Pattani Masala Sundal Recipe in Tamil
உங்களின் குழந்தைகள் பள்ளி விட்டு வந்தவுடன் எதாவது ஸ்னாக்ஸ் கொடுங்கள் என்று பாடாகபடுத்தி எடுக்கிறார்களா..! அப்படி என்றால் உங்களின் குழந்தைகளுக்கு இந்த மாதிரி மிகவும் ருசியான மற்றும் ஆரோக்கியமான பட்டாணி மசாலா சுண்டல் செய்துகொடுங்கள். அவர்களுக்கு ஸ்னாக்ஸ் சாப்பிட்ட திருப்தியும் இருக்கும் மற்றும் உங்களுக்கு அவர்களுக்கு ஆரோக்கியமான ஒரு ஸ்னாக்ஸ் செய்துகொடுத்த மனநிம்மதியும் ஏற்படும். அப்படி மிகவும் ருசியான மற்றும் ஆரோக்கியமான பட்டாணி மசாலா சுண்டல் செய்வது எப்படி என்பதை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
Pattani Masala Recipe in Tamil:
முதலில் நமது இந்த பட்டாணி மசாலா சுண்டல் செய்ய தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.
- வெள்ளை பட்டாணி – 1 கிலோ
- மஞ்சள்தூள் – 1 டீஸ்பூன்
- தக்காளி – 2
- வெங்காயம் – 2
- பூண்டு – 20 பற்கள்
- இஞ்சி- 2 சிறிய துண்டு
- பச்சைமிளகாய் – 4
- கருவேப்பிலை – 2 கொத்து
- மிளகாய்தூள் – 2 டேபிள் ஸ்பூன்
- தனியாத்தூள் – 1 டேபிள் ஸ்பூன்
- கரம்மசாலா – 2 டேபிள் ஸ்பூன்
- கொத்தமல்லியிலை – 1 கைப்பிடி அளவு
- எண்ணெய் – தேவையான அளவு
- உப்பு – தேவையான அளவு
- தண்ணீர் – தேவையான அளவு
உருளைகிழங்கு பட்டாணி மசாலா ஒரு முறை இப்படி செய்து பாருங்கள்
செய்முறை:
ஸ்டேப் – 1
முதலில் நாம் எடுத்துவைத்துள்ள 1 கிலோ வெள்ளை பட்டாணியை 3 – 4 மணிநேரம் நன்கு ஊறவைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதனை ஒரு குக்கரில் போட்டு அதில் 1 டீஸ்பூன் மஞ்சள்தூள், தேவையான அளவு உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீரை ஊற்றி 5-8 விசில் விட்டு நன்கு வேகவைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.
ஸ்டேப் – 2
வேகவைத்து எடுத்துவைத்துள்ள பட்டாணியை ஒன்னும் பாதியாக நன்கு மசித்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு ஒரு மிக்சி ஜாரில் 2 தக்காளி, 2 வெங்காயம், 20 பூண்டு பற்கள், 2 இஞ்சி துண்டு, 2 கொத்து கருவேப்பிலை மற்றும் 4 பச்சைமிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளுங்கள்.
ஸ்டேப் – 3
பின்னர் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அதனுடன் நாம் அரைத்துவைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்கு வதக்கிக்கொள்ளுங்கள்.
ஸ்டேப் – 4
மசாலா நன்கு வதங்கியவுடன் அதனுடன் 2 டேபிள் ஸ்பூன் மிளகாய்தூள், 2 டேபிள் ஸ்பூன் கரம்மசாலா, 1 டேபிள் ஸ்பூன் தனியாத்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கிக்கொள்ளுங்கள்.
ஸ்டேப் – 5
இவையெல்லாம் நன்கு வதங்கிய உடன் அதனுடன் தேவையான அளவு உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீரை ஊற்றி நன்கு கொதிக்கவிடுங்கள். பின்னர் அதில் நாம் வேகவைத்து மசித்துவைத்துள்ள வெள்ளை பட்டாணியையும் சேர்த்து நன்கு கலந்துவிடுங்கள்.
பிறகு அதன் மேலே 1 கைப்பிடி அளவு கொத்தமல்லியிலையை பொடி பொடியாக நறுக்கி தூவி அடுப்பில் இருந்து இறக்கிக் கொள்ளுங்கள்.
பின்னர் இந்த பட்டாணி மாசாவை உங்கள் குழந்தைகளுக்கு பரிமாறும் பொழுது பொடி பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் கான் சிப்ஸ் ஆகியவற்றை அதன் மேலே தூவி கொடுங்கள் அவர்கள் இதனை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள் |