பருப்பு உருண்டை குழம்பு வைப்பது எப்படி | Paruppu Urundai Kulambu Recipe in Tamil
: ஹலோ நண்பர்களே சைவ பிரியர்களுக்கும், அசைவ பிரியர்களுக்கும் பிடித்த பருப்பு உருண்டை குழம்பை எளிமையான முறையில் எப்படி செய்வது என்பதை பற்றி இன்றைய பொதுநலம்.காம் பதிவில் பார்க்கலாம். ஒரு சிலர் இந்த உருண்டை குழம்பை சுவையாக வைத்திருப்பார்கள், ஒரு சிலருக்கு நன்றாக செய்ய தெரிந்திருக்காது அப்படிபட்டவர்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சரி வாங்க சுவையான பருப்பு உருண்டை குழம்பு செய்வது பற்றி பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் – உருண்டை குழம்பு செய்வது எப்படி?
- கடலை பருப்பு – 200 கிராம்
- கடலை எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
- காய்ந்த மிளகாய் – 15
- தேங்காய் – 1 மூடி (துருவியது)
- சோம்பு – 1 டேபிள் ஸ்பூன்
- வெங்காயம் – 2
- பச்சை மிளகாய் – 5 ( நறுக்கியது/ கீறியது)
- கடுகு – 1 – 1/2 டேபிள்ஸ்பூன்
- வெந்தயம் – அரை டேபிள்ஸ்பூன்
- கருவேப்பில்லை – 1 கொத்து
- பூண்டு – 10
- சீரகம் – 1 டேபிள்ஸ்பூன்
- தக்காளி – 1 – 1/2
- உப்பு – தேவையான அளவு
- மஞ்சள் தூள் – அரை டேபிள்ஸ்பூன்
- மிளகாய் தூள் – 2 டேபிள்ஸ்பூன்
- தண்ணீர் – தேவையான அளவு
- புளி – 50 அல்லது 75 கிராம் (புளிக்கரைசல்)
பருப்பு உருண்டை குழம்பு எப்படி வைக்க வேண்டும்
Kadalai Paruppu Urundai Kulambu Seivathu Eppadi – செய்முறை:
- முதலில் 200 Gm கடலைப் பருப்பை நன்றாக கழுவி விட்டு ஒரு இரவு அல்லது 3 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். அதனுடன் 15 காய்ந்த மிளகாய் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் அளவு சோம்பு சேர்த்து ஊறவைக்க வேண்டும்.
- ஊறிய பின் தண்ணீரை வடிகட்டி விட்டு நன்றாக அரைத்து கொள்ள வேண்டும். அரைத்த மாவுடன் அரை துண்டு நறுக்கிய வெங்காயம், சிறு சிறு துண்டுகளாக வெட்டிய பச்சை மிளகாய், தேவையான அளவு உப்பு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் அளவு மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக mix செய்யவும்.
செட்டிநாடு மட்டன் கோலா உருண்டை
பருப்பு உருண்டை குழம்பு எப்படி செய்யனும்
- பின் ஒரு இட்லி பானையில் தண்ணீர் ஊற்றி அதனை உருண்டை பிடிப்பதற்கு முன்னரே சூடாக்க வேண்டும்.
- இட்லி பாத்திரம் சூடான பிறகு இட்லி தட்டில் எண்ணெயை தடவி உருண்டைகளாக உருட்டி 10-15 mins வேகவைக்க வேண்டும்.
- ஒரு கடாயில் 3 டேபிள் ஸ்பூன் அளவு கடலை எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடான பிறகு 1 1/2 ஸ்பூன் அளவு கடுகு சேர்க்க வேண்டும்.
- கடுகு பொரியும் பொழுதே 4-5 காய்ந்த மிளகாய் சேர்த்தவுடன் அரை டேபிள் ஸ்பூன் அளவு வெந்தயம் சேர்த்து வதக்கவும்.
- வெந்தயம் பொன்னிறமானவுடன் கருவேப்பிலை மற்றும் கீறிய பச்சை மிளகாய் 3-4 சேர்த்து வதக்க வேண்டும்.
- அதனுடன் 10 பூண்டை தோல் உரித்து அதனை சிறு சிறு துண்டுகளாக வெட்டி அதில் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும். பொன்னிறமானவுடன் ஒன்றரை அளவு வெங்காயத்தை சின்னதாக வெட்டி Golden Brown –ஆகும் வரை வதக்க வேண்டும்.
- அதனுடன் ஒன்றரை தக்காளியை சின்னதாக வெட்டி அதனையும் சேர்த்து வதக்க வேண்டும்.
- பின் 1 டேபிள்ஸ்பூன் மஞ்சள் தூள், 2 டேபிள்ஸ்பூன் மிளகாய் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து அனைத்தையும் நன்றாக கிண்ட வேண்டும்.
- மிளகாய் தூள் கருகுவதற்கு முன்னர் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி mix செய்தால் சிவப்பு நிறமாக மாறிவிடும்.
பன்னீர் கோலா உருண்டை |
உருண்டை குழம்பு வைப்பது எப்படி – Paruppu Urundai Kulambu in Tamil
ஸ்டேப்: 3 – Urundai Kulambu Seivathu Eppadi:
- பின் 75 கிராம் அல்லது 50 கிராம் அல்லது உங்களுக்கு தேவையான அளவு புளியை ஊறவைத்து அந்த புளிக்கரைசலை சேர்த்து கொள்ளுங்கள் மற்றும் 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து பச்சை புளி வாசம் போகும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.
- பச்சை வாசம் போன பிறகு 50g வெள்ளம் மற்றும் ஒன்றரை டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். வெள்ளம் தேவைப்பட்டால் சேர்த்துக்கொள்ளலாம்.
பொறி அரிசி உருண்டை செய்வது எப்படி? |
பருப்பு உருண்டை குழம்பு எப்படி செய்முறை – ஸ்டேப்: 4
- பின் ஒரு மிக்ஸியில் 1 மூடி துருவிய தேங்காய், 1 டேபிள் ஸ்பூன் சோம்பு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் சீரகம் சேர்த்து மைய அரைத்துக்கொள்ள வேண்டும். பிறகு கொதித்து கொண்டிருக்கும் குழம்பில் சேர்க்கவும். சேர்த்தவுடன் ஆரஞ்சு நிறமாக மாறிவிடும்.
- வேகவைத்த உருண்டையை குழம்பில் சேர்த்தவுடன் அடுப்பை அணைத்து விட்டு மெதுவாக கிண்டவும். கிண்டி விட்டு அந்த குழம்பில் உருண்டையை அரைமணி நேரம் ஊறவைக்கவும். இப்பொழுது ஒரு சூடான சுவையான பருப்பு உருண்டை குழம்பு தயார்.
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | samayal kurippugal in tamil |