உருளைக்கிழங்கு மசாலா போளி | Potato Poli Recipe in Tamil
Potato Poli Recipe: குழந்தைகள் அனைவரும் மிகவும் பிரியப்பட்டு சாப்பிடுவது உருளைக்கிழங்கு. மாலை நேரத்தில் ஸ்நாக்ஸ் விரும்பி சாப்பிடும் குழந்தைகளே இன்று அதிகம். உருளைக்கிழங்கினை வைத்து பல வெரைட்டியான டிஷ்கள் நம்முடைய பொதுநலம்.காம்-ல் பதிவு செய்துள்ளோம். வீட்டில் இருக்கக்கூடிய குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு இந்த டேஸ்டான உருளைக்கிழங்கு மசாலா போளியை செய்த்து கொடுத்து அசத்துங்கள். சரி இப்போது உருளைக்கிழங்கு மசாலா போளி எப்படி சுவையாக செய்யலாம், அதற்கு தேவையான பொருள் என்னென்ன வேண்டும் என்று பார்க்கலாம் வாங்க..!
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி..! |
உருளைக்கிழங்கு மசாலா போளி – தேவையான பொருள்:
- உருளைக்கிழங்கு – 4
- கடலை பருப்பு – ஒரு மேஜைக்கரண்டி
- உளுத்தம் பருப்பு – ஒரு மேஜைக்கரண்டி
- முந்திரி பருப்பு – 8
- மைதா மாவு – 2 கப்
- பச்சை மிளகாய் – 1
- கறிவேப்பில்லை / கொத்தமல்லி – சிறிதளவு
- கடுகு – ஒரு டீஸ்பூன்
- மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
- நல்லெண்ணெய் – இரண்டு மேஜைக்கரண்டி
- நெய் – தேவையான அளவு
செய்முறை:
ஸ்டேப் 1: முதலில் உருளைக்கிழங்கை நன்றாக வேக வைத்து மசித்துக்கொள்ளவும்.
ஸ்டேப் 2: அடுத்ததாக பச்சை மிளகாய் கொத்தமல்லி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஸ்டேப் 3: அடுத்து கடாயில் எண்ணெய் ஊற்றி நன்றாக சூடானதும் நறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லியை சேர்த்து நன்கு வதக்கவும்.
ஸ்டேப் 4: வதக்கிய பிறகு அதிலேயே மசித்த உருளைக்கிழங்கு, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கலந்து வைத்து கொள்ளவும்.
சுவையான உருளைக்கிழங்கு கட்லெட் செய்வது எப்படி? |
ஸ்டேப் 5: பிறகு தனியாக ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, உப்பு, எண்ணெய் சிறிதளவு, தண்ணீர் சேர்த்து நன்றாக சப்பாத்தி மாவு போன்று பிசைந்து வைத்து கொள்ளவும். பிசைந்த மாவினை மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.
ஸ்டேப் 6: அடுத்து உருட்டி வைத்துள்ள ஒரு உருண்டை மாவை எடுத்து அதை வாழை இலையில் வைத்து தட்டி நடுவில் செய்து வைத்துள்ள உருளைக்கிழங்கு பூரணத்தினை வைத்து மூடி மறுபடியும் மெல்லிசாக தட்டிக்கொள்ளவும்.
ஸ்டேப் 7: அடுத்ததாக அடுப்பில் தோசை கல்லை வைத்து நன்றாக சூடான பிறகு தட்டி வைத்த போளியை போட்டு சுற்றி நெய் ஊற்றி நன்றாக வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும். மாலை நேரத்தில் சாப்பிடக்கூடிய சுவையான போளி ரெடி. நீங்களும் வீட்டில் ட்ரை பண்ணி பாருங்க..!
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | samayal kurippugal |