும் வரை வதக்கவும். அதனை வதக்கும் போதே தக்காளி சேர்த்து வதக்கவும்.
ஸ்டேப்- 6
பின்பு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள் சேர்த்து சிறிது நேரம் வதக்கி கொள்ளவும். அதன் கூடவே காய்கறிகளை சேர்த்து அதில் உப்பு சேர்த்து வதக்கவும்.
ஸ்டேப்- 7
பின் அதில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி கடாயை மூடி குக்கராக இருந்தால் 2 விசில் விடவும். அல்லது காடையாக இருந்தால் காய்கறிகள் வெந்ததும். அதில் முன்பு எடுத்துவைத்த தேங்காய் பாலை அதில் சேர்த்துக்கவும்.
ஸ்டேப்- 8
அதன் பின் அதில் அரைத்து வைத்த முந்திரி பேஸ்டை அதில் சேர்த்து அதன் பின் முன்பு தண்ணீரின் போட்டுவைத்த பன்னீரை பிழிந்துவிட்டு குக்கரை மிதமான சூட்டில் வைத்து கொதிக்கவிடவும்.
ஸ்டேப்- 9
கடைசியாக கொதிக்கும் குருமாவில் தயிர் சேர்த்து முன்பு சிறிது உப்பு சேர்த்ததால் இப்போது தேவைக்கேற்ப உப்பு சேர்த்து ஊறிய நெய் மேலே மிதக்கும் வரை கொதித்த பின் இறக்கி அதில் நறுக்கி வைத்த கொத்தமல்லி கருவேப்பிலை பூப்போல் தூவி சுவையாக நவரத்ன குருமா ரெடி இதனை இட்லி, சப்பாத்தி, தோசை போன்றவற்றிற்கு சேர்த்து சாப்பிடலாம்.
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | samayal kurippugal in tamil |